கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, July 05, 2024

ஆட்சி மொழி தமிழ் தமிழ்க் கட்டுரை பேச்சு

 AATCHI MOLI TAMIL KATTURAI ESSAY SPEECH COMPETITION 

ஆட்சி மொழி தமிழ்


கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

முன்னுரை                               தமிழ்த்துகள்

பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்து இருப்பிலே இருந்து வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள். தமிழ்த்துகள்

கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் கோலோச்சியவர்கள் தமிழர்கள். முதற்சங்கமும் இடைச்சங்கமும் கபாடபுரத்திலும் தென்மதுரையிலும் அமைந்திருந்தன. கடைச்சங்கம்தான் இன்றைய மதுரையில் இருந்தது. உலகிற்கு நாகரிகத்தைக் கற்றுத் தந்தவர்கள் தமிழர்கள். பண்பட்ட மொழியாய்த் தமிழ் உள்ளது என்பதற்குச் சங்க இலக்கியங்களே சான்றாக உள்ளன. பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் காலத்தை வென்று நிற்கிறது தமிழ்மொழி. ஆட்சிமொழியாக தமிழ் அமைந்து இன்றும் சிறந்து விளங்குகிறது. அன்னைத் தமிழின் அருமை காண்போம் வாரீர். தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM       தமிழ்த்துகள்

அந்நியர் பிடியில் தாய்நாடு                தமிழ்த்துகள்

சங்க காலம் தொடங்கி பிற்கால பாண்டியர்கள் ஆட்சி வரை அரசுக் கட்டிலில் அமர்ந்திருந்தது தமிழ்மொழி. சங்கம் மருவிய காலத்தில் அதன் வளர்ச்சி போற்றத்தக்கதாக இல்லை. பல்லவ மன்னர்கள் வடமொழியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டினர். காஞ்சியில் கடிகைகள் அமைத்து வடமொழிக் கல்லூரி செயல்பட்டது. தமிழ்த்துகள்

கிபி 1526 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுல்தான்கள் ஆட்சியும் முகலாயர் படையெடுப்பும் நடந்தது. அதனைத் தொடர்ந்து நாயக்கர்கள் ஆட்சியில் ஏறத்தாழ 300 ஆண்டுகள் இருந்தது தமிழ்நாடு. அவர்களைத் தொடர்ந்துவந்த ஐரோப்பியர்களான போர்ச்சுக்கீசியர் டச்சுக்காரர்கள் டேனிஷ்காரர்கள் பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயர் ஆகியோர் கைகளில் நம் தாய்த்திருநாடு அடிமைப்பட்டுக்கிடந்தது. இனம் அடிமைப்பட்டதோடு இல்லாமல் மொழிக் கலப்பு ஏற்படவும் இது வித்திட்டது. தமிழ்த்துகள்

மணிபிரவாளநடை       தமிழ்த்துகள்

தனித்தியங்கும் தன்மை பெற்றது நம் தமிழ்மொழி. உலகில் வேறு எந்த மொழிகளுக்கும் இல்லாத சொல்லாட்சி கொண்ட மொழி தமிழ். சொற்களஞ்சியப் பெருக்கமே தமிழின் வளர்ச்சி. இருப்பினும் கலை, நாகரிகம், பண்பாடு, வணிக உறவு இவற்றால் பிற நாடுகளோடு கொண்ட தொடர்பு மொழிக்கலப்பை ஏற்படுத்தியது. இனாம், கஜானா, ஜப்தி, ஜாமீன், பஜார், தாசில்தார், பந்தோபஸ்து போன்ற சொற்கள் அரேபியர்களின் வருகையால் தமிழில் கலந்தன. சாமான், சன்னல், புஷ்பம், பூஜா, சாவி, ரயில், சரித்திரம் போன்ற சொற்கள் இன்றைக்கும் நம் பேச்சு வழக்கில் இருக்கின்றன. தமிழ்த்துகள்

வடசொல், திசைச்சொல், திரிசொல் என்று இயற்சொல் மருவிவிட்டது. மறைமலை அடிகளா,ர் தேவநேயப் பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், தமிழ்த் தென்றல் திரு.வி.க, பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார், ஆட்சி மொழிக்காவலர் கி.ராமலிங்கனார் போன்றோர் முயற்சியால் மணிபிரவாள நடை மீட்டெடுக்கப்பட்டது. தமிழைக் கொலை செய்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்றார் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழ்த்துகள்

ஆட்சி மொழியான தமிழ் மொழி

தமிழன் என்றோர் இனமுண்டு                     தமிழ்த்துகள்

தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்று பாடினார் நாமக்கல் கவிஞர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 17ஆம் பகுதி ஆட்சி மொழி பற்றிய பிரிவு 345-ன் படி தமிழ் ஆட்சி மொழியாக 27 : 12 : 1956 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. ஆட்சி மொழித் திட்ட நிறைவேற்றக் குழு அமைக்கப்பட்டது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் தமிழ் ஆட்சி மொழியாக அமர்ந்திருக்கிறது என்பதை நாம் பெருமையோடு கூறிக்கொள்ளலாம். தமிழ்த்துகள்

அது மட்டுமல்ல சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், பிஜுதீவுகள், தென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. 1968 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியில் ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் தமிழ் அமைவதற்குச் சட்டம் இயற்றப்பட்டது. மும்மொழிக் கொள்கை துடைத்து எறியப்பட்டு இரு மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஒரு மொழி ஆட்சி மொழி ஆவதற்கு அது தாய்மொழி என்னும் தகுதிக்கு ஈடாக வேறு எந்தத் தகுதியும் பெற்றிருக்கத் தேவையில்லை' என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM       தமிழ்த்துகள்

 

கடந்து வந்த பாதையும் விதிவிலக்கும்                       தமிழ்த்துகள்

1968 இல் ஆட்சி மொழிக் குழு தமிழ் வளர்ச்சித் துறை என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டது. தமிழ் வளர்ச்சி இயக்குநர் இதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். திராவிட மொழிக் குடும்பத்தில் இருக்கக்கூடிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் மன்னராட்சி காலத்தில் வெகு சிறப்போடு இருந்தன. ஆங்கிலேயர் ஆட்சி முடிவுற்றதும் தமிழைத் தவிர்த்து பிற மொழிவாரி மாநிலங்கள் எல்லாம் தாய் மொழியை முதன்மை அடையாளமாக மீட்டெடுத்து விட்டன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் ஆங்கில மோகம் குறையவே இல்லை. தமிழ்த்துகள்

தமிழர் உழைத்தனர் உயரவில்லை; சிந்தித்தனர் அறிஞராகவில்லை. காரணம் மொழி முரண்பாடு என்பதைத் தமிழ் அறிஞர்கள் அறிந்தனர். பொதுமக்களின் கடிதங்கள், சார்நிலை மாவட்ட அலுவலகக் கடிதங்கள், பிற துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள், அரசு செயலகத் துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் என்று நான்கு நிலைகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்குவது என்ற முடிவுக்கு வந்தது தமிழ் வளர்ச்சித்துறை. 1963 இல் தொடங்கிய இப்பணி 1971 இல் நிறைவுக்கு வந்தது. மாவட்டக் கருவூலங்கள் சம்பளக் கணக்கு அலுவலகங்கள் நீதிமன்றங்கள் பிற மாநில மைய அரசுக் கடிதங்கள் மேல்முறையீடு சீராய்வுக்கு உட்படக்கூடிய சட்ட முறைகள் வெளிநாட்டுத் தூதரகத் தொடர்புகள் இவற்றுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டது. தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM       தமிழ்த்துகள்

 

தேமதுரத் தமிழோசை

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ் மொழியில் பெயர்தல் வேண்டும், தமிழ்த்துகள்

இறவாத புகழுடைய புது நூல்கள்

தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் என்றார் மகாகவி பாரதியார். தமிழ்த்துகள்

அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், காமராசர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவை பொறியியல் சொல்லகராதி, மருத்துவச் சொல்லகராதி, உயிரியல் சொல்லகராதி, இயற்பியல் சொல்லகராதி, வணிகவியல் சொல்லகராதி உருவாக்கி உள்ளன. தமிழ்த்துகள்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இரண்டு லட்சம் கலைச்சொற்களைத் தொகுத்துள்ளது. அகராதிகள் பேரகராதிகள் கலைக்களஞ்சியங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வரலாற்று வரைவு திட்ட வல்லுநர் குழு ஏற்படுத்தப்பட்டது. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் இயக்குநராகப் பாவாணர் செயல்பட்டார். சங்க இலக்கியப் பதிவுகள் கணிப்பொறியில் ஏற்றப்பட்டு இணையம் மூலம் பன்னாட்டுத் தகவல் தொடர்பில் இணைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மொழியின் அடுத்த கட்ட வளர்ச்சி ஆகும். தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM       தமிழ்த்துகள்

 

முடிவுரை                                தமிழ்த்துகள்

வீரமாமுனிவர், ஜி.யு.போப், கால்டுவெல், பெர்சிவல் போன்ற வெளிநாட்டவர் தமிழ் கற்று தமிழ்த் தொண்டு செய்தனர். திருக்குறளும் நாலடியாரும் திருவாசகமும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் ஜி.யு.போப் அவர்கள். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழ் மொழிக்குச் செம்மொழி நிலை அறிவிக்க அயராது உழைத்தார். அதன்படி ஒன்றிய அரசால் 2004 ஜூலை 6 அன்று தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. தமிழ்த்துகள்

வணிக நிறுவனங்களிலும் தொழிலகங்களிலும் பெயர்ப் பலகைகள் தமிழில் வைக்க வேண்டும். நாடகம், திரைப்படம், கட்டுரை உள்ளிட்ட செய்தி வாயில்கள் அனைத்திலும் தமிழ் முத்திரை விதிக்க வேண்டும். தமிழ்நாட்டு கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இவற்றின் மூலம் அரசு பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறது. ஆறு கோடி தமிழர்களின் ஏட்டு மொழியாக நாட்டு மொழியாக பயிற்று மொழியாக விளங்குகின்றது தமிழ். ஆட்சி மொழியாக அதனை நாம் தொடர வேண்டும். தமிழ்த்துகள்

பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும்

பைந்தமிழில் அழும் ஓசை கேட்க வேண்டும்            தமிழ்த்துகள்

ஓடையிலே என் சாம்பல் கரையும் போதும்

ஒண்டமிழே சலசலத்து ஓட வேண்டும் என்ற யாழ்ப்பாணத்துக் கவிஞரின் வரிகளில் நனைவோம்! தமிழ் வளர்ச்சிக்கு என்றும் துணையாய் இருப்போம்.தமிழ்த்துகள்

 

மு.முத்து முருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி. 9443323199             தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM       தமிழ்த்துகள்

பத்தாம் வகுப்பு தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள் 2 விழுப்புரம் மாவட்டம் pdf

பதிவிறக்கு/DOWNLOAD 

SSLC tenth X 10th tamil slip test unit test 2 exam question paper Villupuram district pdf 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.07.2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.07.2024

திருக்குறள்: 

பால் : பொருட்பால்

அதிகாரம்:கேள்வி

குறள் எண்:411
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.


பொருள்:செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுக்குள் ஒன்றாக போற்றப்படும் செல்வமாகும்; அச்செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.


பழமொழி :

Lamb at home and a lion at the chase.
பார்த்தால் பூனை; பாய்ந்தால் புலி.
இரண்டொழுக்க பண்புகள் :

* போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.


* என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி :
"மாற்றத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்தி கூர்மை" ---ஸ்டீஃபன் ஹாக்கிங்
பொது அறிவு : 
1.தனது உடம்பினை விட நீளம் கூடிய நாக்கை கொண்ட விலங்கு எது?

விடை: பச்சோந்தி


2. ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு எது?

விடை: வரிக்குதிரை


English words & meanings :

 genial- பழகுவதற்கு இனிய,


 keenness-ஆர்வம்

வேளாண்மையும் வாழ்வும் : 
இயற்கை வேளாண்மை என்பது செயற்கை உரம் செயற்கை பூச்சிக் கொல்லி மருந்துகள் தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேளாண்மை (விவசாய) முறையாகும்.
நீதிக்கதை
 பொறாமை வேண்டாம் | 

ஒரு கிராமத்தில் பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டில் ஒரு நாயையும், பொதி சுமக்க ஒரு கழுதையை வளர்த்து வந்தார். .
பண்ணையாருக்கு அவர் வளர்க்கும் நாய் மேல் அதிக அன்பு இருந்தது. ஏனென்றால், அது இரண்டு முறை திருடர்களைப் பிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளது. அவர் வெளியே சென்று வீட்டிற்கு வந்தால் தன் வாலை ஆட்டிக்கொண்டே நன்றியை காட்டும். 
அவர் அமர்ந்திருக்கும் போது உரிமையாக சென்று அவர் மடியில் படுத்துக்கொள்ளும். அவர் முகத்தை ஆசையாக நக்கும். பண்ணையார் அதற்கு  உயர்ந்த ரக உணவுகளை கொடுத்து மிகவும் அன்பாக வைத்திருந்தார்.
பண்ணையார் வீட்டில் வளரும் கழுதை பண்ணையார் நாய்க்கு மட்டும் இவ்வளவு சலுகைகளை வழங்குகிறாரே என்று பொறாமைப்பட்டது. பண்ணையார் நாய்க்கு கொடுக்கும் அத்தனை சலுகைகளையும் தான் பெற வேண்டும் என்று நினைத்தது. 
நாய் போல் தானும் ஒரு நாள் பண்ணையார் மடியில் படுத்து அவர் முகத்தை நக்க வேண்டும் என திட்டம் தீட்டியது. 
கழுதையின் எண்ணத்தை நாய் புரிந்து கொண்டது. அது கழுதையை பார்த்து, “நண்பா, எனக்கு கிடைக்கும் சலுகைகளை கண்டு நீ பொறாமை படாதே, நான் செய்வதைப் போன்றே நீ செய்தால் பண்ணையார் பொறுத்துக் கொள்ள மாட்டார். உன்னை நன்றாக அடித்து வீட்டை விட்டு துரத்தி விடுவார்” என்று அறிவுரை கூறியது.
கழுதை நாய் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அது நாயை பார்த்து, “நண்பா நடப்பதை நீயே பார். பண்ணையார் என் செயலால் எப்படி மகிழ்ச்சி அடையப்போகிறார் என்பதை பார்” என்று கூறியது.
அதற்கு பிறகு நாய் எதுவும் பேசவில்லை. அன்றைக்கு பண்ணையார் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்து கொண்டு வீட்டில் அமர்ந்து புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார். உடனே கழுதை விரைவாக ஓடி சென்று அவருடைய மடியில் அமர்ந்து கொண்டது. 
தன்னுடைய நாக்கால் அவருடைய முகத்தை நக்கியது. பின்னர் பெரும் குரல் எடுத்து கத்தியது. பண்ணையாருக்கு கடும் கோபம் வந்தது. அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து அந்த கழுதையை நன்கு அடித்து விட்டார். வலி தாங்க முடியாத கழுதை கத்திக்கொண்டே காட்டுக்குள் ஓடியது.
 நீதி : பிறருக்கு கிடைக்கும் சலுகைகளை பார்த்து நாம் பொறாமை படக்கூடாது. அவ்வாறு பொறாமை பட்டால் அது நமக்கு அழிவு தான் உண்டாக்கும்.

இன்றைய செய்திகள்

05.07.2024


∆ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  நீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.


∆புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஊதிய உயர்வு.


∆தமிழகம், புதுச்சேரியில் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட 115 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது.


∆மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


∆எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க சீனா ஒப்புக்கொண்டிருப்பதாக  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


∆3,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில ஜூனியர் தடகள போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்.


∆பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 27 பேர் கொண்ட இந்திய தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


∆ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: துருக்கி கால்இறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


∆ The flow of water in Hogenakkal Cauvery river has increased to 3,000 cubic feet per second.


 ∆ Pay hike for Contract Drivers, Conductors working in Puducherry Road Transport Corporation.


 ∆ In Tamil Nadu, Puducherry has received 115 percent more rain than normal in June.


 ∆ With the increase in Zika virus cases in Maharashtra, the Union Health Ministry has advised the states to remain vigilant.


 ∆ Indian External Affairs Minister Jaishankar has said that China has agreed to redouble its efforts to resolve the border issue.


∆ 3,500 male and female athletes will participate in the state junior athletics tournament - starting today in Chennai.


 ∆ A team of  27 members of  Indian athletes, including five from Tamil Nadu, has been announced for the Olympics to be held in Paris.


 ∆ European Football Championship: Turkey advances to quarter-finals

தென்னாட்டுப் பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா தமிழ்ப் பேச்சு கட்டுரை Thennattu Bernatsha perarignar anna



தென்னாட்டுப் பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா தமிழ்ப் பேச்சு கட்டுரை pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


 Thennattu Bernatsha perarignar anna tamil speech pechu essay katturai competition pdf

தென்னாட்டுப் பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா தமிழ்ப் பேச்சு கட்டுரை

 Thennattu Bernatsha perarignar anna tamil speech pechu essay katturai competition 

தென்னாட்டுப் பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM            தமிழ்த்துகள்

 

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாம் தமிழ்க்குடிக்குத் தனி அடையாளமாய் விளங்குகின்ற என் தாய்த் தமிழை வணங்கித் தொடங்குகின்றேன். பேரறிவு கொண்ட அவைத்தலைவர் அவர்களே! பேரன்பு கொண்ட அன்பு உடன்பிறப்புகளே: உங்கள் அனைவருக்கும் அடியேனின் அன்பு வணக்கங்கள்.    தமிழ்த்துகள்

தடுமாறும் போதெல்லாம் தாங்கிப் பிடிப்பவள் தாய். அப்படிப்பட்ட தாய் நாட்டையும் தாய் மொழியையும் நாம் எப்போதும் மறக்கக் கூடாது. ஒரு மொழி அழியுமானால் அந்த இனமே அழியும் என்பதைத் தன் அடுக்கு மொழிப் பேச்சால் நாட்டு மக்களுக்குப் புரிய வைத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அண்ணா என்று எழுத நினைக்கும் போதெல்லாம் பேரறிஞர் என்ற சொல் தானாக முன்னே வந்து நிற்கிறதே என்ன காரணம்? தமிழ்த்துகள்

அவர் பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர் என்பதனால் மட்டுமல்ல, காஞ்சிபுரத்தில் பிறந்தார் என்பதால் மட்டுமல்ல, தந்தை பெரியாரைத் தலைவராகக் கொண்டவர் என்பதால் மட்டும் அல்ல, கன்னிமாரா நூல் நிலையத்தில் முதல் ஆளாக உள்ளே நுழைந்து கடைசி ஆளாக வெளியே வரும் வாசிப்பாளர் அவர். ஆம், ஒரு சிறந்த வாசிப்பாளன் ஒரு சமுதாயத்தையே செதுக்கும் சிற்பி ஆவான். வெடிகுண்டுகளை விட ஆபத்தானவை புத்தகங்களே. தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

காரணம் புத்தகங்கள் திறக்கும் போதெல்லாம் வெடிக்கும். புரட்டும் போதெல்லாம் வெடிக்கும். அயர்லாந்தில் பிறந்து ஹென்றி சார்ஜ் காரல் மார்க்ஸ் ஆகியோரின் புத்தகங்களை எல்லாம் படித்து எள்ளி நகையாடல் திறனில் உலகையே வியக்க வைத்தவர் ஜார்ஜ் பெர்னாட்ஷா அவர்கள். 1925 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற மாமேதை அவர். ஐரிய நாடக ஆசிரியராகவும் மதக் கோட்பாடுகளுக்கு எதிரான கருத்தைக் கொண்டவராகவும் உலகம் முழுவதும் அறியப்பட்ட மாமேதை தான் ஜார்ஜ் பெர்னாட்ஷா அவர்கள். தமிழ்த்துகள்

"தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கு ஒரு குணம் உண்டு அமிழ்தம் அவனது மொழியாகும் அன்பே அவனுடைய வழியாகும்" என்றார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார். தமிழ்த்துகள்

மானம் பெரிதான உயிர் விடுவான் மற்றவருக்காகத் துயர்ப்படுவான்

தானம் வாங்கிடக் கூசிடுவான் தருவது மேல் எனப் பேசிடுவான்" என்ற வரிகளுக்கு வாழும் அடையாளமாக இருந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். வேலைக்காரி, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ரங்கோன் ராதா, வண்டிக்காரன் மகன், சந்திரிகையின் கதை, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற நாடகங்களை நடத்திப் புகழ்பெற்றவர் பேரறிஞர் அண்ணா. தமிழ்த்துகள்

ஆரியமாயை என்ற அவரது நூலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் அளவுக்கு முரண்பாடான கருத்துகளை ஒரு இனத்தின் காவலனாக வைத்திருந்தார். கம்பரசம், நீதி தேவன் மயக்கம் என்ற தனது நூல்களின் மூலம் திராவிட இனத்துக்கு எதிரான மறைமுகத் தாக்குதலை அடையாளம் காட்டினார். நாடான்ற நற்றமிழர் நாதியற்றுத் திரிவதா? வணிகத்தால் வளங்கொளித்த பண்டைத் தமிழர் வறுமைக் குழியில் உழல்வதா என்று தன் அடுக்கு மொழிப் பேச்சால் மக்களை ஈர்த்தவர் அண்ணா. தமிழ்த்துகள்

அண்ணா என்ற மூன்று எழுத்துக்கு ஏற்ப மூன்று முத்தான திட்டங்களை தான் முதல்வர் பொறுப்பில் அமர்ந்ததும் கையெழுத்து இட்டவர் அண்ணா. ஆம் ஒரு நாட்டின் வரலாற்றைப் புரட்டிப் போட்டு இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு தேசியக் கட்சியை வீழ்த்தி மாநிலக் கட்சி ஆட்சிக்கு வந்தது 1967இல் அந்த அற்புதத்தை நிகழ்த்தியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். தமிழ்த்துகள்

மூன்று மொழிக் கொள்கையை இரு மொழிக் கொள்கையாக மாற்றியது; சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு மாநிலம் ஆக்கியது; சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டம் ஆக்கியது' என்ற மூன்று முத்தான திட்டங்கள் அண்ணாவின் ஆட்சியில் கையெழுத்தான முதல் கோப்பில் இருந்தன. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு இணங்க பேரறிஞர் அண்ணா அவர்கள் மிகச்சிறந்த வாசிப்பாளராக இருந்திருக்கிறார். இதனால் தந்தை பெரியாரின் கவனத்தையும் அவர் ஈர்த்திருக்கிறார். தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

பிராமணர் அல்லாதோர் இயக்கம் சுயமரியாதை இயக்கமாக திராவிடர் கழகமாக வளர்ந்தபோது பெரியாரின் போர்வாளாய் இருந்தவர் பேரறிஞர் அண்ணா. எழுத்தாலும் பேச்சாலும் நீதிக் கட்சியின் நன்மதிப்பைப் பெற்ற அண்ணா 1935இல் சென்னை மாநகராட்சி பெத்து நாயக்கன் பேட்டையில் வேட்பாளராகக் களம் இறங்கினார். தான் பயின்ற பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் அமைப்பின் தலைவராக செயலாளராக இருந்த அனுபவம் அவருக்குக் கை கொடுத்தது. தமிழ்த்துகள்

மண்ணடியில் தங்கியிருந்த அவரது கல்லூரி பேராசிரியர் திரு.வரதராஜன் அவர்களின் வழிகாட்டுதல் கை கொடுத்தது. பேராசிரியர்கள் மோசூர் கந்தசாமி, மணி திருநாவுக்கரசு ஆகியோர் கற்றுக் கொடுத்த சங்கத்தமிழ் அண்ணாவின் நாவில் நடமாடியது. குடியரசு, விடுதலை, திராவிட நாடு, மாலை மணி, நம் நாடு மற்றும் காஞ்சி வார இதழ் இவற்றில் எல்லாம் ஆசிரியராகப் பணியாற்றியவர் பேரறிஞர் அண்ணா. 1957இல் ஹோம் லேண்ட் என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கி நடத்தினார். தமிழ்த்துகள்

டி.வி.நாராயணசாமி, கே.ஆர்.ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எஸ்.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற நட்சத்திரங்களோடு தன் நாடகக் கலையை மக்கள் பணி செய்வதற்குப் பயன்படுத்தினார். பாட்டாளியின் வாழ்வு உயர்வதற்காக அவருடைய போர்க் குரல் ஒலித்தது. அதன் விளைவாகவே இன்றைக்கும் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. வரலாற்றையே மாற்றிப் போட்ட பேரறிஞர் அண்ணாவை பெர்னாட்ஷா என்று கூறுவதில் நாம் பெருமைப்பட வேண்டும். தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

1949இல் அவர் தொடங்கிய திராவிட முன்னேற்றகர் கழகம் 1957இல் 15 சட்டமன்ற உறுப்பினர்களோடு களம் இறங்கியது. அண்ணாவின் அரசியல் பயணம் 1962இல் 50 உறுப்பினர்களோடு எதிர்க்கட்சியில் அமர வைத்தது. 1967இல் ஆட்சிக் கட்டிலில் ஏற்றி வைத்து அழகுபார்த்தது. வரலாற்றுத் திருப்பங்கள் கொண்டது வாழ்க்கை ஆனால் வரலாற்றையே திருப்புவது என்பது அண்ணாவின் சாதனை! தமிழ்த்துகள்

சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை இவற்றுக்காக அரசியல் மேடைகளையும் அவர் நடத்திய இதழ்களையும் நாடகங்கள், சினிமாக்கள், எழுதிய நூல்கள் என்று அத்தனை ஊடகங்களையும் மொத்தமாகப் பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா. அவர்கள் அவருடைய வளர்ப்பு மகனான டாக்டர் பரிமளம் அவர்கள் எழுதிய அண்ணா வாழ்க்கை வரலாறு என்ற நூலில் சாமானியனைப் பற்றிக் கவலைப்படும் மக்கள் தலைவர் சமூகப் பாகுபாடுகளை அகற்றப் பிறந்த தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்த்துகள்

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 1938இல் தந்தை பெரியாருடன் கலந்து கொண்டு நான்கு மாத சிறை தண்டனை பெற்றவர் பேரறிஞர் அண்ணா. அதன் பிறகு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் இளைஞர்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு சிறை சென்றார். 40 ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட தமிழ்நாட்டை மொழிக்காக விட்டுக் கொடுக்க அவர் தயாராக இல்லை. 4 ஆண்டு அல்ல 40 ஆண்டுகள் சிறை சென்றாலும் விளைவுகள் குறித்து அஞ்சாமல் போராடுவேன் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குரல் கொடுத்தார். தமிழ்த்துகள்

மும்மொழிக் கொள்கை இந்தியப் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட போது சொன்ன காரணம் அது பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி என்பதால்தான். இதற்கு மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா பேசிய பேச்சு தேசியத் தலைவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பெரும்பான்மையாக இருக்கும் எலியை விட்டுவிட்டு புலியை ஏன் தேசிய விலங்காக மாற்றினீர்கள்? எங்கும் பார்க்கின்ற காக்கைகளை விட்டுவிட்டு மயிலை ஏன் தேசியப் பறவையாக அடையாளம் காட்டினீர்கள்? தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

உலகம் முழுவதும் பேசுவதற்கு ஆங்கிலம் உள்நாட்டில் உரையாடுவதற்கு இந்தியா என்ற அரசின் கொள்கையை எதிர்த்து ஒரு வீட்டில் பெரிய நாய் சென்று வருவதற்கு பெரிய கதவும் அதே கூட்டுக்குள் குட்டி நாய் சென்று வருவதற்கு சிறிய கதவும் என்பது போல் இருக்கிறது உங்களுடைய கொள்கை என்று எளியோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்தியை எதிர்த்தவர் பேரறிஞர்அண்ணா அவர்கள். தமிழ்த்துகள்

அவருடைய பேச்சைக் கேட்டபடி அன்றைய எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் அண்ணாவிடம் வந்து தங்களுடைய கருத்தை நான் ஏற்கவில்லை, ஆனால் நீங்கள் பேசியவிதம் என்னைக் கவர்ந்தது என்று கூறிச் சென்றாராம். எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்களையும் ஈர்க்கும் அண்ணாவின் ஆளுமைத் திறந்தான் அவரை மக்கள் தலைவர் ஆக்கியது. தமிழ்த்துகள்

மனிதநேயம், கருணை உள்ளம், பேரறிவு, பேச்சாற்றல், நாகரீகம், பொறாமையின்மை என்ற அவருடைய அரிய பண்புகள் எல்லாம் அரசியல் தலைவர்கள் இன்றைக்கும் பின்பற்ற வேண்டிய அரிச்சுவடிகள் தன் எழுத்தாலும் பேச்சாலும் தமிழகத்து மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர் பேரறிஞர் அண்ணா. தமிழ்த்துகள்

நம்முடைய பிறப்பு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம் ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் எண்ணிக்கை ஒன்றரைக் கோடி என்று கணித்திருக்கிறார்கள். ஒரு மக்கள் தலைவருக்கு இதைவிட வேறென்ன மரியாதை வேண்டும். இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்று இருக்கிறது. தமிழ்த்துகள்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற முப்பெரும் கொள்கைகளை வகுத்து தம்பிக்குக் கடிதம் எழுதி தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியவர் அண்ணா. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முழக்கமிட்டவர் அண்ணா. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணம் உண்டு என்று கூறி மதித்தவர் அண்ணா. சாமானியர்களுக்கு எட்டாத ஜார்ஜ் கோட்டையில் குடியேறிய பாட்டாளித் தோழன் பேரறிஞர் அண்ணா. தமிழ்த்துகள்

இரண்டு ஆண்டுகளே தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தாலும் இருண்டு கிடந்த தமிழகத்தை இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத பொன்னெழுத்தாய் மின்னுபவர் பேரறிஞர் அண்ணா. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்குப் புடம் போட்ட தங்கமாகப் பொன்னெழுத்துகளால் ஒரு பெயர் சொல்ல வேண்டும் என்றால் அவர் தான் பேரறிஞர் அண்ணா. அந்தத் தென்னாட்டு பெர்னாட்ஷாவை இந்நாளில் வணங்கி வாய்ப்புக்கு நன்றி பாராட்டி அமைகிறேன் நன்றி வணக்கம். தமிழ்த்துகள்

 

மு.முத்து முருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி. 9443323199                        தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM      தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive