AATCHI MOLI TAMIL KATTURAI ESSAY SPEECH COMPETITION
ஆட்சி மொழி தமிழ்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
முன்னுரை தமிழ்த்துகள்
பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்து இருப்பிலே
இருந்து வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோரேன மருப்பிலே
பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள். தமிழ்த்துகள்
கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் கோலோச்சியவர்கள் தமிழர்கள். முதற்சங்கமும்
இடைச்சங்கமும் கபாடபுரத்திலும் தென்மதுரையிலும் அமைந்திருந்தன. கடைச்சங்கம்தான் இன்றைய மதுரையில்
இருந்தது. உலகிற்கு நாகரிகத்தைக் கற்றுத் தந்தவர்கள் தமிழர்கள்.
பண்பட்ட மொழியாய்த் தமிழ் உள்ளது என்பதற்குச் சங்க இலக்கியங்களே சான்றாக உள்ளன. பேச்சு
மொழியாகவும் எழுத்து மொழியாகவும் காலத்தை வென்று நிற்கிறது தமிழ்மொழி. ஆட்சிமொழியாக
தமிழ் அமைந்து இன்றும் சிறந்து விளங்குகிறது. அன்னைத் தமிழின் அருமை காண்போம் வாரீர். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அந்நியர் பிடியில் தாய்நாடு தமிழ்த்துகள்
சங்க காலம் தொடங்கி பிற்கால பாண்டியர்கள் ஆட்சி வரை அரசுக் கட்டிலில்
அமர்ந்திருந்தது தமிழ்மொழி. சங்கம் மருவிய காலத்தில் அதன் வளர்ச்சி போற்றத்தக்கதாக
இல்லை. பல்லவ மன்னர்கள் வடமொழியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டினர். காஞ்சியில் கடிகைகள் அமைத்து வடமொழிக்
கல்லூரி செயல்பட்டது. தமிழ்த்துகள்
கிபி 1526 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுல்தான்கள் ஆட்சியும்
முகலாயர் படையெடுப்பும் நடந்தது. அதனைத் தொடர்ந்து நாயக்கர்கள் ஆட்சியில் ஏறத்தாழ 300 ஆண்டுகள் இருந்தது தமிழ்நாடு. அவர்களைத் தொடர்ந்துவந்த
ஐரோப்பியர்களான போர்ச்சுக்கீசியர் டச்சுக்காரர்கள் டேனிஷ்காரர்கள் பிரெஞ்சுக்காரர்கள்
ஆங்கிலேயர் ஆகியோர் கைகளில் நம் தாய்த்திருநாடு அடிமைப்பட்டுக்கிடந்தது. இனம் அடிமைப்பட்டதோடு
இல்லாமல் மொழிக் கலப்பு ஏற்படவும் இது வித்திட்டது. தமிழ்த்துகள்
மணிபிரவாளநடை தமிழ்த்துகள்
தனித்தியங்கும் தன்மை பெற்றது நம் தமிழ்மொழி. உலகில் வேறு எந்த
மொழிகளுக்கும் இல்லாத சொல்லாட்சி கொண்ட மொழி தமிழ். சொற்களஞ்சியப் பெருக்கமே தமிழின்
வளர்ச்சி. இருப்பினும் கலை, நாகரிகம், பண்பாடு, வணிக உறவு இவற்றால் பிற நாடுகளோடு கொண்ட
தொடர்பு மொழிக்கலப்பை ஏற்படுத்தியது. இனாம், கஜானா, ஜப்தி, ஜாமீன்,
பஜார், தாசில்தார், பந்தோபஸ்து போன்ற சொற்கள் அரேபியர்களின் வருகையால் தமிழில்
கலந்தன. சாமான், சன்னல், புஷ்பம், பூஜா, சாவி, ரயில், சரித்திரம்
போன்ற சொற்கள் இன்றைக்கும் நம் பேச்சு வழக்கில் இருக்கின்றன.
தமிழ்த்துகள்
வடசொல், திசைச்சொல், திரிசொல் என்று இயற்சொல் மருவிவிட்டது.
மறைமலை அடிகளா,ர் தேவநேயப் பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், தமிழ்த்
தென்றல் திரு.வி.க, பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார், ஆட்சி மொழிக்காவலர் கி.ராமலிங்கனார் போன்றோர் முயற்சியால் மணிபிரவாள நடை மீட்டெடுக்கப்பட்டது. தமிழைக் கொலை செய்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்றார் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழ்த்துகள்
ஆட்சி மொழியான தமிழ் மொழி
தமிழன் என்றோர் இனமுண்டு தமிழ்த்துகள்
தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்று பாடினார் நாமக்கல் கவிஞர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 17ஆம் பகுதி ஆட்சி மொழி பற்றிய பிரிவு 345-ன் படி தமிழ் ஆட்சி மொழியாக 27 : 12 : 1956 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. ஆட்சி மொழித் திட்ட
நிறைவேற்றக் குழு அமைக்கப்பட்டது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் தமிழ் ஆட்சி மொழியாக அமர்ந்திருக்கிறது என்பதை நாம் பெருமையோடு
கூறிக்கொள்ளலாம். தமிழ்த்துகள்
அது மட்டுமல்ல சிங்கப்பூர், மலேசியா,
மொரிசியஸ், பிஜுதீவுகள், தென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. 1968 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியில் ஆட்சி
மொழியாகவும் பயிற்று மொழியாகவும் தமிழ் அமைவதற்குச் சட்டம் இயற்றப்பட்டது. மும்மொழிக்
கொள்கை துடைத்து எறியப்பட்டு இரு மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஒரு மொழி ஆட்சி மொழி ஆவதற்கு அது தாய்மொழி என்னும் தகுதிக்கு
ஈடாக வேறு எந்தத் தகுதியும் பெற்றிருக்கத் தேவையில்லை' என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
கடந்து வந்த பாதையும் விதிவிலக்கும் தமிழ்த்துகள்
1968 இல் ஆட்சி மொழிக் குழு தமிழ்
வளர்ச்சித் துறை என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டது. தமிழ் வளர்ச்சி
இயக்குநர் இதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். திராவிட மொழிக் குடும்பத்தில் இருக்கக்கூடிய
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் மன்னராட்சி காலத்தில் வெகு சிறப்போடு இருந்தன. ஆங்கிலேயர் ஆட்சி முடிவுற்றதும்
தமிழைத் தவிர்த்து பிற மொழிவாரி மாநிலங்கள் எல்லாம் தாய் மொழியை முதன்மை அடையாளமாக
மீட்டெடுத்து விட்டன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் ஆங்கில மோகம் குறையவே இல்லை.
தமிழ்த்துகள்
தமிழர் உழைத்தனர் உயரவில்லை; சிந்தித்தனர் அறிஞராகவில்லை. காரணம் மொழி முரண்பாடு என்பதைத் தமிழ் அறிஞர்கள் அறிந்தனர்.
பொதுமக்களின் கடிதங்கள், சார்நிலை மாவட்ட அலுவலகக் கடிதங்கள், பிற துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள், அரசு செயலகத் துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள்
என்று நான்கு நிலைகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்குவது என்ற முடிவுக்கு வந்தது தமிழ்
வளர்ச்சித்துறை. 1963 இல் தொடங்கிய இப்பணி
1971 இல் நிறைவுக்கு வந்தது. மாவட்டக் கருவூலங்கள்
சம்பளக் கணக்கு அலுவலகங்கள் நீதிமன்றங்கள் பிற மாநில மைய அரசுக் கடிதங்கள் மேல்முறையீடு
சீராய்வுக்கு உட்படக்கூடிய சட்ட முறைகள் வெளிநாட்டுத் தூதரகத் தொடர்புகள் இவற்றுக்கு
மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டது. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
தேமதுரத் தமிழோசை
பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்தல் வேண்டும், தமிழ்த்துகள்
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் என்றார் மகாகவி பாரதியார். தமிழ்த்துகள்
அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்,
காமராசர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவை
பொறியியல் சொல்லகராதி, மருத்துவச் சொல்லகராதி, உயிரியல் சொல்லகராதி,
இயற்பியல் சொல்லகராதி, வணிகவியல் சொல்லகராதி உருவாக்கி உள்ளன. தமிழ்த்துகள்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இரண்டு லட்சம் கலைச்சொற்களைத் தொகுத்துள்ளது.
அகராதிகள் பேரகராதிகள் கலைக்களஞ்சியங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வரலாற்று
வரைவு திட்ட வல்லுநர் குழு ஏற்படுத்தப்பட்டது. செந்தமிழ்
சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதன் இயக்குநராகப் பாவாணர் செயல்பட்டார். சங்க
இலக்கியப் பதிவுகள் கணிப்பொறியில் ஏற்றப்பட்டு இணையம் மூலம் பன்னாட்டுத் தகவல் தொடர்பில்
இணைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மொழியின் அடுத்த கட்ட வளர்ச்சி ஆகும். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
முடிவுரை தமிழ்த்துகள்
வீரமாமுனிவர், ஜி.யு.போப், கால்டுவெல், பெர்சிவல் போன்ற வெளிநாட்டவர் தமிழ் கற்று தமிழ்த் தொண்டு செய்தனர். திருக்குறளும் நாலடியாரும் திருவாசகமும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இங்கே ஒரு தமிழ் மாணவன்
உறங்குகிறான் என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் ஜி.யு.போப் அவர்கள். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழ் மொழிக்குச் செம்மொழி நிலை அறிவிக்க
அயராது உழைத்தார். அதன்படி ஒன்றிய அரசால் 2004 ஜூலை 6 அன்று தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. தமிழ்த்துகள்
வணிக நிறுவனங்களிலும் தொழிலகங்களிலும் பெயர்ப்
பலகைகள் தமிழில் வைக்க வேண்டும். நாடகம், திரைப்படம், கட்டுரை உள்ளிட்ட செய்தி வாயில்கள்
அனைத்திலும் தமிழ் முத்திரை விதிக்க வேண்டும். தமிழ்நாட்டு கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு
இயல் இசை நாடக மன்றம் இவற்றின் மூலம் அரசு பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறது. ஆறு
கோடி தமிழர்களின் ஏட்டு மொழியாக நாட்டு மொழியாக பயிற்று மொழியாக விளங்குகின்றது தமிழ்.
ஆட்சி மொழியாக அதனை நாம் தொடர வேண்டும். தமிழ்த்துகள்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்க வேண்டும் தமிழ்த்துகள்
ஓடையிலே என் சாம்பல் கரையும் போதும்
ஒண்டமிழே சலசலத்து ஓட வேண்டும் என்ற யாழ்ப்பாணத்துக் கவிஞரின் வரிகளில் நனைவோம்! தமிழ் வளர்ச்சிக்கு என்றும் துணையாய்
இருப்போம்.தமிழ்த்துகள்
மு.முத்து முருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி. 9443323199 தமிழ்த்துகள்