9th tamil model notes of lesson
lesson plan March 16
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
16-03-2026 முதல் 20-03-2026
2.அலகு
1 - 7
3.பாடத்தலைப்பு
7 இயல்கள்
முழு ஆண்டுத்
தேர்வுக்குத் தயார் செய்தல்.
மாதிரி வினாத்தாள்கள்
https://tamilthugal.blogspot.com/2026/02/2026-9-1.html
https://tamilthugal.blogspot.com/2026/02/2026-9-2.html
https://tamilthugal.blogspot.com/2026/02/2026-9-3.html
4.திருப்புதல்
வினாக்கள்
விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.
அ. இந்தியாவின் தொன்மையான
கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.
ஆ. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர்
ஜான் பென்னி குவிக்.
"கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன், கலந்து பேசின பேச்சரவம்
கேட்டிலையோ" இடஞ்சுட்டிப் பொருள் தருக.
நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக்
குடும்பத்தைச் சேர்ந்தது?
கனவிலும் கூட இன்னாதது எவர் நட்பு?
உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள
நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
எனைத்தானும் – எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
அளபெடை
எத்தனை வகைப்படும்? அவை யாவை?
அடைப்புக்குள் உள்ள சொற்களைப்
பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.
1. உலகில் மூவாயிரம் மொழிகள் ..................................
(பேசு)
2. தவறுகளைத் ............................
(திருத்து)
ஏறு தழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம்
பிணைந்திருந்தது?
சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப்
பயன்படுத்தப்பட்டது?
அ. தித்திக்கும் முதல் மண்ணில் முடிய தமிழ்விடு தூது மனப்பாடப் பாடல்
ஆ. காடெல்லாம் எனத்தொடங்கும் பெரிய புராணம் மனப்பாடப் பாடல்
அளவையாகுபெயர்களின் வகைகளை விளக்குக.
ஒற்றளபெடையை விளக்குக.
சொற்பொருள் பின்வருநிலையணி - விளக்குக.
பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத்
தொகுத்து எழுதுக.
கேள்வி
அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் கருத்துகளை எழுதுக.
உங்களின்
நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய
“கால்முளைத்த கதைகள்” (ஆசிரியர் எஸ்.இராமகிருஷ்ணன்) என்னும் நூல் குறித்த
கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
பள்ளி நேரம் முடிவதற்கு முன்பு
வீட்டிற்குச் செல்ல அனுமதி வேண்டி விண்ணப்பம் எழுதுக.
அன்பு
என்பவர் அழகாபுரியில் உள்ள அஞ்சலகத்தில் தன் கணக்கில் இருந்து ₹10000 பணம்
பெற விரும்புகிறார். தேர்வர் தன்னை அன்பாக எண்ணி படிவத்தை நிரப்பவும்.
ஆ உங்களுடைய நாள்குறிப்பில்
இடம்பெற்ற ஒரு வாரத்திற்குரிய மகிழ்ச்சியான செய்திகளைத் தொகுத்து
அட்டவணைப்படுத்துக.
வேளாண்மை, நீரை அடிப்படையாகக் கொண்டது
என்பதை விளக்குக.
பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப்
பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.
புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும்
புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க.
உங்கள்
பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள்
விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வடிவமைக்க.
