தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Monday, February 06, 2023
தமிழ்ப் பொன் மொழிகள் & சிறந்த வரிகள் TAMIL PON MOLIGAL & Best Lines in tamil part 1
Sunday, February 05, 2023
தன்னம்பிக்கை ஜென் கதை Thannambikai jen story tamil short story
Saturday, February 04, 2023
10ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 10th model notes of lesson tamil செப்டம்பர் 11
வகுப்பு 10
நாள் 11-09-2023 - 15-09-2023
பாடம் - தமிழ்
திருப்புதல் வினாக்கள்
1.‘வேங்கை’ என்பதைத் தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
2. ‘மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!’ - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
4. ‘உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ்’
- இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக.
5.‘நமக்கு உயிர் காற்று தமிழ்த்துகள்
காற்றுக்கு வரம் மரம் –மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்’ – இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக.
6. வசன கவிதை – குறிப்பு வரைக.
7. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக, தொடரில் அமைக்க.
8. மாஅல் – பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.
9. ‘எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத்தொடரானது.
‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
10.பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?
11. ‘நச்சப் படாதவன்’ செல்வம் – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
12. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.
13. பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.
உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது உயிரின் ஓம்பப் படும்
ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று
14.எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்ப்பாடு எது?
அ. கூவிளம் தேமா மலர் ஆ. கூவிளம் புளிமா நாள்
இ. தேமா புளிமா காசு ஈ. புளிமா தேமா பிறப்பு
15.வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் - இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு? தமிழ்த்துகள்
16.மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
17. “சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.
18.செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.
19. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ... இருக்கிறதே சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?
மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.
20.காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.
மாதிரி பாடக்குறிப்பு எட்டாம் வகுப்பு தமிழ் 8th tamil model notes of lesson march 20
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
நாள்
20-03-2023 முதல் 24-03-2023
திருப்புதல் வினாக்கள்
1. தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
2. ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?
3. புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
4. கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
5. நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?
6. உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
7. நீதிநெறி விளக்கப் பாடல் கூறும் கருத்தகளைத் தொகுத்து எழுதுக.
8. புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
9. திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?
10. நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.
11. உழவுத் தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவன யாவை?
12. கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?
13. மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக.
14. மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?
15. சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப்படை வீரர்களின் செயல்களாகக் கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை?
16. இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்?
17. மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவது யாது?
18. குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை?
19. மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன யாவை?
20. பூமி எப்போது பாதையாகும்?
மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் பருவம் 3 இயல் 2 விரிவானம் model notes of lesson 7th term 3 unit 2
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
13-02-2023 முதல் 17-02-2023
2.பருவம்
3
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
ஒப்புரவு ஒழுகு – விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
உண்மை ஒளி
6.பக்கஎண்
32 - 37
7.கற்றல் விளைவுகள்
T-703 தாம் பார்த்த ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தைத் தம் சொந்தச் சொற்களில் / சைகை மொழியில் வெளிப்படுத்தல்.
8.திறன்கள்
படக்காட்சிகள் வழி கருத்துகளைப் புரிந்துகொள்ளும் திறன்.
9.நுண்திறன்கள்
பெருந்தன்மை குறித்து அறிதல். ஜென் கதையை அறிதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/02/3-2-7th-tamil-mindmap-term-3-unit-2.html
https://tamilthugal.blogspot.com/2020/06/unmai-oli-7th-tamil-th.html
https://tamilthugal.blogspot.com/2020/04/unmai-oli-7th-virivaanam.html
https://tamilthugal.blogspot.com/2020/03/3-2-seventh-tamil-unmai-oli-katturai.html
11.ஆயத்தப்படுத்துதல்
உதவுதல் பற்றிக் கூறச்செய்தல்.
ஜென் தத்துவம் குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.
12.அறிமுகம்
உதவி பற்றிய கதையைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
உண்மை ஒளி கதை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். உதவி செய்தல் குறித்து விளக்குதல். மாணவர்களை உண்மை ஒளி கதையைக் கூறச் செய்தல்.
குருவின் செயலையும் திருடனின் செயலையும் ஒப்பிடுதல். மாணவர்களை நல்ல கோட்பாடுகள் குறித்து அறியச் செய்தல். தன்னலம் குறித்து விளக்குதல். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கச் செய்தல்.
வாய்ப்பு கிடைக்கும்போது பிறருக்கு உதவுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிறருக்கு உதவும் பண்பை வளர்த்துக் கொள்ளுதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
உதவுதலின் சிறப்பு குறித்து விளக்குதல். இதே போன்ற பிற கதைகளைக் கூறுதல்.
15.மதிப்பீடு
LOT – ஜென் என்ற சொல்லின் பொருள்................................
MOT – உண்மை ஒளி படக்கதையைக் கதையாகச் சுருக்கி எழுதுக.
HOT – நீ அறிந்த ஒரு ஜென் கதையை எழுது.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
உண்மை ஒளி படக்கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.
நீங்கள் செய்த உதவிகளைப் பட்டியலிடுக.
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 2 பருவம் 3 விரிவானம் tamil model notes of lesson 6th unit 2 term 3
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
13-02-2023 முதல் 17-02-2023
2.பருவம்
3
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
எல்லாரும் இன்புற – விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
பாதம்
6.பக்கஎண்
28 - 31
7.கற்றல் விளைவுகள்
T-606 தங்கள் பகுதிகளில் காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப்பாடல்களை அறிந்திருத்தல், அவற்றைப் பற்றிக் கலந்துரையாடல்.
8.திறன்கள்
பிறர் பொருளை விரும்பாமை ஓர் அறம் என்பதை உணரும் திறன்.
9.நுண்திறன்கள்
விந்தைக் கதைகள் குறித்து அறிதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2020/07/paatham-6th-tamil-thunaipa.html
https://tamilthugal.blogspot.com/2020/03/3-2-sixth-tamil-term-3-unit-2-paatham.html
https://tamilthugal.blogspot.com/2023/02/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2.html
11.ஆயத்தப்படுத்துதல்
பிடித்த கதைகள் பற்றிக் கூறச்செய்தல்.
சிறுகதை குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.
12.அறிமுகம்
கடமை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
பாதம் கதை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். கதையை விளக்குதல். மாரியின் பண்பு பற்றிக் கூறுதல்.
நேர்மை குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். மாரியின் நேர்மை குறித்து விளக்குதல். வாழ்வைச் செம்மைப்படுத்தும் அறம் குறித்து அறியச் செய்தல். அதிசயக் காலணி குறித்து மாணவர்களின் கருத்துகளைக் கூறச் செய்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பசியோடிருப்பவருக்கு உதவும் பண்பைப் பெறுதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
விந்தைக் கதைகள் குறித்து விளக்குதல். பல்வேறு அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.
15.மதிப்பீடு
LOT – சிறுமியின் காலணியின் நிறம்..............................
MOT – பாதம் கதையைச் சுருக்கி எழுதுக.
HOT – அறச்செயல்களாக நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நீ செய்த நேர்மையான செயல்களைக் கூறு.
அதிசயக் காலணி உங்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என எழுதுக.
Friday, February 03, 2023
Thursday, February 02, 2023
Wednesday, February 01, 2023
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan October 21 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 21-10-2026 முதல் 23-10-2026 ...
-
10th tamil model notes of lesson lesson plan November 2 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-11-2026 முதல் 06-11-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan October 21 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 21-10-2026 முதல் 23-10-2026 ...
-
10th tamil model notes of lesson lesson plan October 26 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 26-10-2026 முதல் 30-10-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan November 2 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-11-2026 முதல் 06-11-2026 ...
-
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மங்கையராய்ப் பிறப்பதற்கே, புறப்பொருள் இலக்கணம் நவம்பர் 1010th tamil model notes of lesson lesson plan November 10 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 10-11-2026 முதல் 13-11-2026 ...
-
8th tamil model notes of lesson lesson plan October 21 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 21-10-2026 முதல் 23-10-2026 2...
-
6th tamil model notes of lesson lesson plan October 21 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 21-10-2026 முதல் 23-10-2026 2...
-
9th tamil model notes of lesson lesson plan October 26 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 26-10-2026 முதல் 30-10-2026 ...
-
8th tamil model notes of lesson lesson plan November 2 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-11-2026 முதல் 06-11-2026 2...
Blog Archive
-
▼
2026
(1707)
-
▼
November
(38)
- வினையால் அமையும் தொடர்கள் FULL AI VIDEO எட்டாம் வக...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-11-2026 புதன்
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு ...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு ...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.11.2026 ச...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நவம்பர் 16
- தமிழ் ஒளிர் இடங்கள் FULL AI VIDEO ஏழாம் வகுப்பு த...
- தேன்சிட்டு 2026 நவம்பர் 1 மாத இதழ் வினாடி வினா வின...
- தேன்சிட்டு 2026 நவம்பர் இதழ் 1 வினாடி வினா - வினா ...
- தீபாவளி வாழ்த்துக் கவிதை தீப ஆவளி திருநாள் கவிதை D...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-11-2026 வெள்ளி
- என் கனவுப் பள்ளி தமிழ்ப் பேச்சு pdf link எனது கனவு...
- என் கனவுப் பள்ளி தமிழ்ப் பேச்சு pdf எனது கனவுப்பள்...
- உயர்ந்த குணம் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-11-2026 விய...
- இரண்டாம் இடைப் பருவத் தேர்வு கால அட்டவணை 2026
- இரண்டாம் இடைப் பருவத் தேர்வு 6-10 பாடத்திட்டம் 2026
- ஏழாம் வகுப்பு தமிழ் பேசும் ஓவியங்கள் FULL AI VIDEO...
- குழந்தைகளைக் கைப்பேசிப் பயன்பாட்டிலிருந்து மீட்பது...
- குழந்தைகளைக் கைப்பேசிப் பயன்பாட்டில் இருந்து மீட்ப...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 4-11-2026 புதன்
- இரண்டாம் இடைப் பருவத் தேர்வு 2026 பாடத்திட்டம் தமி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-11-2026 செவ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-11-2026 திங...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாக்க...
-
▼
November
(38)




