கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, June 08, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இரட்டுறமொழிதல், உரைநடையின் அணிநலன்கள், எழுத்து, சொல்

 10th Tamil Model Notes of Lesson

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

18-06-2024 முதல் 21-06-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுத ஊற்று – கவிதைப்பேழை, விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

இரட்டுறமொழிதல், உரைநடையின் அணிநலன்கள், எழுத்து, சொல்

6.பக்கஎண்

09 - 18

7.கற்றல் விளைவுகள்

T-1003 மொழி தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரும் நுட்பத்தையும் அதன் நயங்களையும் அறிந்து முறையாக மொழியைப் பயன்படுத்துதல்.

T-1004 உரைநடையில் பயின்று வரும் அணிநயங்களைக் கண்டறிதல், பொருளுக்குப் பொருந்திவரும் தன்மையுணர்ந்து படித்துச் சுவைத்தல், நயமான தொடர்களுடன் உரைகளை எழுத முற்படுதல்.

T-1005 எழுத்து சொல்லின் அடிப்படை இலக்கணம் அறிந்து மொழியைக் கையாளுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

இரட்டுறமொழிதலின் சுவையறிதல்.

தமிழ் மொழியின் நயங்களையும் அழகினையும் அறிதல்.

9.நுண்திறன்கள்

அணிநயத்தைப் படித்து நயமிகு  தொடர்களை  எழுதுதல்.

அளபெடை, மொழி, தொழிற்பெயர் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்






இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/06/1_37.html

https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_82.html

https://tamilthugal.blogspot.com/2021/06/10th-tamil-online-test-urainadaiyin.html

https://tamilthugal.blogspot.com/2020/05/10-tenth-tamil.html

https://tamilthugal.blogspot.com/2023/06/1-10th-tamil-mind-map-urainadaiyin.html

https://tamilthugal.blogspot.com/2020/10/1-urainadaiyin-aninalankal.html

https://tamilthugal.blogspot.com/2020/05/10-1-urainadaiyin-a.html

https://tamilthugal.blogspot.com/2023/06/pdf-1-eluthu-sol-10th-tamil-question.html

https://tamilthugal.blogspot.com/2021/10/1-1-10th-tamil-eluthu-sol-one-word.html

https://tamilthugal.blogspot.com/2023/06/1-10th-tamil-mind-map-moovakai-moli.html

https://tamilthugal.blogspot.com/2021/07/1-eluthu-mozhi-tholirpeyar-10th-tamil.html

https://tamilthugal.blogspot.com/2020/05/10th-tamil-ilakkanam-moovagai-mozhi.html

https://tamilthugal.blogspot.com/2020/05/tholil-peyar-tamil-ilakkanam.html

11.ஆயத்தப்படுத்துதல்

இருபொருள் தரும் சொற்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.       

மாணவர்கள் அறிந்த உவமைகளைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

எழில்முதல்வன் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

அளபெடை, மூவகை மொழி, தொழிற்பெயர் வகைகளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தமிழுக்கும் கடலுக்கும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குதல். காளமேகப்புலவர் குறித்தும் தமிழழகனார் குறித்தும் கூறுதல்.

உரைநடையின் அணிநலன்கள் பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.

          உவமை, உருவகம், இணை ஒப்பு, இலக்கணை, முரண்படு மெய்ம்மை, சொல்முரண், எதிரிணை இசைவு, உச்சநிலை குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். எழில்முதல்வன் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.

          சார்பெழுத்து, உயிரளபெடை வகைகள், ஒற்றளபெடை, மூவகை மொழி, தொழிற்பெயர் வகைகள் போன்றவற்றை விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          தமிழ் இலக்கிய நயங்களின் சிறப்புகளை அறிந்து வரச் செய்தல்.

          வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குதல்.

15.மதிப்பீடு

          LOT மூவகை மொழிகளை எழுதுக.

          MOT – தொழிற்பெயர் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

HOT ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.

சூழல் - வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல். பயிற்சிகள் அளித்தல்.

17.தொடர்பணி

நீங்கள் படித்தவற்றுள் நினைவில் நீங்கா இடம்பெற்ற இலக்கியத் தொடர்கள், நயங்களை எழுதுக.

இலக்கணத்தின் முக்கியத்துவம் குறித்து அறிந்து வருதல்.

தமிழ்த்துகள்

Blog Archive