கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, January 26, 2023

கரியில் தொடங்கி உமியில் முடியும் காளமேகப் புலவரின் பாடல்

ஆசுகவி புலவர் காளமேகம் எந்தச் சொல் கொடுத்துப் பாடல் பாடச் சொன்னாலும் உடனடியாகப் பாடுவார்.

ஒருமுறை அவரை ஏளனம் செய்ய நினைத்த பெண் ஒருவர் "கரி " என்று தொடங்கி "உமி " எனும் ஈற்றில் (முடிவுறும் சொல் ) பாடல் ஒன்றைப் பாடும்படியாகக் கேட்டுக்கொண்டார்.


உமி கரியாக மாறும் - கரி உமியாக மாறுமா ?


புலவர் காளமேகம்

அடுத்த நொடியில் - பாடிய பாடல் இதோ:


"கரிக்காய் பொரித்தாள் கன்னிக்கா யைத்தீய்த்தாள்

பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் _உருக்கமுள்ள

அப்பைக்காய் நெய்துவட்ட லாக்கினாள் அத்தைமகள்

உப்புக்காண் சீச்சீ யுமி "


தெளிவுரை :


அத்தை மகள்,அத்திக்காயைப் பொரியல் செய்து -

ஆசையாய் வாழைக்காயை நன்கு வதக்கி வைத்து

இளம்பிஞ்சு மாங்காயை பக்குவமாய் தயிர் விட்டு

ஈரமான பச்சடியை ஆசையாய் செய்து வைத்து-


உருண்ட கத்தரிக்காயை நெய்விட்டுத் துவட்டி -

ஊண் தின்னச்சொன்னாள், ஆசை மிகுதியினால்

எக்கச்சக்கமாய் உப்பு போட்டுவிட்டதினால், நான்

ஏமாந்து நின்று சீச்சியென உமிழ்ந்தேன்.


தமிழ்த்துகள்

Blog Archive