கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, June 28, 2024

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் *நாள்: 28-06-2024*

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 

 *நாள்: 28-06-2024*
*கிழமை: வெள்ளிக்கிழமை* 

*திருக்குறள்*

பால் :அறத்துப்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: கல்வி 

 *குறள் : 405*

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

பொருள்: கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக்கொள்ளும் மதிப்பு
( கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்பேச்சினால் கெடும்.

 *பழமொழி :* 

Every tide has its ebb. 
 ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு.

 *ஈரொழுக்கப் பண்புகள் :* 

*மழைநீரே குடிநீருக்கு ஆதாரம் என்பதால் மழை நீரை சேமிப்பேன்.

*தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

 *பொன்மொழி :* 

"உன்னால் முடியாது என பலர் கூறிய வார்த்தைகளே என்னை வெற்றியின் பக்கம் தள்ளியது!"----- ஜாக்கிசான்

 *பொது அறிவு :* 

1. “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர் யார்?

விடை: லாலா லஜபதிராய்

2. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?

விடை: ஆரியபட்டா

 *English words & meanings :* 

 candor- கள்ளங்கபடமின்மை,
frankness-வெளிப்படையாக

 *வேளாண்மையும் வாழ்வும் :* 

உற்பத்தியினைப் பெருக்கிட விவசாயிகளுக்கு தரமான விதைகள், உரங்கள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவற்றை சரியான நேரத்தில் அளிப்பது, ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட உயர் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது போன்ற முக்கிய பணிகளை இத்துறை செய்து வருகிறது

 *ஜூன் 28* 

 *பி. வி. நரசிம்ம ராவ்  அவர்களின் பிறந்தநாள்* 

பி. வி. நரசிம்ம ராவ்,  இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.இந்திய அரசியலமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க பாடுபட்டவர்.

 *நீதிக்கதை* 

 *யார் பொறுப்பு* 

ஒரு குருவும் ஒரு சீடனும் ஒட்டகத்தின் மேல் பயணம் செய்து ஒரு பாலைவனத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். ஒட்டகத்தை பராமரிப்பது சீடரின் பொறுப்பு.

 அன்று இரவு  படுக்கைக்கு சென்ற பின் தான் ஒட்டகத்தை கட்டவில்லை என்று ஞாபகம் வந்தது மிகவும் களைப்பாக இருந்ததால்  கடவுளிடம் எனது ஒட்டகத்தை பத்திரமாக பார்த்துக் கொள்வது தங்களின் பொறுப்பு என்று வேண்டினான்.

 மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ஒட்டகத்தை காணவில்லை. குரு ஒட்டகத்தை காணவில்லை என்று சீடனை திட்டினார்.  

அதற்கு சீடன்,  "நீங்கள் கோபப்படுவதாக இருந்தால் கடவுளிடம் தான் கோபப்பட வேண்டும் ஏனென்றால் நீங்கள் தானே கடவுளை முழுமையாக நம்ப வேண்டும் என்று கூறினீர்கள்,நான் கடவுளை முழுமையாக நம்பி ஒட்டகத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை  ஒப்படைத்தேன்" என்றார்.

அதற்கு குரு கடவுள் உனக்கு உணவை கொடுக்கிறார் அதை எடுத்து உண்பது உன் பொறுப்புதானே! கடவுள் வந்து ஊட்டி விடட்டும் என்று நீ காத்துக் கொண்டிருக்கிறாயா? இல்லைதானே அதுபோல ஒட்டகத்தை கட்டி வைக்க வேண்டியது உனது பொறுப்பு. நமது கடமையை நாம் தான் செய்ய வேண்டும் அதற்கு உதவுவதை மட்டுமே கடவுள் செய்வார் என்றார் குரு.

 நமது முயற்சியை  நூறு சதவிகிதம்  கொடுத்தால் அந்த முயற்சி பலனளிக்க கடவுள் நிச்சயம் உதவுவார்.

 *இன்றைய செய்திகள்* 

 *28.06.2024* 

மின்னழுத்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண ரூ.200 கோடி மதிப்பில் 2,500 மின்மாற்றிகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப் பேரவையில் அறிவித்தார்.

கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க இடத்தேர்வு பணி தொடக்கம் - பேரவையில் அமைச்சர் உதயநிதி தகவல்.

வெளி மாநில பதிவு எண் கொண்டஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க கூடாது என்ற தமிழகஅரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு , புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் நடுத்தர தூர-நுண்ணலை மறைப்பு ராக்கெட்டை இந்தியக் கடற்படையிடம் ஒப்படைத்தது.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இன்று நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி ஜார்ஜியா அசத்தல் வெற்றி.

 ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு பரிசுத் தொகை அதிகரிப்பு: இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு.

 *Today's Headlines* 

Minister Thangam Thennarasu announced in the  Legislative Assembly that 2,500 transformers will be set up across Tamil Nadu at a cost of Rs 200 crore to solve the power problem.

 Site selection for cricket stadium in Coimbatore begins - Minister Udayanidhi informed in assembly.

The Supreme Court has placed an interim stay on the Tamil Nadu government's order not to operate  Omni buses with out-of-state registration numbers in Tamil Nadu.

The Defense Research and Development Organization handed over the medium-range-microwave cloaking missile to the Indian Navy at a ceremony held in New Delhi yesterday.

 European Football Championship: Georgia thrashes Portugal in today's match

Increase in prize money for Olympic medal winners: Indian Olympic Association decision.

தமிழ்த்துகள்

Blog Archive