தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Friday, January 27, 2023
Thursday, January 26, 2023
தொன்னூறா, தொண்ணூறா? எது சரி? - எளிய விளக்கம் 90 correct tamil spelling
கரியில் தொடங்கி உமியில் முடியும் காளமேகப் புலவரின் பாடல்
ஆசுகவி புலவர் காளமேகம் எந்தச் சொல் கொடுத்துப் பாடல் பாடச் சொன்னாலும் உடனடியாகப் பாடுவார்.
ஒருமுறை அவரை ஏளனம் செய்ய நினைத்த பெண் ஒருவர் "கரி " என்று தொடங்கி "உமி " எனும் ஈற்றில் (முடிவுறும் சொல் ) பாடல் ஒன்றைப் பாடும்படியாகக் கேட்டுக்கொண்டார்.
உமி கரியாக மாறும் - கரி உமியாக மாறுமா ?
புலவர் காளமேகம்
அடுத்த நொடியில் - பாடிய பாடல் இதோ:
"கரிக்காய் பொரித்தாள் கன்னிக்கா யைத்தீய்த்தாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் _உருக்கமுள்ள
அப்பைக்காய் நெய்துவட்ட லாக்கினாள் அத்தைமகள்
உப்புக்காண் சீச்சீ யுமி "
தெளிவுரை :
அத்தை மகள்,அத்திக்காயைப் பொரியல் செய்து -
ஆசையாய் வாழைக்காயை நன்கு வதக்கி வைத்து
இளம்பிஞ்சு மாங்காயை பக்குவமாய் தயிர் விட்டு
ஈரமான பச்சடியை ஆசையாய் செய்து வைத்து-
உருண்ட கத்தரிக்காயை நெய்விட்டுத் துவட்டி -
ஊண் தின்னச்சொன்னாள், ஆசை மிகுதியினால்
எக்கச்சக்கமாய் உப்பு போட்டுவிட்டதினால், நான்
ஏமாந்து நின்று சீச்சியென உமிழ்ந்தேன்.
Wednesday, January 25, 2023
Tuesday, January 24, 2023
Monday, January 23, 2023
Sunday, January 22, 2023
10ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 10th model notes of lesson tamil மார்ச் 27
வகுப்பு 10
1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப்
பாவலரேறு சுட்டுவன யாவை?
2. தமிழழகனார் தமிழையும் கடலையும்
இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
3. சோலைக்(பூங்கா) காற்றும் மின்விசிறிக்
காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க. தமிழ்த்துகள்
4. மழைநின்றவுடன் புலப்படும் காட்சியை
வருணித்து எழுதுக. குறிப்பு
: இலைகளில் சொட்டும் நீர் – உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில்
சளப் தளப் என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்.
5. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலை கூத்தராற்றுப்படை
எவ்வாறு காட்டுகிறது?
6.
வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு
நின்றான் இரவு
- குறளில்
பயின்று வரும் அணியை விளக்குக. தமிழ்த்துகள்
7. மாளாத காதல் நோயாளன் போல் என்னும்
தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
8. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச்
சிறப்புச் செய்தது ஏன்?
விளக்கம் தருக. தமிழ்த்துகள்
9. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்
படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன்
இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
10. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக
அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
11. நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில்
வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.
12. வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும்
பொருந்துவதைக் குறள் வழி விளக்குக. தமிழ்த்துகள்
13. பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால்
முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல
உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும்
நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
14. முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம்
நிகழ்வதாக கு.ப.ரா. கவி பாடுகிறார்?
15. பகர்வனர்
திரிதிரு நகரவீதியும்
பட்டினும்
மயிரினும் பருத்தி நூலினும் தமிழ்த்துகள்
கட்டு
நுண்வினைக் காருகர் இருக்கையும்
தூசும்
துகிரும் ஆரமும் அகிலும்
அ. இவ்வடிகள்
இடம்பெற்ற நூல் எது? தமிழ்த்துகள்
ஆ. பாடலில்
அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
இ. எதுகைச்
சொற்களை அடிக்கோடிடுக.
ஈ. காருகர்
- பொருள் தருக.
உ. இப்பாடலில்
காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
16. பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை
எழுதுக. தமிழ்த்துகள் பேரரசனது மெய்ப் புகழை எடுத்துக்
கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில்
அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக
அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக்கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு
வாழ்க எனக்கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக்
குறிப்பிடும். தமிழ்த்துகள் சோழ மன்னர் பரம்பரையில்
மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல்
இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிச
பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை,
ஏனைய பகுதிகள் உள்ளன. எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது.
இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக்
கூறியுள்ளன. தமிழ்த்துகள்
17. வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத்
துணி, கட்டைத் தூரிகை இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி
அமைக்க.
18. "சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள்
அறியாது" - இடஞ்சுட்டிப் பொருள்
தருக.
19. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன்
கூறுகிறார்?
அடிபிறழாமல்
எழுதுக. தமிழ்த்துகள்
20. அன்னை
மொழியே... முதல் பேரரசு முடிய கனிச்சாறு பாடல்.
21. தென்னன்... முதல் வாழ்த்துவமே முடிய
கனிச்சாறு பாடல்.
22. சிறுதாம்பு...
எனத்தொடங்கும் முல்லைப்பாட்டு பாடல்.
23. விருந்தினனாக...
எனத் தொடங்கும் காசிக்காண்டம் பாடல்.
24. வாளால்...
எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி பாடல். தமிழ்த்துகள்
25. அருளை...
எனத் தொடங்கும் நீதிவெண்பா பாடல்.
26. புண்ணிய...
எனத் தொடங்கும் திருவிளையாடற்புராணம் பாடல்.
27. செம்பொனடி...
எனத் தொடங்கும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடல்.
28. தண்டலை...
எனத் தொடங்கும் கம்பராமாயணப்பாடல்.
29. வெய்யோன்...
எனத் தொடங்கும் கம்பராமாயணப்பாடல். தமிழ்த்துகள்
30. தூசும்...
எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்.
31. மாற்றம்...
முதல் பாத்திரம் முடிய காலக்கணிதம் பாடல்.
32. தலைவர் மாறுவர்... முதல் சட்டம் முடிய
காலக்கணிதம் பாடல்.
33. நவமணி... எனத் தொடங்கும் தேம்பாவணி பாடல்.
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 2 பருவம் 3 கவிதைப்பேழை tamil model notes of lesson 6th unit 2 term 3
ஆறாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
30-01-2023 முதல் 03-02-2023
2.பருவம்
3
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
எல்லாரும்
இன்புற – கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
பராபரக்கண்ணி,
நீங்கள் நல்லவர்
6.பக்கஎண்
20 - 23
7.கற்றல் விளைவுகள்
T-612 பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய
ஒலிப்புமுறை, குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்.
8.திறன்கள்
எல்லா
உயிர்களிடத்தும் அன்பு செய்தல், பிறருக்கு உதவி செய்தல் போன்ற அறச்சிந்தனைகளை
அறியும் திறன்.
வாழும் முறைகளை
அறியும் திறன்.
9.நுண்திறன்கள்
அறஇலக்கியங்கள்
கூறும் கருத்துகள் குறித்து அறிதல்.
அயல்நாட்டுக்
கவிஞரின் சிந்தனைகளை அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2.html
https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2_22.html
https://tamilthugal.blogspot.com/2019/01/6-3-qr-code-video_62.html
https://tamilthugal.blogspot.com/2019/01/6-3-2.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-2-6th-tamil-paraparakanni.html
https://tamilthugal.blogspot.com/2020/02/paraabarakkanni.html
https://tamilthugal.blogspot.com/2019/01/6-3-qr-code-video_9.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-2-neengal-nallavar-6th-tamil-kuruvina.html
11.ஆயத்தப்படுத்துதல்
வாழ்வியல்
ஒழுக்கம் பற்றிக் கூறச்செய்தல்.
மொழிபெயர்ப்பு
குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.
12.அறிமுகம்
தாயுமானவர்,
கலீல் கிப்ரான் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல்
கற்பித்தல் செயல்பாடுகள்
வாழ்வியல் நெறிகளையும் ஒழுக்கங்களையும் குறித்து மாணவர்களுடன்
கலந்துரையாடுதல். பாடலின் சொற்களுக்கு அகராதி பார்த்துப் பொருள் அறிவது குறித்து
விளக்குதல். தாயுமானவரின் வரிகளுக்குப் பொருள் கூறுதல்.
மொழிபெயர்ப்பு குறித்து
மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். பாடல்களை விளக்குதல். வாழ்வைச்
செம்மைப்படுத்தும் அயல்நாட்டவர் சிந்தனை குறித்து அறியச் செய்தல். குறிக்கோளின்
இன்றியமையாமை குறித்து விளக்குதல்.
மனவரைபடம் மூலம்
பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
பிறமொழி இலக்கியச் சிந்தனைகள் குறித்து விளக்குதல். பல்வேறு
அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.
15.மதிப்பீடு
LOT – சுயம் என்பதன் பொருள் ...............................
MOT
– பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவதை விளக்குக.
HOT – குளிரால் வாடுபவர்களுக்கு உதவுதல் பற்றி எழுதுக.
நல்லவர் என்னும் பெயர் பெற
நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
பிறர் மகிழும்படி நீ செய்த நிகழ்வுகளைக் கூறு.
உன்னுடைய நிறைகுறைகளைப் பட்டியலிடுக.
தமிழ்த்துகள்
-
தமிழ்த்துகள் அடிப்படைத் தமிழ் இலக்கணம் போட்டித் தேர்வுப் பயிற்சி செ.பாலமுருகன், தமிழாசிரி...
-
TET TRB TNPSC TAMIL 6th term 1 unit 1 material TET TRB TNPSC TAMIL 6th term 1 unit 1 study material book inside one word important notes...
-
*தேர்தல் பணிக்குச் செல்பவர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள்.* *PRO duty* *1-Pro dairy* *2-form17c.* *3- 16 points abserv...
-
தமிழ்த்துகள் வேற்றுமை இலக்கணம் வினாக்களும் விளக்கங்களும் செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரு...
Blog Archive
-
▼
2026
(858)
-
▼
May
(26)
- TNPSC பொது அறிவு 5 வினாடிவினா 20 வினாக்கள் GK Quiz...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் notes 8...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் முக்கிய...
- TET TRB TNPSC ENGLISH GRAMMAR Active & Passive Voi...
- TET TRB TNPSC ENGLISH GRAMMAR Sentence Pattern FRE...
- TET TRB TNPSC ENGLISH GRAMMAR Punctuation FREE ONL...
- TET TRB TNPSC ENGLISH GRAMMAR Parts of Speech FREE...
- TET TRB TNPSC ENGLISH GRAMMAR Articles FREE ONLINE...
- TET TRB TNPSC ENGLISH GRAMMAR Degrees of Compariso...
- TET TRB TNPSC ENGLISH GRAMMAR TENSE FREE ONLINE QU...
- TNPSC பொது அறிவு 4 வினாடிவினா 20 வினாக்கள் GK Quiz...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் notes 8...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் முக்கிய...
- TNPSC பொது அறிவு 3 வினாடிவினா 20 வினாக்கள் GK Quiz...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 ஒரு மதிப்பெண் notes 8...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 ஒரு மதிப்பெண் முக்கிய...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 ஒரு மதிப்பெண் notes 8...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 ஒரு மதிப்பெண் முக்கிய...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 2 ஒரு மதிப்பெண் notes 8...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 2 ஒரு மதிப்பெண் முக்கிய...
- TNPSC பொது அறிவு 2 வினாடிவினா 20 வினாக்கள் GK Quiz...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் notes 8...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் முக்கிய...
- TNPSC பொது அறிவு 1 வினாடிவினா 20 வினாக்கள் GK Quiz...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 3 குறிப்புகள் TE...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 3 முக்கியக் குறி...
-
▼
May
(26)



