Thennattu Bernatsha perarignar anna tamil speech pechu essay katturai competition
தென்னாட்டுப் பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்
தோன்றிய மூத்த குடியாம் தமிழ்க்குடிக்குத் தனி அடையாளமாய் விளங்குகின்ற என் தாய்த்
தமிழை வணங்கித் தொடங்குகின்றேன். பேரறிவு கொண்ட அவைத்தலைவர் அவர்களே! பேரன்பு
கொண்ட அன்பு உடன்பிறப்புகளே: உங்கள் அனைவருக்கும் அடியேனின் அன்பு
வணக்கங்கள். தமிழ்த்துகள்
தடுமாறும் போதெல்லாம் தாங்கிப் பிடிப்பவள்
தாய். அப்படிப்பட்ட தாய் நாட்டையும் தாய் மொழியையும் நாம் எப்போதும் மறக்கக்
கூடாது. ஒரு மொழி அழியுமானால் அந்த இனமே அழியும் என்பதைத் தன் அடுக்கு மொழிப்
பேச்சால் நாட்டு மக்களுக்குப் புரிய வைத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அண்ணா என்று
எழுத நினைக்கும் போதெல்லாம் பேரறிஞர் என்ற சொல் தானாக முன்னே வந்து நிற்கிறதே என்ன
காரணம்? தமிழ்த்துகள்
அவர் பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர்
என்பதனால் மட்டுமல்ல, காஞ்சிபுரத்தில் பிறந்தார் என்பதால்
மட்டுமல்ல, தந்தை பெரியாரைத் தலைவராகக் கொண்டவர்
என்பதால் மட்டும் அல்ல, கன்னிமாரா நூல் நிலையத்தில் முதல் ஆளாக
உள்ளே நுழைந்து கடைசி ஆளாக வெளியே வரும் வாசிப்பாளர் அவர். ஆம், ஒரு
சிறந்த வாசிப்பாளன் ஒரு சமுதாயத்தையே செதுக்கும் சிற்பி ஆவான். வெடிகுண்டுகளை விட
ஆபத்தானவை புத்தகங்களே. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
காரணம் புத்தகங்கள் திறக்கும் போதெல்லாம்
வெடிக்கும். புரட்டும் போதெல்லாம் வெடிக்கும். அயர்லாந்தில் பிறந்து
ஹென்றி சார்ஜ் காரல் மார்க்ஸ் ஆகியோரின் புத்தகங்களை எல்லாம் படித்து எள்ளி
நகையாடல் திறனில் உலகையே வியக்க வைத்தவர் ஜார்ஜ் பெர்னாட்ஷா அவர்கள். 1925 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற மாமேதை அவர். ஐரிய நாடக ஆசிரியராகவும் மதக் கோட்பாடுகளுக்கு எதிரான கருத்தைக்
கொண்டவராகவும் உலகம் முழுவதும் அறியப்பட்ட மாமேதை தான் ஜார்ஜ் பெர்னாட்ஷா அவர்கள். தமிழ்த்துகள்
"தமிழன்
என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கு ஒரு குணம் உண்டு அமிழ்தம்
அவனது மொழியாகும் அன்பே அவனுடைய வழியாகும்" என்றார் நாமக்கல் கவிஞர்
ராமலிங்கனார். தமிழ்த்துகள்
மானம் பெரிதான உயிர் விடுவான் மற்றவருக்காகத்
துயர்ப்படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான் தருவது
மேல் எனப் பேசிடுவான்" என்ற வரிகளுக்கு வாழும் அடையாளமாக இருந்தவர் பேரறிஞர்
அண்ணா அவர்கள். வேலைக்காரி, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ரங்கோன்
ராதா, வண்டிக்காரன்
மகன், சந்திரிகையின்
கதை, ஓர்
இரவு, நல்லதம்பி
போன்ற நாடகங்களை நடத்திப் புகழ்பெற்றவர் பேரறிஞர் அண்ணா. தமிழ்த்துகள்
ஆரியமாயை என்ற அவரது நூலுக்கு எதிராக வழக்கு
தொடுக்கும் அளவுக்கு முரண்பாடான கருத்துகளை ஒரு இனத்தின் காவலனாக வைத்திருந்தார்.
கம்பரசம், நீதி
தேவன் மயக்கம் என்ற தனது நூல்களின் மூலம் திராவிட இனத்துக்கு எதிரான மறைமுகத்
தாக்குதலை அடையாளம் காட்டினார். நாடான்ற நற்றமிழர் நாதியற்றுத் திரிவதா? வணிகத்தால்
வளங்கொளித்த பண்டைத் தமிழர் வறுமைக் குழியில் உழல்வதா என்று தன் அடுக்கு மொழிப்
பேச்சால் மக்களை ஈர்த்தவர் அண்ணா. தமிழ்த்துகள்
அண்ணா என்ற மூன்று எழுத்துக்கு ஏற்ப மூன்று
முத்தான திட்டங்களை தான் முதல்வர் பொறுப்பில் அமர்ந்ததும் கையெழுத்து இட்டவர்
அண்ணா. ஆம் ஒரு நாட்டின் வரலாற்றைப் புரட்டிப் போட்டு இந்தியாவிலேயே முதன்முறையாக
ஒரு தேசியக் கட்சியை வீழ்த்தி மாநிலக் கட்சி ஆட்சிக்கு வந்தது 1967இல் அந்த
அற்புதத்தை நிகழ்த்தியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். தமிழ்த்துகள்
மூன்று மொழிக் கொள்கையை இரு மொழிக் கொள்கையாக
மாற்றியது; சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு மாநிலம்
ஆக்கியது; சுயமரியாதைத்
திருமணங்களைச் சட்டம் ஆக்கியது' என்ற
மூன்று முத்தான திட்டங்கள் அண்ணாவின் ஆட்சியில் கையெழுத்தான முதல் கோப்பில்
இருந்தன. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு இணங்க பேரறிஞர் அண்ணா
அவர்கள் மிகச்சிறந்த வாசிப்பாளராக இருந்திருக்கிறார்.
இதனால் தந்தை பெரியாரின் கவனத்தையும் அவர் ஈர்த்திருக்கிறார். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
பிராமணர் அல்லாதோர் இயக்கம் சுயமரியாதை
இயக்கமாக திராவிடர் கழகமாக வளர்ந்தபோது பெரியாரின் போர்வாளாய் இருந்தவர் பேரறிஞர்
அண்ணா. எழுத்தாலும் பேச்சாலும் நீதிக் கட்சியின் நன்மதிப்பைப் பெற்ற அண்ணா 1935இல்
சென்னை மாநகராட்சி பெத்து நாயக்கன் பேட்டையில் வேட்பாளராகக் களம் இறங்கினார். தான்
பயின்ற பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் அமைப்பின் தலைவராக செயலாளராக இருந்த
அனுபவம் அவருக்குக் கை கொடுத்தது. தமிழ்த்துகள்
மண்ணடியில் தங்கியிருந்த அவரது கல்லூரி
பேராசிரியர் திரு.வரதராஜன் அவர்களின் வழிகாட்டுதல் கை
கொடுத்தது. பேராசிரியர்கள் மோசூர் கந்தசாமி, மணி திருநாவுக்கரசு ஆகியோர் கற்றுக் கொடுத்த
சங்கத்தமிழ் அண்ணாவின் நாவில் நடமாடியது. குடியரசு, விடுதலை, திராவிட நாடு, மாலை
மணி, நம்
நாடு மற்றும் காஞ்சி வார இதழ் இவற்றில் எல்லாம் ஆசிரியராகப் பணியாற்றியவர்
பேரறிஞர் அண்ணா. 1957இல் ஹோம் லேண்ட் என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கி
நடத்தினார். தமிழ்த்துகள்
டி.வி.நாராயணசாமி, கே.ஆர்.ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எஸ்.ராமச்சந்திரன், சிவாஜி
கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன்
போன்ற நட்சத்திரங்களோடு தன் நாடகக் கலையை மக்கள் பணி செய்வதற்குப்
பயன்படுத்தினார். பாட்டாளியின் வாழ்வு உயர்வதற்காக அவருடைய போர்க் குரல் ஒலித்தது. அதன்
விளைவாகவே இன்றைக்கும் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. வரலாற்றையே
மாற்றிப் போட்ட பேரறிஞர் அண்ணாவை பெர்னாட்ஷா என்று கூறுவதில் நாம் பெருமைப்பட
வேண்டும். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
1949இல் அவர் தொடங்கிய திராவிட முன்னேற்றகர் கழகம் 1957இல் 15 சட்டமன்ற உறுப்பினர்களோடு களம் இறங்கியது. அண்ணாவின்
அரசியல் பயணம் 1962இல் 50 உறுப்பினர்களோடு எதிர்க்கட்சியில் அமர
வைத்தது. 1967இல் ஆட்சிக் கட்டிலில் ஏற்றி வைத்து
அழகுபார்த்தது. வரலாற்றுத் திருப்பங்கள் கொண்டது வாழ்க்கை
ஆனால் வரலாற்றையே திருப்புவது என்பது அண்ணாவின் சாதனை! தமிழ்த்துகள்
சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை இவற்றுக்காக அரசியல் மேடைகளையும்
அவர் நடத்திய இதழ்களையும் நாடகங்கள், சினிமாக்கள்,
எழுதிய நூல்கள் என்று அத்தனை ஊடகங்களையும் மொத்தமாகப் பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா.
அவர்கள் அவருடைய வளர்ப்பு மகனான டாக்டர் பரிமளம் அவர்கள் எழுதிய அண்ணா
வாழ்க்கை வரலாறு என்ற நூலில் சாமானியனைப் பற்றிக் கவலைப்படும் மக்கள் தலைவர்
சமூகப் பாகுபாடுகளை அகற்றப் பிறந்த தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்த்துகள்
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 1938இல்
தந்தை பெரியாருடன் கலந்து கொண்டு நான்கு மாத சிறை தண்டனை பெற்றவர் பேரறிஞர் அண்ணா.
அதன் பிறகு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் இளைஞர்களின் பிரதிநிதியாகக்
கலந்து கொண்டு சிறை சென்றார். 40 ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட தமிழ்நாட்டை மொழிக்காக
விட்டுக் கொடுக்க அவர் தயாராக இல்லை. 4 ஆண்டு அல்ல 40 ஆண்டுகள் சிறை சென்றாலும்
விளைவுகள் குறித்து அஞ்சாமல் போராடுவேன் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குரல்
கொடுத்தார். தமிழ்த்துகள்
மும்மொழிக் கொள்கை இந்தியப் பாராளுமன்றத்தில்
அறிவிக்கப்பட்ட போது சொன்ன காரணம் அது பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி
என்பதால்தான். இதற்கு மாநிலங்களவை உறுப்பினராக இருந்த
அண்ணா பேசிய பேச்சு தேசியத் தலைவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பெரும்பான்மையாக இருக்கும் எலியை விட்டுவிட்டு புலியை ஏன் தேசிய விலங்காக
மாற்றினீர்கள்? எங்கும் பார்க்கின்ற காக்கைகளை விட்டுவிட்டு
மயிலை ஏன் தேசியப் பறவையாக அடையாளம் காட்டினீர்கள்? தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
உலகம் முழுவதும் பேசுவதற்கு ஆங்கிலம்
உள்நாட்டில் உரையாடுவதற்கு இந்தியா என்ற அரசின் கொள்கையை எதிர்த்து ஒரு
வீட்டில் பெரிய நாய் சென்று வருவதற்கு பெரிய கதவும் அதே கூட்டுக்குள் குட்டி நாய்
சென்று வருவதற்கு சிறிய கதவும் என்பது போல் இருக்கிறது உங்களுடைய கொள்கை என்று
எளியோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்தியை எதிர்த்தவர் பேரறிஞர்அண்ணா அவர்கள். தமிழ்த்துகள்
அவருடைய பேச்சைக் கேட்டபடி அன்றைய
எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்
அவர்கள் அண்ணாவிடம் வந்து தங்களுடைய கருத்தை நான் ஏற்கவில்லை,
ஆனால் நீங்கள் பேசியவிதம் என்னைக் கவர்ந்தது என்று கூறிச் சென்றாராம்.
எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்களையும் ஈர்க்கும் அண்ணாவின் ஆளுமைத் திறந்தான்
அவரை மக்கள் தலைவர் ஆக்கியது. தமிழ்த்துகள்
மனிதநேயம், கருணை உள்ளம், பேரறிவு, பேச்சாற்றல், நாகரீகம்,
பொறாமையின்மை என்ற அவருடைய அரிய பண்புகள் எல்லாம் அரசியல் தலைவர்கள் இன்றைக்கும்
பின்பற்ற வேண்டிய அரிச்சுவடிகள் தன் எழுத்தாலும் பேச்சாலும் தமிழகத்து மக்களின்
நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர் பேரறிஞர் அண்ணா. தமிழ்த்துகள்
நம்முடைய பிறப்பு வேண்டுமானால் சாதாரணமாக
இருக்கலாம் ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அந்த
வகையில் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் எண்ணிக்கை ஒன்றரைக் கோடி
என்று கணித்திருக்கிறார்கள். ஒரு மக்கள் தலைவருக்கு இதைவிட வேறென்ன மரியாதை
வேண்டும். இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்று இருக்கிறது. தமிழ்த்துகள்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற முப்பெரும்
கொள்கைகளை வகுத்து தம்பிக்குக் கடிதம் எழுதி தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியவர்
அண்ணா. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முழக்கமிட்டவர் அண்ணா. மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும் நல்ல மணம் உண்டு என்று கூறி மதித்தவர் அண்ணா. சாமானியர்களுக்கு
எட்டாத ஜார்ஜ் கோட்டையில் குடியேறிய பாட்டாளித் தோழன் பேரறிஞர் அண்ணா. தமிழ்த்துகள்
இரண்டு ஆண்டுகளே தமிழகத்தின் முதலமைச்சராக
இருந்தாலும் இருண்டு கிடந்த தமிழகத்தை இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத பொன்னெழுத்தாய்
மின்னுபவர் பேரறிஞர் அண்ணா. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல
வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்குப் புடம் போட்ட
தங்கமாகப் பொன்னெழுத்துகளால் ஒரு பெயர் சொல்ல வேண்டும் என்றால் அவர் தான் பேரறிஞர்
அண்ணா. அந்தத் தென்னாட்டு பெர்னாட்ஷாவை இந்நாளில்
வணங்கி வாய்ப்புக்கு நன்றி பாராட்டி அமைகிறேன் நன்றி வணக்கம். தமிழ்த்துகள்
மு.முத்து முருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி. 9443323199 தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்