7th Tamil Notes of lesson
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
05-08-2024 முதல் 10-08-2024
2.பருவம்
1
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
நாடு அதை நாடு - கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
புலி தங்கிய குகை, பாஞ்சை வளம்
6.பக்கஎண்
52-57
7.கற்றல் விளைவுகள்
T-705 – தாங்கள் வாழும் சமூகம் அல்லது நிலப்பகுதிகள் , நாட்டுப்புற இலக்கியங்கள் பாடல்கள் பற்றி கலந்துரையாடி அவற்றின் நயம் பாராட்டப்பட்டது.
8.கற்றல் நோக்கங்கள்
சங்க இலக்கியப் பாடல் மூலம் நாட்டுப்பற்றை அறியும் திறன்
நாட்டுப்புறக் கதைகள் மூலம் தமிழர் வீரத்தை அறியும் திறன்
9.நுண்திறன்கள்
புறநானூற்றுப் பாடலின் மையக்கருத்து வெளிப்படும் வகையில் உணர்ச்சியுடன் வாய்விட்டுப்படிக்கும் திறன்.
கதைப்பாடல் பகுதியைப் படித்து நயங்களை அறியும் திறன்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/ 2023/08/ blog-post_ 93. html
https://tamilthugal.blogspot.com/ 2023/08/ blog-post_ 82. html
https :// tamilthugal . blogspot . com /2019/08/ வலைப்பதிவு - post_ 43. html
https :// tamilthugal . blogspot . com /2021/06/3-1-7 வது - தமிழ் - புலி - தங்கிய - குகை . html
https :// tamilthugal . blogspot . com /2021/06/3-1-7 th - tamil - paanjai - Valam - Kuruvina . html
11.ஆயத்தப்படுத்துதல்
சங்க இலக்கியப் பாடல் வகைகளைக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த நாட்டுப்புறக்கதைகளைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
தமிழர்களின் பழங்கால போர்க்கள வீரத்தைக் கூறி பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
கட்டபொம்மனின் வீரத்தைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
தன் மகன் வீரத்தைக் கூறும் புறநானூற்றுத் தாயின் பாடலை விளக்குதல். மகனை புலிக்கு நிகராகக் கூறும் உவமையை உணர்தல். நாட்டுப்பற்றுடன் திகழ்ந்த தமிழர்களின் வீரத்தை உணர்த்துதல். வீரபாண்டியக் கட்டபொம்மன் குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் கூறி, பாஞ்சாலங்குறிச்சியின் வளத்தைக் கூறுதல். இன்றைய வளங்களோடு அதை மாணவர்களை ஒப்பிடச் செய்தல்.
நாட்டுப்புறப் பாடலைப் பற்றிக் கலந்துரையாடுதல். பாடல் குறித்த மாணவர்களின் கருத்தைக் கூறுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், கதைப்பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
சங்க இலக்கியங்களை அறியச் செய்தல். பாஞ்சாலங்குறிச்சியின் வளத்தை அறிதல். தமிழரின் வீரத்தை உணரச் செய்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – யாண்டு என்னும் சொல்லின் பொருள் ..............................
மெத்தைவீடு என்று குறிப்பிடப்படுவது ....................................
ந.சி.வி – தம் வயிற்றுக்குத் தாய் எத்தனை உவமையாகக் கூறுகிறார் ?
பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும் ?
உ.சி.வி – கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணமாக நீ எண்ணுபவற்றை எழுதுக
தாய் தன் மகனைப் புலியோடு ஒப்பிடுவது குறித்து உனது கருத்துகளை எழுது.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திர மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக.
கட்டபொம்மன் குறித்த தகவல்களையும் பெருமைகளையும் இணையம் மூலம் அறிதல்.