கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, June 14, 2024

ஒரு மரத்தின் பார்வையில்... தமிழ்ப் பேச்சு கட்டுரை

  A LIVING WITNESS THROUGH THE EYES OF A TREE tamil essay speech

ஒரு மரத்தின் பார்வையில்...

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எங்களை வெறும் மரம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நாங்கள் மரம் தான், ஆனால்  உணர்வற்ற பொருள் அல்ல. எங்களுக்குள் உயிர் இருக்கிறது. உணர்விருக்கிறது, கடமை தவறாமை எங்கள் கோட்பாடு. இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சேவை செய்வது, அதிலும் தன்னலமற்ற சேவைதான் எங்கள் நீதி.  தமிழ்த்துகள்

யாரிடத்திலும் யாசித்து எங்களுக்குப் பழக்கமில்லை. எங்களுக்கென்று எந்த கோரிக்கையும் இல்லை. நாங்கள் கொடுத்தே பழகியவர்கள். தருவது எங்கள் இயல்பு. எங்கள் எசமானரின் உண்மை சேவகர்கள் நாங்கள். எங்கள் பயன்களை நாங்களே சொல்லும் பாவிகள். இந்த உலகும், உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் எங்களுக்கு இரு கண்கள். எங்கள் கடன் பணிசெய்து கிடப்பதே. தமிழ்த்துகள்

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பார்கள். மரம் இல்லா ஊரில் மனிதர்கள் வாழ இயலாது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது உங்களுக்குத் தெரியும். மரம் இல்லா ஊர் பாலைவனம். அந்த பாலைவனத்தையும் பசுமையாக்குவது  நாங்கள் தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழ்த்துகள்

எங்களுக்காகத்தான் மேகங்கள் மண்ணில் மழையைப் பொழிகிறது. பூமியைக் குளிர்விப்பவர்களே நாங்கள் தான். பச்சைப்பசேல் எனும் அந்தப் பசுமையான எங்கள் தோற்றமே உங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியையும் மனதிற்கு இதமான ரம்மியத்தையும் தருகிறது என்று தங்களை அமைதிப்படுத்திக் கொள்ள வருகிறவர்கள் சொல்லி எங்கள் செவிகள் கேட்டிருக்கின்றன. தமிழ்த்துகள்

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். அந்த நிழலைத் தருபவர்கள் நாங்கள் என்று நாங்களே சொல்லித் தெரிய வேண்டுமா என்ன? சாலையின் இருமருங்கிலும் அயராது நின்று சூரியக் கதிர்களின் வெப்பத் தாக்குதல்கள் உங்கள் மேனியைத் தீண்டாத வண்ணம் மெல்லிய இதமான தென்றலையும் வீசச்செய்து பயண அனுபவத்தை சுகமானதாக்குகிறோம்.  எங்கள் கழிவுகளும் சருகுகளும் தாவரங்களுக்கு உரமாகவும் பூமிக்கு மண்வளத்தையும் தருவதற்காக மறு சுழற்சி செயல்முறையைப் பயன்படுத்தி  இப்பூமியைப் பாதுகாக்கிறோம். தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள் எங்கள் கிளைகள். இயற்கையில் ஏற்படும் மாறுதல்களால் காற்றின் வேகம், தன் அளவைக் கடக்கும்போது அரணாக நின்று சேதம் மிகாமல் தடுக்கும் வீரர்களாக நாங்கள் செயல்படுகிறோம். மழையின் காரணமாக மண் சரிவுகள் பெருமளவில் நடைபெறாவண்ணம் தடுப்பதும் நாங்களே. தமிழ்த்துகள்

ஊர்திகளால் உண்டாகும் இரைச்சல்கள், இடி மின்னல் போன்ற அசாதாரணமான சூழல்களில் இருந்தும் மக்களைக் காப்பது நாங்கள். உங்கள் உபயோகத்திற்கான மரச்சாமான்கள் முதல்,  இறுதி யாத்திரைக்கான விறகாகவும் நாங்கள் பயன்படுகிறோம். இது மட்டுமா? உணவுக்காகக் கனிகளும், ஆரோக்கியத்திற்காக இலைகளும்,  பறவைகளின் சரணாலயமாகவும் நாங்கள் எங்கள் பங்களிப்பைக் கொடுத்த வண்ணமிருக்கிறோம் என்பது அனைவரும் அறிந்ததே. அனைத்தையும் தருவதால் எங்களுக்கு தரு என்று பெயர். தமிழ்த்துகள்

எங்களின் மிகப்பெரிய பங்களிப்பு நீங்கள்  சுவாசிக்கும் உயிர் வளியை  வழங்குவதாகும். இந்த பிராண வாயுவைக் கொடுக்கும் கொடையாளியாக நாங்கள் விளங்குகிறோம். இதில் உண்மை என்னவென்றால் உங்கள் செயல்பாட்டால் வெளியேறும் கரியமில வாயுவை உட்கொண்டு உங்களுக்குத் தேவையான பிராண வாயுவைக் கொடுக்கிறோம்.  வாரி வழங்கும் வாழும் வள்ளலாக இருப்பது எங்களுக்குப் பெருமை. தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

இத்துணை இருந்தும் என்ன பயன். எங்களின் பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மிருகங்களுக்கும் கூட குரல் கொடுக்கவும், நீதிமன்றம் செல்லவும் அமைப்பிருப்பதாகச் சொல்லுகிறார்கள். எங்களுக்கோ நாதி இல்லை. வளர்ச்சி என்பது முக்கியம்தான், அதனால் தேவைப்படும் விரிவாக்கம் தவிர்க்க முடியாததே. நான்கு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை என்றாலும் தேசிய நெடுஞ்சாலை என்றாலும் மாநில, ஊரக சாலை விரிவாக்கமானாலும் ஈவு இரக்கமின்றி காவு கொடுக்கப்படுவது நாங்களே. தமிழ்த்துகள்

எங்களுடைய எண்ணங்களும், விருப்பங்களும் இது தான். எங்களுக்குப் பின் எங்கள் பணியை யார் அங்கே தொடரப் போகிறார்கள். இதுவே எங்களின் கவலை. பறவைகளும் பல்வேறு நுண்ணிய உயிர்களும் வாழும் மாளிகை நாங்கள். மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான், மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான் என்று எங்களைப் பற்றி வைரமுத்து எழுதிய வரிகள் உண்மை தான். எங்களை வளருங்கள். வளத்துடன் வாழுங்கள். நன்றி, வணக்கம். தமிழ்த்துகள்

 

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive