கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, June 14, 2024

ஒரு மரத்தின் பார்வையில்... தமிழ்க்கட்டுரை பேச்சு A LIVING WITNESS THROUGH THE EYES OF A TREE tamil essay speech

 A LIVING WITNESS THROUGH THE EYES OF A TREE

ஒரு மரத்தின் பார்வையில்...

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

முன்னுரை             தமிழ்த்துகள்

"காணி நிலம் வேண்டும்.." என்ற கவிதையில் "பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்திலே வேணும்”, என்றார் மகாகவி பாரதியார். இயற்கையின் மடியைப் பசுமையாக்குபவை மரங்கள். அவை இயற்கை மனிதனுக்கு அளித்த வரங்கள். பூமிப்பந்தில் வாழும் மனிதர்கள், பறவைகள், விலங்குகள் அனைத்துக்கும் உணவு, உடை, இருப்பிடம் தருவதற்கு அடிப்படையாக அமைபவை காடுகளே! இன்றைய நாகரிக காலத்தில் ஒரு மரத்தின் பார்வையில் வெளிப்படும் கருத்துகளை இக்கட்டுரையில் காண்போம்!                   தமிழ்த்துகள்

இலக்கியத்தில் நான்

'காய் மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங்கனி சிதறி வாழைப்பழங்கள் சிந்தும் ஏமாங்கதமென்னும் இசையால் திசை போயதுண்டே!” என்கிறது சீவக சிந்தாமணிப் பாடல். தமிழ்த்துகள்

"தினைத் துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன் தெரிவார்" என்கிறார் வான் புகழ் வள்ளுவர். "தினை அளவு போதாச் சிறு புல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்", என்கிறது திருவள்ளுவமாலை. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று ஐவகை நிலங்களில் வாழ்ந்த சங்கத் தமிழர் என் பெருமை அறிந்திருந்தனர். நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே என்ற கவியரசு கண்ணதாசன் வரிகள் முதல். மந்தான் மந்தான் மனிதன் மறந்தான் என்று இன்றைய கவிஞர் வைரமுத்து வரிகள் வரை நாங்கள் கவிதைகளிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். தமிழ்த்துகள்

கவலை தரும் இன்றைய நிலை

உலகச் சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5 என்று அனைவருக்கும் தெரியும். என்னை நட்டு வளர்த்தால் எவ்வளவு பயன் என்று தெரிந்திருந்தும் அழிக்கிறீர்களே! இது முறையா? காற்றில் உள்ள கரிமத்தின் அளவு கூடும்போதெல்லாம் என் மூச்சுத் திணறுகிறது. ஒவ்வொரு நாளும் கரி வளியை எடுத்துக்கொண்டு உயிர் வளியை உங்களுக்குத் தருகிறேனே தெரியுமா? தெரியாதா?. தமிழ்த்துகள்

வெற்றிவாகை சூடும் போதெல்லாம் உங்கள் கழுத்துக்கு அணிகலனாய் பூமாலை தருகிறேன் ஆனால் பதிலுக்கு நீங்கள் என் கழுத்தை அறுக்கிறீர்கள்? இது தகுமா? முறையா? சிந்திப்பீர்! சிஎப்சி என்று சொல்லப்படக்கூடிய குளோரோ புளோரோ கார்பன் பயன்பாட்டை நீங்கள் அதிகரித்து விட்டீர்கள்! இதனால், புவியில் வெப்பமயமாதல் என்ற நிகழ்வு நடக்கிறது. இது முதலில் என்னை அழிக்கும்; பிறகு உங்கள் உயிரைக் குடிக்கும். தமிழ்த்துகள்

சொர்க்கம் ஏக வேண்டுமா?

குளந் தொட்டுக் கோடுபதித்து வழிசீத்து உளந்தொட்டு உழுவயலாக்கி வளந் தொட்டுப் பாடுபடும் கிணற் றோடென்றிவ்வைம் பாற்படுத்தான் ஏகுஞ் சுவர்க்கத் தினிது என்று சிறுபஞ்சமூலம் கூறும் வழிமுறைகளை அறிவீர்களா நீங்கள்? குளம் வெட்ட வேண்டும்; மரத்தை நட வேண்டும்; சாலைகளை அமைக்க வேண்டும்; வளம் தரும் வயல்களை உருவாக்க வேண்டும்; பாசனத்திற்கான கிணறுகளை ஏற்படுத்த வேண்டும். இந்த ஐந்தையும் செய்தவர்கள் சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்கிறது சிறுபஞ்சமூலம். உங்களுக்குத்தான் ஆறறிவு இருக்கிறதே சிந்திப்பீர்களா? தமிழ்த்துகள்

பண்பாட்டின் அடையாளம் நாங்கள்

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே' என்கிறது தொல்காப்பியம். மரப்பொந்துகளிலும் குகைகளிலும் ஆதி மனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. நன்றி மறப்பது நன்றன்று என்ற உலகப் பொதுமறை வரிகளை நீங்கள் படித்ததில்லையா? உங்களின் சந்ததிகள் பெருகி வளர்வதற்கு எங்களை பூமியின் ஓட்டிலிருந்து அகற்றுவது எந்த விதத்தில் நியாயம்? சேரனுக்குப் பனை மரமும் சோழனுக்கு ஆத்தி மரமும் பாண்டியனுக்கு வேப்ப மரமும் தந்த மலர்கள்தானே மாலைகள் ஆயின? மரங்களின் மாதா வங்காரி மாதா போல் இந்தியாவின் ஜாதவ் பயேங் போல் இன்னும் பலர் உருவாக வேண்டும். தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

இருபது அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இன்று உங்களுக்கு எட்டாத தூரம் சென்ற காரணம் அறிவீர்களா? மண்ணரிப்பைத் தடுத்தோம்; மழை வளம் தந்தோம்; அகில், சந்தனம், குங்குமம் என நாங்கள் கொடுத்த பொருள்களால் நீங்கள் மணந்தீர்கள்? எல்லாம் மறந்துவிட்டதா? விரக்தியில் விட்டத்தைப் பார்த்தாலும் அதுவும் நான் தானே? தமிழ்த்துகள்

நிழலின்ருமை வெயிலில்தான் தெரியும் என்ற பழமொழி உங்களுக்குப் பழக்கப்பட்டுவிட்டதா? இலைகளைப் பறித்தீர்கள்! அமைதியாய் இருந்தோம். பூக்களைப் பறித்தீர்கள்! மௌனம் காத்தோம்! பிஞ்சுகளையும் காய்களையும் தட்டிப் பறித்தீர்கள்! வேடிக்கை பார்த்தோம். கனிகளோடு உங்கள் ஆசை விட்டு விடும் என்று கனவு கண்டோம்! ஆனால், பேராசை கொண்ட நீங்கள் எங்களை வெட்டி வீழ்த்தினீர்கள்! தீயிட்டு அழித்தீர்கள்! தமிழ்த்துகள்

தொழிற்சாலைகளும் நான்கு வழிச்சாலைகளும் அமைத்துவிட்டு நலமாகத் தான் வாழ்கிறீர்கள் என்று நினைக்க வேண்டாம். பூமித்தாயின் செல்லப் பிள்ளைகள் நாங்கள்!. என்றேனும் அவள் இயற்கைப் பேரிடர் என்ற பெயரில் உங்களை உலுக்கி எடுப்பாள். அப்போது மண்மூடிப் போவீர்கள்; மறந்து விடாதீர்கள்! தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

எங்கள் எதிர்பார்ப்பு இதுதான்!

எங்கள் அடியை வெட்டிய நீங்கள் வேரை விட்டுத்தான் வைத்திருக்கிறீர்கள். அந்த வகையில் நீங்கள் கருணை கொண்டவர்களே! முயற்சிக்கும் உழைப்புக்கும் ஒற்றுமைக்கும் எறும்பையும் தேனீயையும் காக்கையையும் எடுத்துக்காட்டும் நீங்கள் எங்கள் வேர்களை மட்டும் எப்படி மறந்தீர்கள்? எங்களின் விழுதுகள் தொட்டு நீங்கள் ஆடிய பொழுதுகள் மறந்து விட்டதா உங்களுக்கு? பெரிய மரங்களை வெட்டும்போது 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் டாலர்கள் தண்டத் தொகையாகக் கட்ட வேண்டும் என்கிறது ஆஸ்திரேலியா அரசு. தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

பல்வேறு மூலிகைகளையும் வேர்களையும் தரும் காடுகளை அழிக்காதீர்கள்!. மரங்கள் உங்களுக்கு மட்டும் சொந்தம் என்று நினைத்து விட்டீர்களா? அவை பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவும் உறைவிடமும் அளிப்பவை. புவி வெப்பமயமாதலைத் தடுக்க எங்களை அதிகளவு நட்டுப் பராமரியுங்கள். வாகை, அரசு, வேம்பு, புளி, வேங்கை, கொன்றை, புங்கை இன்னும் எத்தனை எத்தனை வகைகள் எங்களில். வகைக்கு ஒன்றாய் வீடுகளில் வளருங்கள். சோலைக்கு நடுவே கல்விச்சாலைகள் அமையட்டும். பாலைவனமாய் மாறிவரும் உங்கள் புவி மீண்டும் பசுமைக்குத் திரும்பட்டும். தமிழ்த்துகள்

முடிவுரை

ஜெகதீஷ் சந்திர போஸ் என்பவர் எங்களுக்கும் உணர்வு உண்டு என்று மெய்ப்பித்தார். பல்வேறு அரசியல் கட்சிகள் பசுமைத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. மத்திய மாநில அரசுகள் கடுமையான சட்டங்கள் மூலம் காடுகள் அழிப்பதைத் தடைசெய்து வருகின்றன. பொது மக்களாகிய நீங்களும் இவற்றைப் புரிந்து கொண்டு இளம் தலைமுறைக்குப் புவியைப் பசுமையாக விட்டு செல்லுங்கள்! தமிழ்த்துகள்

"வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்” என்ற குற்றாலக் குறவஞ்சி வரிகள் இயற்கைச் சூழலைக் காட்டும் கண்ணாடி. மரச்சாமான்கள் பயன்படுத்திய நீங்கள் நெகிழிகளின் வருகையால் என்னை மறந்து விட்டீர்கள். உலோகங்களின் வருகை எங்கள் தேவையை இல்லாமலே செய்து விட்டது. தொட்டிலில் இடும் போதும் மரத் தொட்டிலாய் நாங்கள்! நீட்டிப் படுக்கும் போதும் கட்டிலாய் நாங்கள்! வாழ்வின் இறுதியிலும் உங்களை எரிக்கும் கட்டையாய் நாங்கள்? தமிழ்த்துகள்

ஆனால், மீண்டும் ஒரு புரட்சி எழ வேண்டும்! அது பசுமைப் புரட்சியாக மாறி எங்கள் வாழ்வு செழிக்கும் என்ற நம்பிக்கையோடு மிச்சமிருக்கும் தண்ணீரைத் தேடி என் வேர்கள் செல்லட்டும்! பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என்ற வரிகளுக்கு ஏற்ப எங்கள் பயன்பாடு அமையட்டும்!

தமிழ்த்துகள்

 

 

மு.முத்து முருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி. 9443323199             தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive