கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, August 01, 2023

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நோயும் மருந்தும், வருமுன் காப்போம்

 8th Tamil Model notes of lesson

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

05-08-2024 முதல் 10-08-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

உடலை ஓம்புமின் - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

நோயும் மருந்தும், வருமுன் காப்போம்

6.பக்கஎண்

48-52

7.கற்றல் விளைவுகள்

803 – படித்தவற்றைப் பற்றிச் சிந்தனை செய்து வினாக்கள் எழுப்பிப் புரிதலை மேம்படுத்திக் கொள்ளல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழர் மருத்துவ முறைகளை அறிந்து பயன்படுத்தும் திறன்

உடல் பாதுகாப்பை அறியும் திறன்

9.நுண்திறன்கள்

உடலின் சிறப்பையும் உடல் ஓம்பும் முறைகளையும் இலக்கியங்கள் வழி அறியும் திறன்.

தமிழர் மருத்துவத்தின் தொன்மை, சிறப்பை அறிந்து பெருமிதம் கொள்ளும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்




இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_4.html

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_75.html

https://tamilthugal.blogspot.com/2021/08/3-noyum-marunthum-8th-tamil-unit-3.html

https://tamilthugal.blogspot.com/2021/05/3-8th-tamil-kuruvina-vidai-noyum.html

https://tamilthugal.blogspot.com/2021/11/8th-tamil-noyum-marunthum-neelakesi.html

https://tamilthugal.blogspot.com/2021/05/3-8th-tamil-kuruvina-vidai-varumun-kapom.html

https://tamilthugal.blogspot.com/2021/08/3-varumun-kapom-8th-tamil-seyyul.html

https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_67.html

https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_10.html

11.ஆயத்தப்படுத்துதல்

நோய்களின் வகைகளைக் கூறச்செய்தல்.

உடல் நலத்திற்கு நாம் செய்ய வேண்டிய செயல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான நீலகேசியை அறிமுகப்படுத்துதல்.

உடல் தூய்மை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஆசிரியர் நீலகேசி பாடலை வாசித்துப் பொருள் கூறுதல், மாணவர்களும் பாடலை வாசித்தல். நோய்களின் வகைகள், மருந்துகள் குறித்து விளக்குதல். மாணவர்கள் அறிந்த நோய்கள் மருந்துகள் குறித்துக் கூறச்செய்தல். தன் சுத்தம் குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல். 

    மாணவர்கள் அறிந்த உடற்பயிற்சிகளைக் கூறச்செய்தல். நோயிலிருந்து நம்மைக் காப்பது குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். நோய் குறித்து மாணவர்கள் வினாக்கள் எழுப்புதல். புரிந்து கொள்ளுதல்.

 




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் குறித்துக் கூறுதல். சுத்தம், சுகாதாரம், தமிழர் மருத்துவம் குறித்துக் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – நீலகேசி கூறும் நோயின் வகைகள் ..............................

                   கவிமணி எனப்படுபவர் ....................................

          ந.சி.வி – நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன

யாவை?

                   நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை?

          உ.சி.வி – துன்பமின்றி வாழ நீ மேற்கொள்ளும் செயல்களைப் பட்டியலிடுக.

                   நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நற்பழக்கங்களைப் பட்டியலிடுக.

தமிழர் மருத்துவத்தின் பெருமைகளை இணையம் மூலம் அறிதல்.

வருமுன் காப்போம் எட்டாம் வகுப்பு தமிழ் துணைக்கருவி 8th Tamil Teaching Aid

 8th Tamil Teaching Aid



நோயும் மருந்தும் எட்டாம் வகுப்பு தமிழ் துணைக்கருவி 8th tamil teaching Aid

 8th tamil teaching Aid


ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு புலி தங்கிய குகை, பாஞ்சை வளம்

7th Tamil Notes of lesson

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

05-08-2024 முதல் 10-08-2024

2.பருவம்

1

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

நாடு அதை நாடு - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

புலி தங்கிய குகை, பாஞ்சை வளம்

6.பக்கஎண்

52-57

7.கற்றல் விளைவுகள்

T-705 – தாங்கள் வாழும் சமூகம் அல்லது நிலப்பகுதிகள் , நாட்டுப்புற இலக்கியங்கள் பாடல்கள் பற்றி கலந்துரையாடி அவற்றின் நயம் பாராட்டப்பட்டது.

8.கற்றல் நோக்கங்கள்

சங்க இலக்கியப் பாடல் மூலம் நாட்டுப்பற்றை அறியும் திறன்

நாட்டுப்புறக் கதைகள் மூலம் தமிழர் வீரத்தை அறியும் திறன்

9.நுண்திறன்கள்

புறநானூற்றுப் பாடலின் மையக்கருத்து வெளிப்படும் வகையில் உணர்ச்சியுடன் வாய்விட்டுப்படிக்கும் திறன்.

கதைப்பாடல் பகுதியைப் படித்து நயங்களை அறியும் திறன்.

10.கற்பித்தல்  துணைக்கருவிகள்




இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/ 2023/08/ blog-post_ 93. html

https://tamilthugal.blogspot.com/ 2023/08/ blog-post_ 82. html

https :// tamilthugal . blogspot . com /2019/08/ வலைப்பதிவு - post_ 43. html

https :// tamilthugal . blogspot . com /2021/06/3-1-7 வது - தமிழ் - புலி - தங்கிய - குகை . html

https :// tamilthugal . blogspot . com /2021/06/3-1-7 th - tamil - paanjai - Valam - Kuruvina . html

11.ஆயத்தப்படுத்துதல்

சங்க இலக்கியப் பாடல் வகைகளைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த நாட்டுப்புறக்கதைகளைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தமிழர்களின் பழங்கால போர்க்கள வீரத்தைக் கூறி பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

கட்டபொம்மனின் வீரத்தைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தன் மகன் வீரத்தைக் கூறும் புறநானூற்றுத் தாயின் பாடலை விளக்குதல். மகனை புலிக்கு நிகராகக் கூறும் உவமையை உணர்தல். நாட்டுப்பற்றுடன் திகழ்ந்த தமிழர்களின் வீரத்தை உணர்த்துதல். வீரபாண்டியக் கட்டபொம்மன் குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் கூறி, பாஞ்சாலங்குறிச்சியின் வளத்தைக் கூறுதல். இன்றைய வளங்களோடு அதை மாணவர்களை ஒப்பிடச் செய்தல்.

          நாட்டுப்புறப் பாடலைப் பற்றிக் கலந்துரையாடுதல். பாடல் குறித்த மாணவர்களின் கருத்தைக் கூறுதல்.

 





          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், கதைப்பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

சங்க இலக்கியங்களை அறியச் செய்தல். பாஞ்சாலங்குறிச்சியின் வளத்தை அறிதல். தமிழரின் வீரத்தை உணரச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – யாண்டு என்னும் சொல்லின் பொருள் ..............................

                   மெத்தைவீடு என்று குறிப்பிடப்படுவது ....................................

          ந.சி.வி  – தம் வயிற்றுக்குத் தாய் எத்தனை உவமையாகக் கூறுகிறார் ?

                   பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும் ?

உ.சி.வி – கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணமாக நீ எண்ணுபவற்றை எழுதுக

                   தாய் தன் மகனைப் புலியோடு ஒப்பிடுவது குறித்து உனது கருத்துகளை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திர மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக.

கட்டபொம்மன் குறித்த தகவல்களையும் பெருமைகளையும் இணையம் மூலம் அறிதல்.

பாஞ்சை வளம் ஆறாம் வகுப்பு தமிழ் கற்பித்தல் துணைக்கருவி 6th tamil teaching aid


6th tamil teaching aid

 

புலி தங்கிய குகை ஏழாம் வகுப்பு தமிழ் கற்பித்தல் துணைக்கருவி 7th tamil teaching aid

7th tamil teaching aid

 

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு அறிவியல் ஆத்திசூடி, அறிவியலால் ஆள்வோம் 6th Tamil model notes of lesson

 6th Tamil model notes of lesson

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

05-08-2024 முதல் 10-08-2024

2.பருவம்

1

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

எந்திர உலகம் - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

அறிவியல் ஆத்திசூடி, அறிவியலால் ஆள்வோம்

6.பக்கஎண்

52-57

7.கற்றல் விளைவுகள்

614 – புதிய சொற்களைத் தெரிந்துகொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்தல், அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள முயலுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

அறிவியல் அறியும் திறன்

விண்வெளி அறியும் திறன்

9.நுண்திறன்கள்

எதையும் காரண காரியத்துடன் அறிந்துகொள்ள முயலும் திறன்.

அறிவியல் மனப்பான்மை பெறும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்




இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_43.html

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_50.html

https://tamilthugal.blogspot.com/2021/06/3-1-6th-tamil-ariviyal-aathisoodi.html

https://tamilthugal.blogspot.com/2022/06/nellai-sumuthu.html

https://tamilthugal.blogspot.com/2020/07/avvaiyaar-in-aaththisoodi-eliy.html

https://tamilthugal.blogspot.com/2020/07/barathiyar-in-puthiya-aat.html

https://tamilthugal.blogspot.com/2020/07/barathidasan-in-ilaiya.html

11.ஆயத்தப்படுத்துதல்

ஔவையாரின் ஆத்திசூடி குறித்துக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த நவீன தகவல் தொழில்நுட்பங்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

அறிவியலின் அவசியத்தைக் கூறி அறிவியல் ஆத்திசூடியை அறிமுகப்படுத்துதல்.

அறிவியலின் நவீன கண்டுபிடிப்புகளைக் கூறி பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          அகர வரிசையில் அறிவியல் கருத்துகளை மாணவர்களுக்கு விளக்குதல்.

          ஆத்திசூடியை வாசித்து அவற்றின் பொருள் கூறுதல். மாணவர்களையும் திரும்பக் கூறச்செய்தல்.புதிய சொற்களுக்கு அகராதி பார்த்து பொருளறியச் செய்தல்.

          மனிதனின் விண்வெளி ஆய்வு குறித்து விளக்கி மாணவர்கள் கருத்தைக் கூறச்செய்தல். புதிய கண்டுபிடிப்புகளுக்கு மாணவர்களை ஊக்குவித்தல்.

          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.





          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், அறிவியல் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

அறிவியல் சிந்தனையை மாணவர்களிடம் உருவாக்குதல். புதிய கண்டுபிடிப்புகளின் தேவையையும் பழைமையின் அவசியத்தையும் அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – ஔடதம் என்பதன் பொருள் ..............................

                   மனிதன் எப்போதும் உண்மையையே ....................................

          ந.சி.வி – நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும்?

                   மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?

          உ.சி.வி – உனக்குத்தெரிந்த மருத்துவமுறைகள் குறித்து எழுதுக.

                   எவற்றுக்குப் புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்று சிந்தித்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உனக்குப் பிடித்த அறிவியல் சாதனங்கள் 5 எழுதுக.

விண்வெளி குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

அறிவியலால் ஆள்வோம் ஆறாம் வகுப்பு தமிழ் கற்பித்தல் துணைக்கருவி 6th tamil teaching aid

 6th tamil teaching aid


அறிவியல் ஆத்திசூடி ஆறாம் வகுப்பு தமிழ் கற்பித்தல் துணைக்கருவி 6th tamil teaching aid

 6th tamil teaching aid


ஆறாம் வகுப்பு தமிழ் முதல் இடைத்தேர்வு கன்னியாகுமரி வினாத்தாள் Tamil question paper 6th

எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைத்தேர்வு கன்னியாகுமரி வினாத்தாள் Tamil question paper 8th

ஆறாம் வகுப்பு ஆங்கிலம் முதல் இடைத்தேர்வு விருதுநகர் வினாத்தாள் 6th English first mid term exam question paper virudhunagar

எட்டாம் வகுப்பு ஆங்கிலம் முதல் இடைத்தேர்வு விருதுநகர் வினாத்தாள் 8th English first mid term exam question paper virudhunagar

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் இடைத்தேர்வு விருதுநகர் வினாத்தாள் pdf tenth English first mid term exam question paper 10th

பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைத்தேர்வு 2023 கன்னியாகுமரி வினாத்தாள் pdf Tamil question paper 10th

தமிழ்த்துகள்

Blog Archive