கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, June 09, 2022

நெல்லை சு.முத்து ஆசிரியர் குறிப்பு - NELLAI SU.MUTHU

 

பெயர் முத்து

ஊர் - திருநெல்வேலி

தந்தை சுப்பிரமணியன்

தாய் - சொர்ணத்தம்மாள்

பிறந்த தேதி - 10 -05 -1951

இவர் ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாகப் பணியாற்றினார். 

மலேசியாவின் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையால் வழங்கப்பட்ட கவிமாமணி விருதினைப் பெற்றிருக்கிறார். 

இவர் அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனும் தலைப்புகளில் 80க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.

"செவ்வாயில் உள்வேட்கையும் நல்வாய்ப்பும்" என்ற தலைப்பில் செவ்வாயைப் பற்றிய கிரேக்க இதிகாச புராணக்கதைகள் மற்றும் நவீன விஞ்ஞான வாய்ப்புகளைப் பற்றியும் 2004 ஆம் ஆண்டில் எழுதியுள்ளார்

இவர் எழுதிய நான்கு நூல்களுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது.

  1. "விண்வெளி 2057" எனும் நூல் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
  2. "அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு" எனும் நூல் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
  3. "ஐன்ஸ்டீனும் அண்டவெளியும்" எனும் நூல் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
  4. "அறிவியல் வரலாறு (மூன்று பாகங்கள்)" எனும் நூல் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிற சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

தமிழ்த்துகள்

Blog Archive