கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 17, 2024

உலகின் குருவாக எங்கள் பாரதம் தமிழ்ப் பேச்சு கட்டுரை

 Our Bharat as Guru of the World tamil speech essay

உலகின் குருவாக எங்கள் பாரதம்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

முத்துத் தமிழ் பதித்து மூன்று நெறி வளர்த்து கத்தும் கடல் மீது கலங்களில் விளையாடும் தென்பாண்டி மண்டலமே: கூத்தன் இருந்தான்; குறள் அரசன் அங்கிருந்தான்; வார்த்தைத் தமிழுக்கு வளையாத கம்பன் இருந்தான், நக்கீரன், நன்னாகன், நப்பசலை, ஒக்கூர் மாசாத்தி, ஒண் சாத்தன், சிலம்பெடுத்த தக்கோன் வளர்த்த எங்கள் மாத்தமிழே! தமிழ்த்துகள்

யாப்பிலாப் பாடலேனும் யார் தரும் கவிதையேனும் மா பலா போல் மடியில் வாங்கித் தமிழ் வளர்த்த பாரதமே: என் நாவில் நின்று நடமாடும் நற்றமிழே உன்னை வணங்கித் தொடர்கிறேன். அருள்வாய் தாயே! ஆதவனின் கதிர்களாய் அறிவு ஒளி வீசி அமர்ந்திருக்கும் ஆன்றோரே சான்றோரே என் போன்றோரே! உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம். தமிழ்த்துகள்

மாதா பிதா குரு தெய்வம் என்று போற்றி வளர்த்தவர்கள் நம் முன்னோர். உலகிற்குப் பண்பாட்டைப் பறைசாற்றிய தொன்மை மிக்க நாகரிகம் தமிழர் நாகரிகம். அதனால்தான் பாட்டுக்கொரு புலவன் பாரதி, தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

பாரத பூமி பழம் பெரும் பூமி தமிழ்த்துகள்

நீர் அதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர் என்று. சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்ததடி பாப்பா என்று அந்த மகாகவி கூறக் காரணம் என்ன?

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் பெருமை மிகுந்த வரிகள் உலகின் ஒட்டுமொத்த நாகரிக வளர்ச்சிக்கு நாங்கள் தான் முன்னோடி என்பதைப் பறைசாற்றுகின்றன.              தமிழ்த்துகள்

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்கிறார் திருமூலர்.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் தமிழ்த்துகள்

படமாடக் கோயில் பகவற்கு அதாமே

இந்த வரிகள் உணர்த்தும் உண்மை என்ன?

கோவிலுக்குள் இருக்கின்ற இறைவனுக்கு நாம் செய்யும் பூசைகளால் அடியார்கள் பயன்பெற மாட்டார்கள். ஆனால் அடியார்களுக்கு நாம் செய்யும் உதவி அந்த இறைவனுக்குச் சென்று சேரும். கம்யூனிசத் தத்துவத்தை இப்படியும் சொல்லலாம் என்பதற்குத் திருமூலர் தானே மூலாதாரமாக இருந்திருக்கிறார்.              தமிழ்த்துகள்

இராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்கள் பாரத நாட்டுப் பண்பாட்டின் அடையாளங்கள். போர் முறையும் வாழ்க்கை முறையும் இணைந்த தத்துவங்கள் அவை. இன்றளவும் உலகிற்குப் பாடங்களாகப் பல்கலைக்கழகங்களாக இருந்து வருகின்றன.              தமிழ்த்துகள்

வேற்றுமையில் ஒற்றுமை தான் பாரதம், தம்பி வேதங்கள் பிறந்த இடம் பாரதம், ஆற்று வளம் சோற்று வளம் கொஞ்சமா, இல்லை ஆன்மீகத் தத்துவம் தான் பஞ்சமா? தமிழ்த்துகள்

இனங்கள் பல மொழிகள் பல ஆயினும் இந்து இயேசு புத்த முகமதியர் ஆயினும் ஒன்று நாடு உடன் பிறந்தோர் யாவரும் எனும் உணர்வினிலே வளர்ந்து வரும் நாடு இது என்று சாதி மத இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்தியர் என்ற உணர்வால் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

இது பாரதத்திற்கான ஒற்றுமை மட்டும் அல்ல உலக ஒற்றுமைக்கான அடித்தளம் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது அல்லவா? தமிழ்த்துகள்

ஊருடன் கூடி வாழ், ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும், என்று உரைக்கக் கேட்டோம்.

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்தமிழ்த்துகள்

கல்லார் அறிவிலா தார் என்று உலகப் பொதுமறையாம் திருக்குறள் சொல்லுகிறது. உலக மக்களோடு இணைந்து வாழும் நெறியைக் கல்லாதவர் கற்றாலும் கல்லாதவராகவே கருதப்படுவர் என்கிறார் திருவள்ளுவர். தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அன்பிற்கான ஏக்கம் எங்கே இருக்கிறதோ அங்கெல்லாம் தேடித் தேடிச் சென்று உதவி செய்ததால்தானே தெரசா அன்னை தெரசா ஆனார்.                            தமிழ்த்துகள்

என்பே விறகா இறைச்சி அறுத்து இட்டுப்

பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும்

அன்போடு உருகி அகம் குழைவார்க்கு தமிழ்த்துகள்

அன்றிஎன் பொன்மணியை எய்த ஒன்னாதே என்று திருமந்திரம் அன்றே சொல்லிவிட்டதே.

அன்பு ஒன்றால்தான் இந்த உலகம் இயங்குகிறது. அன்பு ஒன்று இல்லை என்றால் எல்லாம் வல்ல இறைவனை அணுக முடியாது என்பதைத் திட்டவட்டமாக இந்த உலகிற்கு எடுத்துச் சொன்ன பாரதம் தானே உலகின் குருவாக இருக்க முடியும். தமிழ்த்துகள்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்                தமிழ்த்துகள்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று உருவமாய் அருவமாய் இருக்கிறான் இறைவன்; அந்த இறைவன் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுவான் என்பதை இதைவிட எப்படித் தெள்ளத் தெளிவாகச் சொல்ல முடியும். தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் ஏவுகணைகளும் பெருகிவிட்ட மேற்கத்திய நாகரிகத்தில் பாதுகாப்பு இல்லை; மன நிம்மதி இல்லை. இவற்றையெல்லாம் வளர்ந்து விட்ட நாடுகள் பட்டியலில் வைத்து விட்டார்கள் ஆனால் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று கண்ட புத்தன் பிறந்த புண்ணிய பூமி நம் பாரத பூமி. சத்தியமேவ ஜெயதே என்று கூறிய முண்டக உபநிஷதம் பிறந்தது இந்த பாரத மண்ணில் தான்.                   தமிழ்த்துகள்

கத்தியின்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர் என்று நாமக்கல் கவிஞர் அறைகூவல் விடுத்தாரே அந்தச் சிறப்புக்கு உரிய காந்தி மகான் பிறந்ததும் இந்தப் பாரத மண்ணில் தான். அகிம்சை என்ற ஓர் ஆயுதத்தை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் இந்தியர்கள் தானே? தமிழ்த்துகள்

இதைத்தான்

நெட்டிருப்புப் பாரைக்கு நெக்கு விடாப் பாறை               தமிழ்த்துகள்

பசுமரத்து வேருக்கு நெக்கு விடும் என்று அன்றே நல்வழி எடுத்து ஓதிவிட்டது. வலிமையான கடப்பாரைக்கு இடம் கொடுக்காத வலிய பாறை பசுமரத்தின் வேருக்கு வழி விட்டு வெடித்து நிற்கிறது என்கிறார் ஔவையார்.                 தமிழ்த்துகள்

விழிமின் எழுமின் இலக்கை அடையும் வரை ஓயாது உழைமின் என்றார் வீரத் துறவி சுவாமி விவேகானந்தர். அன்று அமெரிக்காவின் சிக்காகோவில் அன்புச் சகோதரர்களே! சகோதரிகளே! என்று அவர் பேசத் தொடங்கிய அந்த நிமிடத்தில் உலகிற்குத் தெரிந்திருக்கும் குருவாகும் தகுதி பாரதத்திற்கே உண்டு என்று.                  தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

கடமையைச் செய்: பலனை எதிர்பாராதே! என்பதை விடவா ஒரு தத்துவம் இவ்வுலகில் மிகப்பெரியதாக இருந்து விடப் போகிறது? பகவத் கீதையின் இந்த உன்னத வரிகள் உலகிற்கே ஒரு பாடம். பாரதம் காட்டும் இந்தப் பாடம் பட்டறிவின் வெளிப்பாடு. ஆம், பரமாத்மாவிலிருந்து வந்த இந்த ஜீவாத்மா மீண்டும் அந்தப் பரமாத்மாவை அடைவது தான் பதி பசு பாசம் என்று உரைக்கின்றன நம்முடைய புராணங்களும் இதிகாசங்களும்.              தமிழ்த்துகள்

இறைவனுக்கு நெருக்கமாக நம்மைக் கூட்டிச்செல்ல சித்தர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிப்பூரகம் அனாதகம் விசுத்தி ஆக்ஞா என்ற சக்கரங்களைக் கடந்து சகஸ்ரஹாரம் செல்வதற்கு அவர்கள் யோக நிலையைச் சொல்லி இருக்கிறார்கள்.     தமிழ்த்துகள்

கூடுவிட்டுக் கூடு பாய்வதற்கும் மனதால் பிறரைக் கட்டுப்பாடு செய்வதற்கும் நோக்கு வர்மம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். தொலைநோக்கியைக் கண்டுபிடிக்கும் முன்பே ஒன்பது கோள்களையும் ஒவ்வொரு கோயிலின் கூரைகளிலும் சிற்பங்களாகப் பொறித்தவர்கள் இந்தியர்கள். பாரத நாட்டின் அறிவு வளர்ச்சி அறிவியல் வளர்ச்சி ஆன்மீகத்தில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது என்ற உண்மை உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும். தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM            தமிழ்த்துகள்

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று நாம் வெறும் புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. இவ்வுலகில் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அத்தனை பிறவிகளிலும் இறைவனை நினைத்து நாம் வாழ வேண்டும். அதைத்தான் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி என்ற பாடல் தெரிவிக்கிறது. தமிழ்த்துகள்

அது மட்டுமா?

வேண்டத்தக்கது அறிவோய் நீ

வேண்ட முழுதும் தருவோய் நீ தமிழ்த்துகள்

வேண்டியாது அருள் செய்தாய்

வேண்டும் பரிசு ஒன்று உண்டெனில் அதுவும் உன்றன் விருப்பன்றே என்று இவ்வுலகமும் கண்ணுக்குத் தெரியாத இறைவனின் ஆடலில் நடக்கிறது என்பதை அருமையாக உணர்த்துகின்றன இத்திருவாசக வரிகள். தமிழ்த்துகள்

வேற்றுமையில் ஒற்றுமைதான் நம் வேத மந்திரங்கள். ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்கள் அனைத்தும் வாழ்வியல் கூறுகள். ஒரு சிறந்த பண்பாட்டின் இலக்கணங்கள். அவற்றை வெறும் கட்டுக்கதைகள் என்று ஒதுக்கி வைத்துவிட்டால் இந்த உலகிற்கு யார் தான் வழி காட்டுவார்கள்? உலகின் பண்பாட்டிற்கும் நாகரிகத்திற்கும் வித்திட்ட பெருமை நம் பாரதத்தையே சாரும். தமிழ்த்துகள்

அதனால்தான் இன்றைக்கும் அறிவியலாளர்களும் ஆன்மீகச் செல்வர்களும் இந்தியாவை நோக்கி ஓடி வருகிறார்கள். மூலை முடுக்கெல்லாம் பரவிக் கிடக்கும் ஏடுகளைப் புரட்டுகிறார்கள், பாடங்களைப் படிக்கிறார்கள், பட்டறிவு பெறுகிறார்கள். தமிழ்த்துகள்

அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால்

இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே என்கிறார் தாயுமானவர். அன்பர் பணியில் தன்னைக் கரைத்த அடியவர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது. ஆதிசங்கரரும் இராமானுஜரும் ஆழ்மனதில் தோன்றிய இறைவனைப் பாமரரும் அறியும் வண்ணம் பாடிய மண் இது. தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

அதனால்தான் மகாகவி பாடினான்,           தமிழ்த்துகள்

காக்கைக் குருவி எங்கள் ஜாதி நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்

நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை            தமிழ்த்துகள்

நோக்க நோக்கக் களியாட்டம் என்றான்.

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு

இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற பாரதத்தின் குரல் உலகின் குரலாகவே ஒலிக்கிறது.

அது குருவின் குரல்தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தமிழ்த்துகள்

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் தடம் பதித்து நடப்பவன் மாமனிதன். நாம் தடம் பார்த்து நடப்பவர்கள் அல்ல தடம் பதித்து நடப்பவர்கள். ஊதி அணைத்து விட நாங்கள் ஒன்றும் அகல் விளக்கல்ல, சூறாவளிக்கும் அணையாத சூரிய விளக்குகள். புயலுக்குத் தலைவணங்க நாங்கள் ஒன்றும் புல் அல்ல, எதற்கும் அஞ்சாத இமய மலைகள் என்று ஒவ்வொரு முறையும் பாரதம் நிரூபித்து வருகிறது.

அன்று சந்திரனை அடுத்து செவ்வாயை இன்று சூரியனை என்று ஒரே முயற்சியில் கோள்களைத் தொடும் ஞானம் பெற்றது பாரதம் மட்டுமே என்பது உலக நாடுகளுக்குச் சிம்ம சொப்பனமாகவே இருக்கிறது. உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்த நம்முடைய விண்வெளி சாதனைகள் பிற சாதனைகளுக்கு மணிமகுடமாய் அமைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். தமிழ்த்துகள்

உலக நாடுகளுக்கெல்லாம் பாரதம்தான் குரு என்பது அனைவருக்கும் இப்போது புரிந்துவிட்டது. வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ? என்ற மகாகவியின் வைர வரிகளைச் சொல்லி வாய்ப்புக்கு நன்றி பாராட்டி அமைகிறேன் நன்றி வணக்கம். தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

மு.முத்து முருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி. 9443323199             தமிழ்த்துகள்

Blog Archive