கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, February 19, 2023

மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 6 தமிழ் பருவம் 3 இயல் 3 ஆசியஜோதி model notes of lesson 6th term 3 unit 3

 

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

27-02-2023 முதல் 03-03-2023

2.பருவம்

3

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

இன்னுயிர் காப்போம் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

ஆசிய ஜோதி

6.பக்கஎண்

42 - 45

7.கற்றல் விளைவுகள்

T-602 தாங்கள் பார்த்த, கேட்ட உள்ளூர் சமூக நிகழ்வுகள், செயல்பாடுகள். சடங்குகள் போன்றவற்றைப் பற்றித் தயக்கமின்றி வினா எழுப்பவும், கலந்துரையாடவும் செய்தல்.

8.திறன்கள்

பிற உயிர்களைத் தம் உயிர் போல் மதித்தல்.

பிற உயிர்களுக்குத் துன்பம் தராமல் இருத்தல்.

9.நுண்திறன்கள்

புத்தரின் அறவுரைகள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/03/3-3-asiya-jyothi-6th-tamil-kuruvina.html

https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-6th-tamil-mindmap-term-3-unit-3.html

https://tamilthugal.blogspot.com/2021/04/class77-bridge-course.html

11.ஆயத்தப்படுத்துதல்

புத்தர் குறித்து அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

கவிமணி பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஆசியஜோதி பாடப்பகுதி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். பாடலை மாணவர்களுக்கு விளக்குதல். இரக்க குணம் பற்றிக் கூறுதல். அனைத்து உயிர்களையும் தம் உயிர் போல் நேசித்தல் பற்றிக் கூறி வாழ்வில் கடைப்பிடிக்க உறுதி எடுத்தல்.

          புத்தர் குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். அறவுரை குறித்து அறியச் செய்தல். கவிமணி பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

ஆசியஜோதி குறித்து விளக்குதல். புத்தர் கூறும் பல்வேறு அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.

15.மதிப்பீடு

          LOT – கும்பி என்பதன் பொருள் ..............................

          MOT – அரசனாலும் செய்ய முடியாத செயலை எழுதுக.

HOT – விலங்குகள் சுதந்திரமாக வாழ நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீங்கள் மிகவும் விரும்பும் தாவரங்கள், பறவைகள், விலங்குகளின் பெயர்களைக் கூறுங்கள்.

புத்தர் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive