25.10.2024 வெள்ளி
திருக்குறள்:
பால்: பொருட்பால்
அதிகாரம்: மடியின்மை
குறள் எண்: 602
மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்.
பொருள்: தாம் பிறந்த குடியை மேலும் சிறப்புடைய நற்குடியாக்க விரும்புகின்றவர், சோம்பலைக் கடிந்து முயற்சியுடையவராய் ஒழுக வேண்டும்.
பழமொழி:
கல்வியால் பரவும் நாகரிகம்.
Education is the transmission of civilization.
இரண்டொழுக்க பண்புகள்:
1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள்.
2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள்.
பொன்மொழி:
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை சரியாக செய்தால் வெற்றி, கடமைக்கு செய்தால் தோல்வி.
பொது அறிவு:
1. இந்திய மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன?
விடை: மக்கள் பேசும் மொழி அடிப்படையில்
2. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர் யார்?
விடை : குடியரசுத் தலைவர்
English words & meanings:
Broom- துடைப்பம்
Clay Pot- களிமண் பானை
வேளாண்மையும் வாழ்வும்:
மலிவான விலையிலும், எளிதில் இட மாற்றம் செய்யக் கூடியனவாகவும் இருந்ததால் விவசாயிகள் இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளில் அதிக நாட்டம் காட்டினார்கள்.
அக்டோபர் 25
பிகாசோ, 1881-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் நாள் ஸ்பெயின் நாட்டில் உள்ள மால்கா என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை, ஜோச் ரூயிசு பால்சுகா. தாய், மரியா பிகாசோ. தந்தை ஓவிய ஆசிரியர். தன்னுடைய தாய் பெயரையே பிரதானப் பெயராக வைத்துக்கொண்டார். ஓவியத்துக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த பிகாசோ, ஓவியம் வரைவதே தனி ஸ்டைல் என்றுதான் சொல்ல வேண்டும். சிந்திக்கும் இடைவெளிகூட இல்லாமல் வேகமாக வரைவதில் பிகாசோவுக்கு இணை பிகாசோவே. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கிட்டத்தட்ட 13,000-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். பிகாசோவின் மற்றொரு பிரபலமான ஓவியம், அவர் வரைந்த ஒற்றைப் புறா. இதுதான் உலக அமைதிக்கான சின்னமாக இன்றும் பறந்துகொண்டிருக்கிறது. "ஓவியன், இருப்பதைப் பார்த்து அப்படியே வரைந்துவிட்டுப்போவதில் என்ன புதுமையான விஷயம் இருக்கிறது? பார்க்கும் காட்சி அவன் மனதினுள்
ஏற்படுத்தும் உணர்ச்சிகளைத்தான் ஓவியன் ஓவியமாக வரையவேண்டும்" என்று கூறும் பிகாசோ தன்னுடைய ஒவ்வொரு படைப்பின் வழியாகவும் சமூக, தனிமனித உணர்வுகளை தன்னுடைய இறுதிக்காலம் வரை பிரதிபலித்துக்கொண்டே இருந்தார்.
இன்று (அக்டோபர் 25) மகத்தான ஓவியனின் பிறந்தநாள்!
நீதிக்கதை
இறைவன் பெற்றது.
செல்வந்தர் ஒருவர் இருந்தார். ஒரு நாள் அவர் தனது தோட்டத்தில் இருந்த வாழை
குலை ஒன்றை கோவிலில் கொடுத்து வருமாறு தனது பணியாளரிடம் கொடுத்து அனுப்பினார்.
பணியாளர் எடுத்துச் செல்லும் வழியில் மிகவும் பசியாக இருந்ததால, அந்த வாழைக் குலையிலிருந்து இரண்டு பழங்களை சாப்பிட்டு விட்டார்.
மீதியை கோவிலில் ஒப்படைத்தார்.
அன்று இரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார். கனவில் இறைவன் வந்து "நீ கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன். மிகவும் ருசியாக இருந்தது" என்றார்.
செல்வந்தர் மிகவும் கோபம் கொண்டார். ஒரு வாழை குலை நிறைய பழங்களை கொடுத்து அனுப்பிய போதும் இறைவனுக்கு இரண்டு பழங்கள் மட்டுமே சென்றடைந்துள்ளது மீதி பழங்கள் எங்கே? என்று கோபத்துடன் மனதில் எண்ணினார்.
அடுத்த நாள் காலை அந்த பணியாளரை அழைத்து அதைப்பற்றி விசாரித்தார். அப்போது அந்தப் பணியாளர் "ஐயா நான் பசியாக இருந்ததால் இரண்டு பழங்களை மட்டும் சாப்பிட்டு விட்டேன். மீதியை கோவிலில் ஒப்படைத்தேன்"என்று கூறினார்.அப்பொழுதுதான் அவர் பசியுடன் சாப்பிட்ட இரண்டு பழங்கள் மட்டுமே இறைவனுக்கு கொடுத்ததாக அர்த்தம் என்று செல்வந்தருக்கு புரிந்தது.
நீதி : தேவைப்படுபவருக்கு கொடுப்பதே, இறைவனுக்குக் கொடுத்ததற்கு சமம்.
இன்றைய செய்திகள்
25.10.2024
+ புதுடில்லி: டில்லியில், 2025 ஜன. 1ம் தேதி வரை பட்டாசு விற்க தடை விதிக்கவும், பட்டாசு கிடங்குகளுக்கு சீல் வைக்கவும், டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டானா' புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
20 பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட ரோபோவான் என்ற பெரிய தானியங்கி டாக்சியை எலான்மஸ்க் அறிமுகப் படுத்தினார்.
சென்னை:முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள் வழங்கும் போது "விளையாட்டு துறையில் இந்தியா மட்டுமல்லாமல், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் புகழ்பெற்றுள்ளது," என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
+ தீபாவளி பண்டிகைக்காக நாடு முழுதும் 7 ஆயிரம் சிறப்பு ரயில்கள்: மத்திய அரசு ஏற்பாடு.
வியன்னா ஓபன் டென்னிஸ்; அலெக்சாண்டர் ஸ்வெரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்.
Today's Headlines
New Delhi: In Delhi, 2025 Jan. The Delhi court has ordered that the sale of firecrackers be banned and that firecracker warehouses be sealed until the 1st.
Extreme precautionary measures have been taken in Odisha and West Bengal as Cyclone Dana approaches the coast.
Elanmusk introduced RoboVan, a large automated taxi capable of carrying 20 people.
דברChennai: "Tamil Nadu is renowned as a state that attracts the attention of not only India but also the world in the field of sports," said Chief Minister Stalin while handing over the trophies to the players who won the sports competition for the Chief Minister's Cup.
7,000 special trains across the country for Diwali festival: Central Govt.
Vienna Open Tennis; Alexander Zverev advances to quarterfinals.