கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, January 02, 2023

மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 8 தமிழ் இயல் 9 கவிதைப்பேழை model notes of lesson

 

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

09-01-2023 முதல் 13-01-2023

2.பாடம்

தமிழ்

3.அலகு

9

4.பாடத்தலைப்பு

குன்றென நிமிர்ந்துநில் - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

உயிர்க்குணங்கள், இளைய தோழனுக்கு

6.பக்கஎண்

192 - 197

7.கற்றல் விளைவுகள்

T-809 படித்தனவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்,

8.திறன்கள்

பாவை நூலின்வழி மனிதர்களின் இயல்பை அறியும் திறன்.

தன்னம்பிக்கையின் இன்றியமையாமையைப் புதுக்கவிதை வழியாக உணரும் திறன்.

9.நுண்திறன்கள்

நற்பண்புகள் குறித்து அறியும் திறன்.

நம்பிக்கை தரும் புதுக்கவிதை குறித்து அறியும் திறன்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/02/9-uyirkunankal-8th-tamil-kuruvina.html

https://tamilthugal.blogspot.com/2023/01/9-8th-tamil-mindmap-unit-9.html

https://tamilthugal.blogspot.com/2021/03/9-ilaiya-tholanukku-8th-tamil-kuruvina.html

https://tamilthugal.blogspot.com/2020/02/ilaya-thozhanukku.html

https://tamilthugal.blogspot.com/2023/01/9-8th-tamil-mindmap-unit-9_2.html

 11.ஆயத்தப்படுத்துதல்

நற்குணம் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

தன்னம்பிக்கை குறித்துக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

ஆண்டாள் திருப்பாவையை அறிமுகப்படுத்துதல்.

மு.மேத்தாவை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஆசிரியர் உயிர்க்குணங்கள் பாடலை வாசித்துப் பொருள் கூறுதல், மாணவர்களும் பாடலை வாசித்தல். நற்பண்புகள் குறித்து விளக்குதல். மாணவர்கள் அறிந்த தன்னம்பிக்கை குறித்துக் கூறச்செய்தல். புதுக்கவிதை பற்றி மாணவர்களைக் கூறச்செய்தல். மாணவர்கள் அறிந்த கவிதைகளைக் கூறச்செய்தல். தன்னம்பிக்கை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்.




மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

மு.மேத்தா குறித்துக் கூறுதல். திருமால் வழிபாடு, தன்னம்பிக்கை குறித்துக் கூறுதல்.

15.மதிப்பீடு

          LOT – மையல் என்பதன் பொருள் ..............................

                   இகல் என்பதன் பொருள் .....................................

          MOT – தோல்வி எப்போது தூண்டுகோலாகும்?

                   மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவை நூல் கூறுவது யாது?

          HOT – மனிதர்களின் நற்பண்புகளைப் பட்டியலிடுக.

                   நம்பிக்கை போன்ற பிற பண்புகளை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நம்பிக்கை எனும் தலைப்பில் ஒரு கவிதை எழுதுக.

திருப்பாவை குறித்து இணையம் மூலம் அறிதல்.


மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் பருவம் 3 இயல் 1 உரைநடை உலகம் model notes of lesson

 

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

09-01-2023 முதல் 13-01-2023

2.பருவம்

3

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

நயத்தகு நாகரிகம் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

6.பக்கஎண்

7 - 11

7.கற்றல் விளைவுகள்

T-705 தாங்கள் வாழும் சமூகம் அல்லது நிலப்பகுதிகள், நாட்டுப்புற இலக்கியங்கள் பாடல்கள் பற்றிக் கலந்துரையாடி அவற்றின் நயம் பாராட்டுதல்.

8.திறன்கள்

கருத்துகளைத் தொகுத்துக் கடிதம் எழுதும் திறன் பெறுதல்.

திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றையும் சிறப்புகளையும் அறிந்து கொள்ளுதல்.

9.நுண்திறன்கள்

திருநெல்வேலி நகரச் சிறப்புகள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/01/7th-tamil-kuruvina.html

https://tamilthugal.blogspot.com/2023/01/3-1-7th-tamil-mindmap-term-3-unit-1.html

11.ஆயத்தப்படுத்துதல்

பிடித்த நகரங்களைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த திருநெல்வேலி நகரம் குறித்த தகவல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

திருநெல்வேலி பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          திருநெல்வேலி நகரச் சிறப்பை விளக்குதல். ஆறுகள் குறித்து அறிதல். தொழில்கள், பழமை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். கடிதத்தின் வடிவமைப்பு அறிதல். கவிஞர்களின் தகவல்கள் அறிதல்.

          திருநெல்வேலி மாவட்டச் சுற்றுலா இடங்கள் குறித்துப் பேசுதல். கடிதம் குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல்.


          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

திருநெல்வேலி பெயர்க்காரணம், ஆதிச்சநல்லூர் கல்வெட்டு, அகழாய்வு குறித்து விளக்குதல்.

15.மதிப்பீடு

          LOT – திருநெல்வேலி .............................. ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

          MOT – தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?

                   கொற்கை முத்து பற்றி எழுதுக.

HOT – மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உங்கள் மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்களின் பெயர்களை எழுதுக.

திருநெல்வேலி குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.


மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 6 தமிழ் பருவம் 3 இயல் 1 உரைநடை உலகம் model notes of lesson

 

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

09-01-2023 முதல் 13-01-2023

2.பருவம்

3

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

புதுமைகள் செய்யும் தேசமிது – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

தமிழ்நாட்டில் காந்தி

6.பக்கஎண்

5 - 8

7.கற்றல் விளைவுகள்

T-614 புதிய சொற்களைத் தெரிந்துகொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்தல், அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள முயலுதல்.

8.திறன்கள்

வாழ்வில் எளிமையின் சிறப்பை உணரும் திறன்.

சமூக மாற்றத்தில் காந்தியின் பங்கினைத் தெரிந்துகொள்ளும் திறன்.

9.நுண்திறன்கள்

தமிழ்மொழிமீது காந்தியடிகள் கொண்ட பற்று குறித்து அறியும் திறன்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/01/3-1-6th-tamil-mindmap-term-3-unit-1.html

https://tamilthugal.blogspot.com/2019/01/6-tamilnattil-gandhi.html

https://tamilthugal.blogspot.com/2021/01/6th-tamil-kuru-vina-vidai-tamilnattil.html

11.ஆயத்தப்படுத்துதல்

தேசத்தலைவர்கள் குறித்துக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த விடுதலைப் போராட்ட வீரர்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தமிழ்மொழியின் பெருமையைக் கூறுதல்.

காந்தி பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தமிழ்நாட்டில் காந்தியடிகளின் நிகழ்வுகள் குறித்துக் கூறுதல். தீண்டாமை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

          எளிமை, இலக்கிய மாநாடு குறித்து விளக்குதல்.

          பாரதியார் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். தமிழர் குறித்தும் தமிழ் குறித்தும் மாணவர்களின் தகவல்களைக் கேட்டல்.


          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

தமிழரின் பெருமையை மாணவர்களிடம் உணர்த்துதல். காந்தி பற்றி அறியச் செய்தல். மதுரை குறித்து அறிதல்.

15.மதிப்பீடு

          LOT – காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் ...........................

          MOT – காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக.

                   காந்தியடிகளைக் கவர்ந்த நூல் எது?

          HOT – காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகளை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

மதுரை குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.

காந்தி குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 3 இளைய தோழனுக்கு மனவரைபடம் 6th tamil mindmap unit 3

 




எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 9 உயிர்க்குணங்கள் மனவரைபடம் 8th tamil mindmap unit 9

 


ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 1 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி மனவரைபடம் 7th tamil mindmap term 3 unit 1

 


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 1 தமிழ்நாட்டில் காந்தி மனவரைபடம் 6th tamil mindmap term 3 unit 1

 


10ஆம் வகுப்பு தமிழ் ஆயத்தத் தேர்வு 1 வினாத்தாள் விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் 10th tamil answer

பத்தாம் வகுப்பு தமிழ் ஆயத்தத் தேர்வு 1 விருதுநகர் மாவட்டம் விடைக்குறிப்பு 10th tamil preparatory exam 1 key answer

விருதுநகர் மாவட்டப் பொதுத்தேர்வுகள்

பத்தாம் வகுப்பு தமிழ்

ஆயத்தத்தேர்வு 1 சனவரி 2023

விடைக்குறிப்பு

I                                                                                                         8x1=8

1.     ஈ.பாடல், கேட்டவர்

2.    ஆ. மோனை, எதுகை

3.   அ.சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

4.    இ.காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

5.    இ.பெருங்காற்று

6.   அ.3,4,1,2

7.    அ.மாசி, பங்குனி

8.   இ.105

II                                                                                                        2x2=4

9.   சீவகசிந்தாமணி, ·    வளையாபதி,·           குண்டலகேசி

10.  விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்று இல்லை. 

விருந்தோம்பலுக்கு மனம் மட்டும் இருந்தால் போதும்.

தம்மிடம் உள்ளது கொண்டு அகம் மகிழ்ந்து அளித்தலே சிறந்த விருந்தோம்பலாகும்    

கட்டாய வினா

11.   பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்

III                                                                                                       3x2=6

12.  தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்.

அவை

வேற்றுமைத் தொகை

வினைத்தொகை

பண்புத்தொகை

உவமைத்தொகை

உம்மைத்தொகை

அன்மொழித்தொகை.

13. ‘சிரித்துச் சிரித்துப் பேசினார்’

14.  வைத்துக் கொள் என்று பூமிக் கோள் மாதிரியைத் தந்தாள்.

15.  எழுகதிர் - வினைத்தொகை - நேற்று எழுந்த கதிர் இன்று எழுகின்ற கதிர் நாளை எழும்கதிர் நமக்கு நம்பிக்கையைத் தருகிறது.

முத்துப்பல் - உவமைத்தொகை - சிறுமி முத்துப் போன்ற பல் வரிசை தெரிய சிரித்தாள்.

IV                                                                                                       3x3=9

16. எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள்! சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்! மூங்கில்கள் ஓசைகள் எழுப்பும் கடினப் பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்! மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

அதன் பிறகு உங்கள் வீட்டுக்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள்!

அவர்கள் இன்சொல் கூறி, அங்கே நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் சோற்றையும் உணவாகத் தருவார்கள்.

உறவினர் போல உங்களுடன் பழகுவார்கள்", என்று கூறி கூத்தனைக் கூத்தன் ஆற்றுப் படுத்துவதாக பெருங்கௌசிகனார் தம் மலைபடுகடாம் நூலில் குறிப்பிட்டுள்ளார்

17.  பொருள்கோள் வகை – ஆற்றுநீர்ப் பொருள்கோள்

மேற்கண்ட குறட்பாவில் முயற்சி செல்வத்தை உண்டாக்கும், முயற்சியின்மை வறுமைக்குள் தள்ளிவிடும் என்று நேரிடையாக ஆற்றின் நீரோட்டத்தைப்போல் பொருள் கொள்ள முடிகிறது.

எனவே, இவ்வாறு வருவது ஆற்றுநீர்ப் பொருள்கோளாகும்.

 

18. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

கட்டாய வினா

 

19. வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்

பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்.  - கம்பர்.

V                                                                                                        3x5=15

20.முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகள்

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்டது. நப்பூதனாரின் வரிகள் கார்காலச் செய்திகளைக் கவி மழையாய்ப் பொழிந்துள்ளன.

நிமிர்ந்த மாஅல் போல

வலம்புரிச் சங்கு பொறித்த கைகளையுடைய திருமால் குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்போது மண்ணுக்கும் விண்ணுக்கும் கொண்ட பேருருவமாய் உயர்ந்து நின்றது மழை மேகம்.

கடலின் குளிர் நீரைப் பருகி பெருந்தோற்றம் கொண்டு வளமாய் எழுந்து மலையைச் சூழ்ந்து வேகத்துடன் பெருமழை பொழிகிறது.

விரிச்சி

ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள் ஆரவாரமற்ற ஊர்ப் பக்கம் சென்று தெய்வம் தொழுது ஊரார் சொல் கேட்பர்.

தலைவிக்கு நற்சொல் கேட்கும் பொருட்டுச் சென்றபோது பெண்கள் மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் தெய்வத்தின் முன் தூவி நின்றனர்.

நற்சொல் கேட்டல்

"வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓடிவர, உன் தாய்மார் வருவர்; உன் துயரம் தீரும் வருந்தாதே!" என்று பசியால் வாடிய இளங்கன்றுக்கு இடை மகள் நற்சொல் கூறினார்.

"நின் தலைவன் பகைவரை வென்று திறைப் பொருளோடு வருவது உறுதி. மனத்தடுமாற்றம் கொள்ளாதே தலைவியே!", என ஆற்றுப்படுத்தினர் முது பெண்டிர்.

அல்லது

ஆ.

பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி.

கடல்கொண்ட குமரிக்கண்டத்தில் நிலைத்து நின்று அரசாண்ட மண்ணுலகப் பேரரசு.

தென்னவனாம் பாண்டிய மன்னனின் மகள்.

உலகப்பொதுமறையாம் திருக்குறளின் பெரும் பெருமை.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என விரிந்தமை.

நிலைத்த சிலப்பதிகாரமாய், அழகிய மணிமேகலையாய்ச் சிறப்புப் பெற்று விளங்குவது.

பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகிறார் பாவலரேறு.

21.  பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

22.அ. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

அல்லது

ஆ. பொன்னிறச் சூரியன் அதிகாலையிலேயே எழுந்து ஒளிமிக்க கதிர்களால் இருளை மங்கச் செய்கிறது. பால்போன்ற வெண்மேகங்கள் அலைகளாகத் தவழ்கின்றன. வண்ணமயமான பறவைகள் தங்களது காலைப்பொழுதை இசை, தாளத்துடன் தொடங்குகின்றன. அழகான பட்டாம்பூச்சிகள் மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. பூக்களின் மணம் தென்றலை நிரப்புகின்றன. காற்று மெதுவாக எல்லா இடங்களிலும் வீசி எங்கும் இனிமையான நறுமணம் பரப்பும்.

VI                                                                                                       1x8=8

23.                அ, ஆ. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

 


பத்தாம் வகுப்பு தமிழ் ஆயத்தத் தேர்வு 1 விருதுநகர் மாவட்டம் வினாத்தாள் pdf 10th tamil preparatory exam 1

 பதிவிறக்கு/DOWNLOAD

தமிழ்த்துகள்

Blog Archive