பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்
28.10.2024
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்
அதிகாரம் / Chapter: கூடாவொழுக்கம் / Imposture
குறள் 273:
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
மு.வரதராசன் விளக்கம்:
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.
பொன்மொழி :
1) அதிகம் பொறுமையுடன் நடக்காதே பைத்தியம் ஆகும் வரை விட மாட்டார்கள்
2) உனக்கென்று ஒரு தன்மானம் திமிர் இருக்கனும் அதை யாருக்காகவும் எப்போதும் விட்டுக்கொடுக்காதே
, பழமொழி :
There is no downward journey for those who keep trying
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
பொது அறிவு :
ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம் எது?
விடை : மாலிக் அமிலம்
முக்கியச் செய்திகள் : 28.10.2024 - திங்கள்
மாநிலச்செய்தி:
தமிழகத்தில் நவ.1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் உறுதி
உள்நாட்டுச்செய்தி:
ராணுவ விமான உற்பத்தி ஆலையை இன்று (28.10.2024) தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
உலகச்செய்தி:
ரூ.1 கோடி செலவிட்ட நிலையில் பிஎச்.டி படிப்பிலிருந்து தமிழக மாணவியை வெளியேற்றிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
விளையாட்டுச்செய்தி:
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் மணிகா பத்ரா கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
English
Important News:
28.10.2024 - Monday
State News:
No chance of heavy rain in Tamil Nadu till November 1: Meteorological Department confirmed
National News:
Prime Minister Modi will inaugurate the Army Aircraft Manufacturing Plant today (28.10.2024).
World News:
Oxford University expels Tamil Nadu student from PhD course after spending Rs 1 crore
Sports News:
World Table Tennis Championship: India's Manika Patra advances to quarterfinals.