கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, October 10, 2024

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்..!!
〰️〰️〰️〰️〰️〰️
🌹🌿🌹🌿🌹🌿

🎉 நவராத்திரி விழா 🎉

நவராத்திரியின் கடைசி நாள் ஆயுத பூஜை 🛠️, சரஸ்வதி பூஜையாக 📚🎨 கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களும் ஞானத்தை வழங்குகின்ற சரஸ்வதிக்குரிய நாளாக வழிபடப்படுகிறது.

🛠️ ஆயுத பூஜை

அன்னை பராசக்தி மகிஷாசுரனை வதம் செய்வதற்காக கடும் தவம் இருந்து, ஒவ்வொரு தெய்வங்களிடம் இருந்து ஒவ்வொரு விதமான சக்தி வாய்ந்த ஆயுதங்களை பெற்றாள். போர்க்களத்திற்கு செல்வதற்கு முன், தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக அன்னை பராசக்தி தெய்வங்களிடம் இருந்து பெறப்பட்ட ஆயுதங்களை பூஜை செய்து வழிபட்டாள். அன்னை பராசக்தி ஆயுதங்களை வைத்து வழிபட்ட இந்நாளையே நாம் ஆயுத பூஜையாக கொண்டாடுகிறோம்.

இந்நாளில் நாமும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு, நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபட வேண்டும். செய்யும் தொழிலில் நம்மை உயர்த்தும் ஆயுதங்களை இறைவனாக பாவித்து, அவற்றால் எவ்வித தீங்கும் ஏற்படாமல் இருக்க வழிபடுவதே ஆயுத பூஜை ஆகும்.

அதாவது வீட்டில் இருக்கும் இயந்திரங்களால் (🔪 கத்தி, 🍲 மிக்ஸி, Grinder) எவ்வித விபத்தும் ஏற்படக்கூடாது. தொழில் நிறுவனங்களிலும் இயந்திரங்களால் எவ்வித ஆபத்தும் யாருக்கும் ஏற்படக்கூடாது. மேலும், இயந்திரங்களும் பழுது இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்று வேண்டி பூஜை செய்து வழிபட வேண்டும்.

வழிபடும் முறை :

🧹 வீடு, கடை, வாகனங்களை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் கடவுளின் இருப்பிடமாகும்.

🔧 தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சுத்தம் செய்தல் வேண்டும்.

🙏 சுத்தம் செய்த பின் தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கடவுளாக எண்ணி பூஜை செய்ய வேண்டும்.

🍚 பூஜையின் போது பொரி, பழங்கள், பேரீச்சம்பழம் போன்றவற்றை நெய்வேத்தியமாக படைத்து வழிபடுவது சிறப்பு.

✨ ஆயுத பூஜையின் சிறப்பு :

செய்யும் தொழிலே தெய்வம். நாம் செய்யும் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை கடவுளாக போற்றி வணங்குவது ஆயுத பூஜையின் நோக்கமாகும். ஆயுத பூஜையன்று, ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று உறுதி கொள்ள வேண்டும்.

📚 சரஸ்வதி பூஜை..!!

கல்வி அறிவை தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாக கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை.

வழிபடும் முறை :

🖼️ ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும்.

🌸 படத்திற்கு அருகம்புல், மலர் மாலைகள் அணிவிக்க வேண்டும்.

📚 மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, படத்தின் முன் இலை விரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை படைக்க வேண்டும்.

🪔 அதன் பிறகு சரஸ்வதி தேவிக்கு நெய் தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

👶 சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

🌿 மறுநாள் காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் சரஸ்வதி படத்தை எடுத்து விட வேண்டும்.

🧴 மஞ்சள் அல்லது சந்தனத்தில் முகம் வைத்திருந்தால் அதை நீரில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.

✨ சரஸ்வதி பூஜையின் சிறப்பு :

நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள் பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்நாள் கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும்.
🟥🍁🟥🍁🟥🍁🟥🍁🟥🍁🟥🍁

தமிழ்த்துகள்

Blog Archive