கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, August 01, 2023

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நோயும் மருந்தும், வருமுன் காப்போம்

 8th Tamil Model notes of lesson

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

05-08-2024 முதல் 10-08-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

உடலை ஓம்புமின் - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

நோயும் மருந்தும், வருமுன் காப்போம்

6.பக்கஎண்

48-52

7.கற்றல் விளைவுகள்

803 – படித்தவற்றைப் பற்றிச் சிந்தனை செய்து வினாக்கள் எழுப்பிப் புரிதலை மேம்படுத்திக் கொள்ளல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழர் மருத்துவ முறைகளை அறிந்து பயன்படுத்தும் திறன்

உடல் பாதுகாப்பை அறியும் திறன்

9.நுண்திறன்கள்

உடலின் சிறப்பையும் உடல் ஓம்பும் முறைகளையும் இலக்கியங்கள் வழி அறியும் திறன்.

தமிழர் மருத்துவத்தின் தொன்மை, சிறப்பை அறிந்து பெருமிதம் கொள்ளும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்




இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_4.html

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_75.html

https://tamilthugal.blogspot.com/2021/08/3-noyum-marunthum-8th-tamil-unit-3.html

https://tamilthugal.blogspot.com/2021/05/3-8th-tamil-kuruvina-vidai-noyum.html

https://tamilthugal.blogspot.com/2021/11/8th-tamil-noyum-marunthum-neelakesi.html

https://tamilthugal.blogspot.com/2021/05/3-8th-tamil-kuruvina-vidai-varumun-kapom.html

https://tamilthugal.blogspot.com/2021/08/3-varumun-kapom-8th-tamil-seyyul.html

https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_67.html

https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_10.html

11.ஆயத்தப்படுத்துதல்

நோய்களின் வகைகளைக் கூறச்செய்தல்.

உடல் நலத்திற்கு நாம் செய்ய வேண்டிய செயல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான நீலகேசியை அறிமுகப்படுத்துதல்.

உடல் தூய்மை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஆசிரியர் நீலகேசி பாடலை வாசித்துப் பொருள் கூறுதல், மாணவர்களும் பாடலை வாசித்தல். நோய்களின் வகைகள், மருந்துகள் குறித்து விளக்குதல். மாணவர்கள் அறிந்த நோய்கள் மருந்துகள் குறித்துக் கூறச்செய்தல். தன் சுத்தம் குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல். 

    மாணவர்கள் அறிந்த உடற்பயிற்சிகளைக் கூறச்செய்தல். நோயிலிருந்து நம்மைக் காப்பது குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். நோய் குறித்து மாணவர்கள் வினாக்கள் எழுப்புதல். புரிந்து கொள்ளுதல்.

 




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் குறித்துக் கூறுதல். சுத்தம், சுகாதாரம், தமிழர் மருத்துவம் குறித்துக் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – நீலகேசி கூறும் நோயின் வகைகள் ..............................

                   கவிமணி எனப்படுபவர் ....................................

          ந.சி.வி – நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன

யாவை?

                   நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை?

          உ.சி.வி – துன்பமின்றி வாழ நீ மேற்கொள்ளும் செயல்களைப் பட்டியலிடுக.

                   நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நற்பழக்கங்களைப் பட்டியலிடுக.

தமிழர் மருத்துவத்தின் பெருமைகளை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive