கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, January 02, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் ஆயத்தத் தேர்வு 1 விருதுநகர் மாவட்டம் விடைக்குறிப்பு 10th tamil preparatory exam 1 key answer

விருதுநகர் மாவட்டப் பொதுத்தேர்வுகள்

பத்தாம் வகுப்பு தமிழ்

ஆயத்தத்தேர்வு 1 சனவரி 2023

விடைக்குறிப்பு

I                                                                                                         8x1=8

1.     ஈ.பாடல், கேட்டவர்

2.    ஆ. மோனை, எதுகை

3.   அ.சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

4.    இ.காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

5.    இ.பெருங்காற்று

6.   அ.3,4,1,2

7.    அ.மாசி, பங்குனி

8.   இ.105

II                                                                                                        2x2=4

9.   சீவகசிந்தாமணி, ·    வளையாபதி,·           குண்டலகேசி

10.  விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்று இல்லை. 

விருந்தோம்பலுக்கு மனம் மட்டும் இருந்தால் போதும்.

தம்மிடம் உள்ளது கொண்டு அகம் மகிழ்ந்து அளித்தலே சிறந்த விருந்தோம்பலாகும்    

கட்டாய வினா

11.   பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்

III                                                                                                       3x2=6

12.  தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்.

அவை

வேற்றுமைத் தொகை

வினைத்தொகை

பண்புத்தொகை

உவமைத்தொகை

உம்மைத்தொகை

அன்மொழித்தொகை.

13. ‘சிரித்துச் சிரித்துப் பேசினார்’

14.  வைத்துக் கொள் என்று பூமிக் கோள் மாதிரியைத் தந்தாள்.

15.  எழுகதிர் - வினைத்தொகை - நேற்று எழுந்த கதிர் இன்று எழுகின்ற கதிர் நாளை எழும்கதிர் நமக்கு நம்பிக்கையைத் தருகிறது.

முத்துப்பல் - உவமைத்தொகை - சிறுமி முத்துப் போன்ற பல் வரிசை தெரிய சிரித்தாள்.

IV                                                                                                       3x3=9

16. எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள்! சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்! மூங்கில்கள் ஓசைகள் எழுப்பும் கடினப் பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்! மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

அதன் பிறகு உங்கள் வீட்டுக்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள்!

அவர்கள் இன்சொல் கூறி, அங்கே நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் சோற்றையும் உணவாகத் தருவார்கள்.

உறவினர் போல உங்களுடன் பழகுவார்கள்", என்று கூறி கூத்தனைக் கூத்தன் ஆற்றுப் படுத்துவதாக பெருங்கௌசிகனார் தம் மலைபடுகடாம் நூலில் குறிப்பிட்டுள்ளார்

17.  பொருள்கோள் வகை – ஆற்றுநீர்ப் பொருள்கோள்

மேற்கண்ட குறட்பாவில் முயற்சி செல்வத்தை உண்டாக்கும், முயற்சியின்மை வறுமைக்குள் தள்ளிவிடும் என்று நேரிடையாக ஆற்றின் நீரோட்டத்தைப்போல் பொருள் கொள்ள முடிகிறது.

எனவே, இவ்வாறு வருவது ஆற்றுநீர்ப் பொருள்கோளாகும்.

 

18. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

கட்டாய வினா

 

19. வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்

பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்.  - கம்பர்.

V                                                                                                        3x5=15

20.முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகள்

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்டது. நப்பூதனாரின் வரிகள் கார்காலச் செய்திகளைக் கவி மழையாய்ப் பொழிந்துள்ளன.

நிமிர்ந்த மாஅல் போல

வலம்புரிச் சங்கு பொறித்த கைகளையுடைய திருமால் குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்போது மண்ணுக்கும் விண்ணுக்கும் கொண்ட பேருருவமாய் உயர்ந்து நின்றது மழை மேகம்.

கடலின் குளிர் நீரைப் பருகி பெருந்தோற்றம் கொண்டு வளமாய் எழுந்து மலையைச் சூழ்ந்து வேகத்துடன் பெருமழை பொழிகிறது.

விரிச்சி

ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள் ஆரவாரமற்ற ஊர்ப் பக்கம் சென்று தெய்வம் தொழுது ஊரார் சொல் கேட்பர்.

தலைவிக்கு நற்சொல் கேட்கும் பொருட்டுச் சென்றபோது பெண்கள் மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் தெய்வத்தின் முன் தூவி நின்றனர்.

நற்சொல் கேட்டல்

"வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓடிவர, உன் தாய்மார் வருவர்; உன் துயரம் தீரும் வருந்தாதே!" என்று பசியால் வாடிய இளங்கன்றுக்கு இடை மகள் நற்சொல் கூறினார்.

"நின் தலைவன் பகைவரை வென்று திறைப் பொருளோடு வருவது உறுதி. மனத்தடுமாற்றம் கொள்ளாதே தலைவியே!", என ஆற்றுப்படுத்தினர் முது பெண்டிர்.

அல்லது

ஆ.

பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி.

கடல்கொண்ட குமரிக்கண்டத்தில் நிலைத்து நின்று அரசாண்ட மண்ணுலகப் பேரரசு.

தென்னவனாம் பாண்டிய மன்னனின் மகள்.

உலகப்பொதுமறையாம் திருக்குறளின் பெரும் பெருமை.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என விரிந்தமை.

நிலைத்த சிலப்பதிகாரமாய், அழகிய மணிமேகலையாய்ச் சிறப்புப் பெற்று விளங்குவது.

பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகிறார் பாவலரேறு.

21.  பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

22.அ. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

அல்லது

ஆ. பொன்னிறச் சூரியன் அதிகாலையிலேயே எழுந்து ஒளிமிக்க கதிர்களால் இருளை மங்கச் செய்கிறது. பால்போன்ற வெண்மேகங்கள் அலைகளாகத் தவழ்கின்றன. வண்ணமயமான பறவைகள் தங்களது காலைப்பொழுதை இசை, தாளத்துடன் தொடங்குகின்றன. அழகான பட்டாம்பூச்சிகள் மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. பூக்களின் மணம் தென்றலை நிரப்புகின்றன. காற்று மெதுவாக எல்லா இடங்களிலும் வீசி எங்கும் இனிமையான நறுமணம் பரப்பும்.

VI                                                                                                       1x8=8

23.                அ, ஆ. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

 


தமிழ்த்துகள்

Blog Archive