கல்விச் சுடரொளி காமராசர்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அன்னைத் தமிழே, அருளோவியமே என்னை இங்குப் பேச வைத்த கன்னித்தமிழே! கணினித் தமிழாய்
உலகெங்கும் சிறந்து விளங்கும் உன்னை வணங்கித் தொடங்குகிறேன் அருள்வாய்தாயே!
ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பெருமக்களே! அறிவுக்கண்
திறக்கும் ஆசிரியப் பெருமக்களே! ஆருயிர் நண்பர்களாம் என் அருமைச் சகோதர சகோதரிகளே!
உங்கள் அனைவருக்கும் அடியனின் அன்பு வணக்கங்கள்! தமிழ்த்துகள்
கண்ணுடையர்
என்போர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையோர்
கல்லாதவர் என்கிறார் வள்ளுவர். கற்கை
நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்கிறார் அதிவீரராம பாண்டியன். ஓதாமல் ஒருநாளும் இருக்க
வேண்டாம் என்கிறார் ஔவைப்பாட்டி! தமிழ்த்துகள்
அன்னயாவினும்
புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்கிறார் மகாகவி பாரதி. விலங்கிலிருந்து மனிதனை வேறுபடுத்தும் கல்வி. கந்தக பூமி கண்ட கருப்பு வைரமாக நமக்குக் கிடைத்தவர்
பெருந்தலைவர் காமராசர். ஏழைகள் வாழ்வு உயர்வதற்குக் கல்வி ஒன்றே வழி என்று கண்டவர்
அந்தப் படிக்காத மேதை. விடுதலை இந்தியாவின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட தலைவர்களுள் கர்மவீரர் காமராசர்
குறிப்பிடத்தக்கவர். தமிழ்த்துகள்
1954ஆம்
ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் தமிழக முதல்வராக காமராசர் பொறுப்பேற்றார். ஊர்தோறும் பள்ளிகளை அமைத்தார். ஆனால்
கல்வி கற்கத்தான் மாணவர்கள் வரவில்லை. காரணம் அறியாது அதிகாரிகள் குழம்பினர். தமிழ்த்துகள்
ஏழைப் பங்காளரான காமராசர் சரியான காரணத்தைக் கண்டுபிடித்தார். நாள் முழுவதும் ஓடாய்த்
தேய்ந்து உழைப்பவன் வயிற்றுக்கு உணவில்லை என்றால் தன் பிள்ளையை எப்படி பள்ளிக்கு அனுப்புவான்
என்று சிந்தித்தார். அதன் விளைவாக மதிய உணவுத் திட்டம் உருவானது. பள்ளிக்குச் சென்றால் அறிவுப் பசியைத் தீர்ப்பதோடு வயிற்றுப் பசியையும்
தீர்த்துக் கொள்ளலாம் என்று மாணவர்கள் படையெடுத்து வந்தனர். அப்படி வந்தவர்கள்தான்
இன்றைக்கு உயர் அதிகாரிகளாக உலகெங்கும் உள்ள நிறுவனங்களிலும் அரசு அலுவலகங்களிலும்
விளங்குகின்றனர்.
தமிழ்த்துகள்
குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்தவர் காமராசர். மாடு மேய்ப்பவன் மகன் மாடுதான் மேய்க்க
வேண்டுமா?
செருப்புத் தைப்பவன் பிள்ளை அரசு அதிகாரியாக ஆகக் கூடாதா? என்று கேள்வி கேட்டார்! முன்னாள் முதல்வர் ராஜாஜியால்
மூடப்பட்ட சுமார் 10,000 பள்ளிகளைத் திறக்க ஆணையிட்டார். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
ஏறத்தாழ 29 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள்
காமராசரின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் கல்விக் கண்ணைத் திறந்தன. மூன்று மைல்களுக்கு
ஒரு தொடக்கப்பள்ளி, ஐந்து மைல்களுக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி தொடங்கினார். படிக்கும்
மாணவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்திலிருந்து 9 இலட்சமாக உயர்ந்தது. 1954 முதல் 1963 வரை 9 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் காமராசர்.
ஒரு நூற்றாண்டு சாதனையை 9 ஆண்டுகளில் தந்த செயல்வீரர் காமராசர். இத்தனைக்கும்
அவருடைய ஆட்சிக் காலத்தில் 1963ஆம் ஆண்டு பட்ஜெட் தொகை ரூபாய் 121.81 கோடிதான். இவ்வளவு குறைந்த தொகையை வைத்துக்கொண்டு பல்வேறு
அணைக்கட்டுகள், தொழிற்சாலைகள், ஊர்தோறும் பள்ளிகள் என்று புரட்சி செய்தவர் காமராசர். தமிழ்த்துகள்
ஏழைகளின் வீட்டில் அகல் விளக்கு எரிந்தாலும் பிள்ளைகளின் அறிவு விளக்கு சுடரொளியாய்
விளங்கியது. வாழ்க்கை உயர்ந்தது. தமிழகத்தின் பொற்கால ஆட்சி காமராஜர் ஆட்சி என்று உலகம்
போற்றியது. மதிய உணவுத் திட்டத்திற்காக அமெரிக்காவின் கேர்
நிறுவனத்துடன் இணைந்து காமராசர் திட்டம் தீட்டினார். பிள்ளைகள்
பசியின்றி பள்ளியில் உண்ண வேண்டும் என்பதற்காகப் பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன்
என்று சூளுரைத்தார். தமிழ்த்துகள்
ஆசிரியர் பயிற்சி பள்ளிகளைத் தொடங்கினார். விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தியின்
தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து போராடியவர் காமராசர். 1964 முதல் 1967 வரை அகில இந்திய காங்கிரஸ்
கட்சியின் தலைவராக இருந்தவர் காமராசர். ஆறாம் வகுப்பு வரை படித்த காமராசர் செயல்படுத்திய
திட்டங்கள் ஏராளம் ஏராளம். தமிழ்த்துகள்
ஆறு
வயது முதல் 11 வயது வரை உள்ள அனைத்துப் பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற கட்டாய ஆரம்பக் கல்வித் திட்டம்
செயல்படுத்தப்பட்டது. ஆசிரியர்களுக்காக வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியத்
திட்டம் ஆகியவை இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில்தான்
காமராசர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. குரல்
தேயப்பேசி விரல் தேய எழுதும் வித்தகர் அல்ல காமராசர். எளிமையான வாழ்வு வாழ்ந்தவர் காமராசர். இறுதி வரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து மறைந்தவர்
அவர். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
குடிசைக்கும் கோட்டைக்கும் பாலம் கட்டிய ஒரே தலைவர் கர்மவீரர் காமராசர். நேருவின்
மறைவுக்குப் பின்னர் லால் பகதூர் சாஸ்திரியையும் அவரது மறைவுக்குப் பின்னர் அன்னை இந்திரா காந்தியையும் இந்தியாவின் பிரதமர்கள் ஆக்கி அழகு பார்த்தவர். அதனால்தான் அவரை கிங் மேக்கர் என்று அழைக்கிறோம். தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம்
இன்றைக்குக் கற்றவர்கள் எண்ணிக்கை பெருகி இருக்கிறது என்றால் அதற்கு அடித்தளமிட்டவர்
கர்மவீரர் காமராசர். தமிழ்த்துகள்
ஆகட்டும்
பார்க்கலாம் என்ற ஒற்றை வரியில் ஓராயிரம் திட்டங்களை வெற்றிகரமாகச்
செயல்படுத்தியவர் காமராசர். அவரது ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வி இயக்குநராக இருந்த
நெ.து.சுந்தர வடிவேலு அவர்கள் காமராசர் அவர்களுக்கு நல்ல பல ஆலோசனைகளை வழங்கினார். பாழ்பட்டுக் கிடந்த
பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி 1975ஆம் ஆண்டு இம்மண்ணுலக வாழ்வை நீத்தார் காமராசர். தமிழ்த்துகள்
இருந்தாலும்
மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். ஆம்! தடம் பார்த்து நடப்பவர்கள் நடுவே தடம் பதித்து நடந்த பெருந்தலைவர் காமராசர்.
அவர் மறைந்துவிட்டாலும் கல்விக்கண் திறந்த அந்தக் கர்மவீரரின் வரலாறு இந்திய மக்களின்
இதயத்தில் பசுமரத்தாணியாய்ப் பதிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை! கல்விவளர்ச்சி நாளாக ஒவ்வோர் ஆண்டும் நாம் ஜூலை
15ஆம் நாளைக் கொண்டாடி வருகிறோம்! தமிழ்த்துகள்
அது காமராசரின் பிறந்தநாள் மட்டுமல்ல! தமிழகத்தின் அறியாமை
இருள் விலகிய நாள்! என்று கூறி பாடையிலே
படுத்து ஊரைச்சுற்றும் போதும் பைந்தமிழில் அழும் ஓசை கேட்க வேண்டும்! ஓடையிலே என் சாம்பல்
கரையும் போதும் ஒண்டமிழே சலசலத்து ஓட வேண்டும் என்ற யாழ்ப்பாணத்துக் கவியின் வரிகளைச் சொல்லி வாய்ப்புக்கு நன்றி பாராட்டி அமைகிறேன்,
நன்றி வணக்கம். தமிழ்த்துகள்
மு.முத்து முருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி. 9443323199 தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்