பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
27-02-2023 முதல் 03-03-2023
2.திருப்புதல் வினாக்கள்
கவிஞர் தாம்
கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
பண்என்னாம்
பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத
கண்.– இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
வழு, வழாநிலை, வழுவமைதியை விளக்குக. தமிழ்த்துகள்
பலரிடம் உதவி
பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும்
அருகில் சேர்க்கவில்லை.
அவருக்கு
உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை ?
முதல் மழை
விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவி பாடுகிறார்?
அடிபிறழாமல்
எழுதுக. தமிழ்த்துகள்
தூசும் துகிரும் எனத்தொடங்கும் சிலப்பதிகாரம் மனப்பாடப் பாடல்
விருந்தினனாக எனத்தொடங்கும் காசிக்காண்டம் மனப்பாடப் பாடல்
மொழிபெயர்க்க. தமிழ்த்துகள்
1)
Education is what remains after one has forgotten what one has learned in School.
– Albert Einstein.
2)
Tomorrow is often the busiest day of the week. – Spanish Proverb.
3)
It is during our darkest moments that we must focus to see the light –
Aristotle.
4)
Success is not final, failure is not fatal. It is the courage to continue that
counts. – Winston Churchill.
ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை, வார
இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க. தமிழ்த்துகள்
தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
அழகிரிசாமியின்
ஒருவன் இருக்கிறான் சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து
எழுதுக. தமிழ்த்துகள்
அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள
பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
சான்றோர் வளர்த்த தமிழ் – கட்டுரை எழுதுக.
உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று
வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக. தமிழ்த்துகள்
விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.
அ.உழைப்பாளிகளின் உணர்வுகளாக உள்ளவை நிகழ்த்து கலைகள். தமிழ்த்துகள்
ஆ.மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில்
குறிப்பிட்டுள்ளார்.
ஹிப்பாலஸ் - குறிப்பு வரைக.
உயிர்கள்
உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக்
குறிப்பிடுக. தமிழ்த்துகள்
காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி
என்பதற்குச் சான்று தருக.
தரும் – என முடியும் திருக்குறளை எழுதுக. தமிழ்த்துகள்