கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, February 19, 2023

மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் பருவம் 3 இயல் 3 மலைப்பொழிவு, தன்னை அறிதல் model notes of lesson 7th term 3 unit 3

 

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

27-02-2023 முதல் 03-03-2023

2.பருவம்

3

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

மானுடம் வெல்லும் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

மலைப்பொழிவு, தன்னை அறிதல்

6.பக்கஎண்

46 - 50

7.கற்றல் விளைவுகள்

T-714 படிக்கும்போது வகுப்புத் தோழர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் பாடப்பொருள்களைப் புரிந்துகொள்வதுடன், அகராதிகள், வரைபடங்கள், பார்வை நூல்கள், இணையத்தளம் அல்லது பொருள்கள் ஆகியவற்றின் துணை கொண்டு பொருண்மையைத் தெளிவாக அறிதல்.

8.திறன்கள்

பாடலின் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்.

9.நுண்திறன்கள்

அன்பு, அமைதி குறித்து அறிதல்.

தனித்திறமையை அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2020/02/malaipozhivu.html

https://tamilthugal.blogspot.com/2021/02/3-3-malaipozhivu-7th-tamil-kuruvina.html

https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-7th-tamil-mindmap-term-3-unit-3.html

https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-7th-tamil-mindmap-term-3-unit-3_19.html

https://tamilthugal.blogspot.com/2021/03/3-3-thannai-arithal-kuruvina-7th-tamil.html

11.ஆயத்தப்படுத்துதல்

பிடித்த பாடல்களைக் கூறச்செய்தல்.

கண்ணதாசன் குறித்து அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

தன்னம்பிக்கை பற்றிய கதையைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          மலைப்பொழிவு பாடல் குறித்து விளக்குதல். இயேசு காவியம், கண்ணதாசன் குறித்த தகவல்களை மாணவர்களுடன் பகிர்தல். அன்பு, அமைதி குறித்த நன்மைகள் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

          தன்னை அறிதல் பாடலைக் கதையாக விளக்குதல். மாணவர்களை அவர்களின் தனித்திறமை குறித்துக் கூறச் செய்தல். காகம், குயில் குறித்து மாணவர்களைப் பேசச் செய்தல். தன்னம்பிக்கையோடு வாழப் பழகுதல்.

 




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

அன்பு, அமைதி, தன்னம்பிக்கை குறித்துப் பேசுதல். புதிய சொற்களுக்கு அகராதி மூலம் பொருள் அறிதல்.

15.மதிப்பீடு

          LOT –கூடு கட்டத் தெரியாத பறவை ................................

          MOT – இந்த உலகம் யாருக்கு உரியது?

HOT – உங்களிடம் உள்ள தனித்தன்மைகள் குறித்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுக்கு உரிய தனித்தன்மைகளை எழுதுக.

கண்ணதாசன் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive