வகுப்பு 10
1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப்
பாவலரேறு சுட்டுவன யாவை?
2. தமிழழகனார் தமிழையும் கடலையும்
இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
3. சோலைக்(பூங்கா) காற்றும் மின்விசிறிக்
காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க. தமிழ்த்துகள்
4. மழைநின்றவுடன் புலப்படும் காட்சியை
வருணித்து எழுதுக. குறிப்பு
: இலைகளில் சொட்டும் நீர் – உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில்
சளப் தளப் என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்.
5. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலை கூத்தராற்றுப்படை
எவ்வாறு காட்டுகிறது?
6.
வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு
நின்றான் இரவு
- குறளில்
பயின்று வரும் அணியை விளக்குக. தமிழ்த்துகள்
7. மாளாத காதல் நோயாளன் போல் என்னும்
தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
8. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச்
சிறப்புச் செய்தது ஏன்?
விளக்கம் தருக. தமிழ்த்துகள்
9. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்
படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன்
இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
10. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக
அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
11. நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில்
வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.
12. வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும்
பொருந்துவதைக் குறள் வழி விளக்குக. தமிழ்த்துகள்
13. பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால்
முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல
உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும்
நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
14. முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம்
நிகழ்வதாக கு.ப.ரா. கவி பாடுகிறார்?
15. பகர்வனர்
திரிதிரு நகரவீதியும்
பட்டினும்
மயிரினும் பருத்தி நூலினும் தமிழ்த்துகள்
கட்டு
நுண்வினைக் காருகர் இருக்கையும்
தூசும்
துகிரும் ஆரமும் அகிலும்
அ. இவ்வடிகள்
இடம்பெற்ற நூல் எது? தமிழ்த்துகள்
ஆ. பாடலில்
அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
இ. எதுகைச்
சொற்களை அடிக்கோடிடுக.
ஈ. காருகர்
- பொருள் தருக.
உ. இப்பாடலில்
காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
16. பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை
எழுதுக. தமிழ்த்துகள் பேரரசனது மெய்ப் புகழை எடுத்துக்
கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில்
அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக
அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக்கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு
வாழ்க எனக்கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக்
குறிப்பிடும். தமிழ்த்துகள் சோழ மன்னர் பரம்பரையில்
மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல்
இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிச
பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை,
ஏனைய பகுதிகள் உள்ளன. எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது.
இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக்
கூறியுள்ளன. தமிழ்த்துகள்
17. வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத்
துணி, கட்டைத் தூரிகை இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி
அமைக்க.
18. "சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள்
அறியாது" - இடஞ்சுட்டிப் பொருள்
தருக.
19. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன்
கூறுகிறார்?
அடிபிறழாமல்
எழுதுக. தமிழ்த்துகள்
20. அன்னை
மொழியே... முதல் பேரரசு முடிய கனிச்சாறு பாடல்.
21. தென்னன்... முதல் வாழ்த்துவமே முடிய
கனிச்சாறு பாடல்.
22. சிறுதாம்பு...
எனத்தொடங்கும் முல்லைப்பாட்டு பாடல்.
23. விருந்தினனாக...
எனத் தொடங்கும் காசிக்காண்டம் பாடல்.
24. வாளால்...
எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி பாடல். தமிழ்த்துகள்
25. அருளை...
எனத் தொடங்கும் நீதிவெண்பா பாடல்.
26. புண்ணிய...
எனத் தொடங்கும் திருவிளையாடற்புராணம் பாடல்.
27. செம்பொனடி...
எனத் தொடங்கும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடல்.
28. தண்டலை...
எனத் தொடங்கும் கம்பராமாயணப்பாடல்.
29. வெய்யோன்...
எனத் தொடங்கும் கம்பராமாயணப்பாடல். தமிழ்த்துகள்
30. தூசும்...
எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்.
31. மாற்றம்...
முதல் பாத்திரம் முடிய காலக்கணிதம் பாடல்.
32. தலைவர் மாறுவர்... முதல் சட்டம் முடிய
காலக்கணிதம் பாடல்.
33. நவமணி... எனத் தொடங்கும் தேம்பாவணி பாடல்.