ஆறாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
30-01-2023 முதல் 03-02-2023
2.பருவம்
3
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
எல்லாரும்
இன்புற – கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
பராபரக்கண்ணி,
நீங்கள் நல்லவர்
6.பக்கஎண்
20 - 23
7.கற்றல் விளைவுகள்
T-612 பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய
ஒலிப்புமுறை, குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்.
8.திறன்கள்
எல்லா
உயிர்களிடத்தும் அன்பு செய்தல், பிறருக்கு உதவி செய்தல் போன்ற அறச்சிந்தனைகளை
அறியும் திறன்.
வாழும் முறைகளை
அறியும் திறன்.
9.நுண்திறன்கள்
அறஇலக்கியங்கள்
கூறும் கருத்துகள் குறித்து அறிதல்.
அயல்நாட்டுக்
கவிஞரின் சிந்தனைகளை அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2.html
https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2_22.html
https://tamilthugal.blogspot.com/2019/01/6-3-qr-code-video_62.html
https://tamilthugal.blogspot.com/2019/01/6-3-2.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-2-6th-tamil-paraparakanni.html
https://tamilthugal.blogspot.com/2020/02/paraabarakkanni.html
https://tamilthugal.blogspot.com/2019/01/6-3-qr-code-video_9.html
https://tamilthugal.blogspot.com/2021/01/3-2-neengal-nallavar-6th-tamil-kuruvina.html
11.ஆயத்தப்படுத்துதல்
வாழ்வியல்
ஒழுக்கம் பற்றிக் கூறச்செய்தல்.
மொழிபெயர்ப்பு
குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.
12.அறிமுகம்
தாயுமானவர்,
கலீல் கிப்ரான் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல்
கற்பித்தல் செயல்பாடுகள்
வாழ்வியல் நெறிகளையும் ஒழுக்கங்களையும் குறித்து மாணவர்களுடன்
கலந்துரையாடுதல். பாடலின் சொற்களுக்கு அகராதி பார்த்துப் பொருள் அறிவது குறித்து
விளக்குதல். தாயுமானவரின் வரிகளுக்குப் பொருள் கூறுதல்.
மொழிபெயர்ப்பு குறித்து
மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். பாடல்களை விளக்குதல். வாழ்வைச்
செம்மைப்படுத்தும் அயல்நாட்டவர் சிந்தனை குறித்து அறியச் செய்தல். குறிக்கோளின்
இன்றியமையாமை குறித்து விளக்குதல்.
மனவரைபடம் மூலம்
பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
பிறமொழி இலக்கியச் சிந்தனைகள் குறித்து விளக்குதல். பல்வேறு
அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.
15.மதிப்பீடு
LOT – சுயம் என்பதன் பொருள் ...............................
MOT
– பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவதை விளக்குக.
HOT – குளிரால் வாடுபவர்களுக்கு உதவுதல் பற்றி எழுதுக.
நல்லவர் என்னும் பெயர் பெற
நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
பிறர் மகிழும்படி நீ செய்த நிகழ்வுகளைக் கூறு.
உன்னுடைய நிறைகுறைகளைப் பட்டியலிடுக.