கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, October 14, 2024

முதியோர்களைக் கொண்டாடுவோம் தமிழ்ப் பேச்சு கட்டுரை

 Let's celebrate the elderly tamil speech essay

முதியோர்களைக் கொண்டாடுவோம்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

அன்னைத் தமிழே அரியாசனமே என்னை இங்கு பேச வைத்த ஏந்திழையே! உன்னை வணங்கித் தொடங்குகிறேன் அருள்வாய் தாயே: தாயே தமிழே தன்னிகரற்றவளே: தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்; செந்தமிழ்ச் சொல்லெடுத்து வணங்குகிறேன் அவையோருக்கு வணக்கம், அல்லல் பிறவி அறுப்பவன் தாள் வணங்கித் தொல்லை மிக இப்புவியில் பிள்ளைகளாய்க் கொண்டாட வேண்டிய முதியவர்கள் பற்றி இந்தப் புதியவன் பேச முனைகிறேன். சற்றே செவிமடுங்கள். தமிழ்த்துகள்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய் என்கிறார் திருவள்ளுவர். தன் பிள்ளைகள் பிறந்த போது மகிழுகின்ற மகிழ்ச்சியை விட சான்றோன் எனத் தன் பிள்ளையைப் பிறர் கூறக் கேட்கும்போது உள்ளபடியே பெரிதும் மகிழ்கிறார். இந்த மகிழ்ச்சி எவ்வளவு நாளைக்கு நீடிக்கிறது? என்பதுதான் கேள்வி. தமிழ்த்துகள்

அடி தாங்கும் உள்ளமிது இடி தாங்குமா இடிபோலப் பிள்ளை வந்தால் மடி தாங்குமா? என்று கேள்வி கேட்டார் கண்ணதாசன். தமிழ்த்துகள்

"தென்னையைப் பெத்தா இளநீரு; பிள்ளையை பெத்தாக் கண்ணீரு* என்று புலம்பவும் செய்கிறார்.

பிள்ளைகள் பெற்றவர்களைக் கொண்டாடும் வரைக்கும் தான் அவர்கள் வாழ்வு இனிக்கிறது. பிள்ளைகளின் கையை எதிர்பார்த்துப் பிழைக்கின்ற காலம் வரும்போது பெரும் தொல்லைகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்று வெறும் பழமொழி சொல்லிவிட்டுப் போவதில் புண்ணியம் இல்லை. தமிழ்த்துகள்

பிள்ளையைச் சரியாக வளர்க்கவில்லை; எனவே, இப்போது படுகிறார்கள் தொல்லை என்று பார்ப்பவர்கள் ஏளனம் செய்யும் நிலை ஏற்படுகிறது, காரணம் என்ன இட்டும் தொட்டும் கௌவியும் உழந்தும் தன் பிள்ளை விளையாடும் போது பெரிதும் மகிழ்கிறார்கள் பெற்றோர்கள். தமிழ்த்துகள்

குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்று வள்ளுவரும் இக்கருத்தை மோதிக்கிறார். தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

ஈன்று புறம் தருதல் எந்தலைக் கடனே:

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே! என்று சங்க இலக்கிய வரிகள் பெற்றவர்களின் கடமையைப் பட்டியலிட்டுச் சொல்லுகிறது. தமிழ்த்துகள்

ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை என்று நமக்கு உலகப் பொதுமறை எச்சரிக்கை தந்தாலும் பிள்ளைகள் வளரும் விதம் இன்றைக்கு போற்றுதலுக்கு உரியதாக இல்லை என்னும் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம். எல்லாம் நவீன மயமாகிவிட்டது. இதோடு ஓடி வர முடியாத முதியவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். தமிழ்த்துகள்

உலக முதியோர் நாள் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது. 1982ல் முதியோர் நலன் குறித்து சர்வதேச முதியோருக்கான செயல்திட்டம் வலியுறுத்தியதன் காரணமாக 1990 டிசம்பர் 14 ஆம் நாள் தீர்மானம் 45 / 106 இதன்படி சர்வதேச முதியோர் தினம் 1990 இல் அறிவிக்கப்பட்டது. 1991 முதல் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்த்துகள்

2021 இல் சர்வதேச முதியோர் தினத்திற்கான கருப்பொருள் "எண்ம மயமாக்களில் முதியோர்கள் அனைவருக்கும் சமபங்கு' என்பதாகும். தந்தை தாய்ப் பேண் என்று நாம் படித்திருக்கிறோம். ஆனால் தந்தையையும் தாயையும் சுமையாக நினைக்கும் பிள்ளைகள் பெருகிவிட்டார்கள். தமிழ்த்துகள்

சொத்துக்காக உறவாடிக் கொண்டு அவர்களை வீட்டின் ஒரு மூலையில் பொருளோடு பொருளாக வைத்திருப்பவர்கள் தான் எண்ணிக்கையில் அதிகம். புற்றீசல் போல முதியோர் காப்பகங்கள் பெருகிவிட்டன. இது வளர்ச்சியா? வீழ்ச்சியா? தமிழ்த்துகள்

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர் கைவிடல் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர். சான்றோர் நம் வாழ்வில் கூட இருப்பது வாழ்வின் ஊன்றுகோல் போன்றது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். அவர்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் எந்த ஒரு தீங்கும் வராத அளவு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். 2020 இல் ஐக்கிய நாடு சபையின் கணக்குப்படி 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்களின் எண்ணிக்கை உலகில் சுமார் 72 கோடி ஆகும். தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

இனி வரும் 30 ஆண்டுகளில் அது இரு மடங்கு ஆகிவிடும் என்று புள்ளியில் விவரங்கள் தெரிவிக்கின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் நலிந்திருக்கின்ற முதியவர்கள் கேலிப் பொருளாகப் பார்க்கப்படுகிறார்கள். இதற்காகவே ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15 ஆம் நாள் முதியோர் வன்கொடுமைத் தடுப்பு விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடப்படுகிறது. முதியோருக்குச் சமுதாயப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் உளவியலாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். தமிழ்த்துகள்

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் - என்று குழந்தைகளைக் கொண்டாடிய பெற்றோர்கள் குழந்தைகளால் முதுமைக் காலத்தில் கொண்டாடப்படுவதில்லை என்பதே உண்மை.

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்தமிழ்த்துகள்

சிறுகை அளாவிய கூழ் -ன்று பிள்ளைகளைக் கொண்டாடியவர்கள் பெற்றோர். என்றைக்குக் கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் தனிக் குடும்பங்களாகச் சிதறி சுயநலத்தோடு வாழத் தொடங்கி விட்டார்களோ, அவர்கள் வாழ்வில் நவீனம் குடிகொண்டுவிட்டது. உலகம் சுருங்கி விட்டது போல் அவர்கள் உள்ளமும் சுருங்கி விட்டது, அதனால் தான் அக்காலத்திலேயே ஒரு புதுக்கவிஞன் எழுதினான். தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

மகனே முதியோர் இல்லத்திற்கு எனக்கு அனுப்பும் கடிதங்களை இனிமேல் பசை கொண்டு ஒட்டாதே: உன் வீட்டு ஒற்றைச் சோற்றுப் பருக்கையால் ஒட்டி அனுப்பு: அந்தச் சோற்றுப் பருக்கையாவது எனக்குக் கிடைக்கட்டும் என்று கூறினாள். அது மட்டுமல்ல, தமிழ்த்துகள்

பத்து மாதம் உன்னை இந்தக் கருவறையில் சுமந்தேனே என்னைச் சுமப்பதற்கு உன் வீட்டில் ஒரு அறை கூடவா இல்லை? என்று நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய மகனையும் மகளையும் பார்த்து பெற்றோர் கேட்பதாக ஒரு சவுக்கடிக் கவிதை செப்புகிறது. தமிழ்த்துகள்

கை கால்கள் உடைந்து விடும் வெளியே எங்கும் போக வேண்டாம்: மூச்சு வாங்கும்; மயக்கம் வரும்; உங்களுக்கு மருத்துவச் செலவு செய்தே எங்களின் பொருளாதாரம் வீணாகி விடுகிறது என்று நெஞ்சில் முள் தைத்தால் போலப் பேசும் பிள்ளைகள் இன்று அதிகம் பேர் இருக்கிறார்கள். தமிழ்த்துகள்

ஏஜ் வெல் பவுண்டேஷன் அமைப்பு பரிந்துரைத்ததின் பேரில் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் முதியோர்களைக் காக்க வேண்டியதன் அவசியத்தைச் சேர்க்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. "முதியோரைக் காப்போம்" என்ற உறுதி மொழியை ஜூன் 15 ஆம் நாளில் ஒவ்வொரு பிள்ளைகளும் பள்ளியில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பவர் முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

பணி செய்யும் காலத்தில் தன் பணத்தை எல்லாம் பிள்ளைகளின் வளர்ச்சிக்காகச் செலவழித்து விட்டு பணி நிறைவுக் காலத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை வாழக்கூடிய படித்தவர்கள் புலம்புகிறார்கள். பணக்காரர்கள் சொத்துக்காகத் தன் பிள்ளைகள் கொலை செய்து விடுவார்களோ? என்ற பயத்தில் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார்கள். மன நலமும் உடல் நலமும் பாதிக்கப்பட்ட முதியவர்கள் வாழும் நாள்களை நரகமாக எண்ணிக் கழிக்கக் கூடிய நிலை உலகமெங்கும் இருந்து வருகிறது. தமிழ்த்துகள்

தாய் சொல்லைத் தட்டாதே: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற பழமொழிகளை எல்லாம் படித்த நம் பிள்ளைகள் அதைக் காற்றில் பறக்கவிட்டு விட்டார்களோ என்ற ஐயம் எழுகிறது நமக்கும் முதுமை வரும். மேலும் நம் பிள்ளைகளும் நம்மை ஒதுக்கினால் நம் நிலை என்ன ஆகும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் முதியவர்களை நாம் கொண்டாடுவோம். தமிழ்த்துகள்

பெரியவர் சொன்னால் பெருமாள் சொன்னது மாதிரி என்று பேசி வந்த நிலை இன்று பெரியவர்கள் செய்யும் செயல்களைப் பார்த்துக் கேலி செய்யும் அளவுக்கு ஆளாகி விட்டது. இந்த நிலை மாற வேண்டும். பச்சை ஓலை பட்ட ஓலையைப் பார்த்துச் சிரித்த கதையாக ஆகிவிடக் கூடாது:

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்துதமிழ்த்துகள்

முந்தி இருப்பச் செயல் என்று தந்தையின் கடமையைச் சொன்ன திருவள்ளுவர்

மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தைதமிழ்த்துகள்

எந்நோற்றான் கொல்எனும் சொல் என்று சொல்லிச் சென்றதை மறந்து விடக்கூடாது.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

எல்லாவற்றுக்கும் மேலாக மனித உரிமை என்பது அனைவருக்கும் பொதுவானது. நம் பெற்றோர்களிடமே மனித உரிமையை நாம் மீறினால் சமுதாயத்தில் எவர் மீது நமக்கு அக்கறை வரும். சமுதாய மறுமலர்ச்சி என்பது இளமைத் துடிப்பும் முதுமையிடம் பெறும் ஆலோசனையும் ஒன்று சேரும்போது தான் கிடைக்கும் என்பதை மறந்து விடக்கூடாது: எதிர்கால இந்தியாவின் தூண்களாகிய நாம் முதியோர்களைப் போற்ற வேண்டும். அவர்கள் உடல் அளவிலும் உள்ள அளவிலும் மகிழ்ச்சியோடு இருப்பதற்கு உதவ வேண்டும். தமிழ்த்துகள்

மரக்கன்றுகள் பராமரித்தல், பூச்செடிகள் வளர்த்தல், வீட்டு விலங்குகளைப் பராமரித்தல் என்று அவர்களை எப்போதும் நம் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். தாத்தா பாட்டி கூறும் பழங்கதைகள் பெயரன் பெயர்த்திகளுக்கு அற நூல்கள். பாட்டி வைத்தியம் என்று நம் தமிழரின் இயற்கை வைத்தியம் போற்றப்படுகிறது. தமிழ்த்துகள்

ஓய்வு தேவைப்படும் காலத்தில் மருத்துவ உதவி தேவைப்படும் காலத்தில் சரியான முறையில் உதவ வேண்டும். இன்றைய எண்ம மய உலகில் அவர்கள் வாழக் கற்றுத் தர வேண்டும். பணத்தைத் தேடி ஓடுகின்ற ஓட்டத்தில் உறவுகளைத் தொலைத்து விடுகிறோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது: பெற்றோர்கள் வாழும் வரை நமக்கு ஒரு பாதுகாப்பு அரண் என்பது கண்கூடு. தமிழ்த்துகள்

அவர்கள் மன வலிமை பெறுவதற்கும் உடல் வலிமை பெறுவதற்கும் யோகாசனம் போன்ற வசதிகளை அவர்களுக்குச் செய்து கொடுக்க வேண்டும். சிறு நடைப் பயிற்சி, எளிய உணவுப் பழக்கம், சுகாதாரமான படுக்கை அறை அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இறைஉணர்வு தரக்கூடிய கூட்டங்கள் போன்றவற்றில் பங்கெடுக்க நாம் உதவ வேண்டும். தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

பத்து மாதம் தாய் சுமந்தாள்

மொத்தத்தையும் நீ சுமந்தாய் : என்று தந்தையைப் பார்த்துப் பாடுவதோடு நின்று விடாமல் அதற்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? என்ற கேள்வி நமக்குள் எழுந்தால் போதும்,  முதியவர்கள் எல்லாம் நம் கைகளில் பிள்ளைகளாகத் தவழ்ந்து விடுவார்கள். அவர்களது மகிழ்ச்சி நம் வாழ்க்கையை இன்னும் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தும்: பெற்றோர்கள் இறந்த பிறகு அவர்களைப் புகைப்படங்களாக மாட்டி வீடுகளில் வைத்து வணங்குவதை விட அவர்கள் வாழும் போதே நாம் கொண்டாட வேண்டும்! இந்த உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்து விட்டால் முதியோர் நலன் பாதுகாக்கப்படும். ஒவ்வொரு நாளும் முதியோர் தினமாகவே நகரும். தமிழ்த்துகள்

கடந்த காலமோ திரும்புவதில்லை

நிகழ்காலமோ விரும்புவதில்லை

எதிர்காலமோ அரும்புவதில்லை என்றார் வாலிபக் கவிஞர் வாலி. இந்த வரிகளை மறவாது முதியோர்களைப் பேணுவோம்: அவர்கள் முகமலர்ச்சிக்கு நாம் காரணமாக இருப்போம்: தமிழ்த்துகள்

சமூகத் தாக்கம் கொண்ட என்னுடைய இந்தப் பேச்சுக்குப் பரிசாக நீங்கள் தங்கத் தட்டு கொடுக்க வேண்டாம்; வெள்ளித்தட்டு கொடுக்க வேண்டாம்: அதையெல்லாம் விட விலைமதிப்பு மிக்க உங்கள் கைதட்டு கொடுங்கள் போதும்: வாய்ப்புக்கு நன்றி: வருகிறேன் விடைபெறுகிறேன்: தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

 

மு.முத்து முருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி. 9443323199            தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM       தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive