A World Without Plastic - Negizhi - Poetry Tamil Literary Forum Competition
Nekili illatha ulakam tamil ilakkiya mandra potti kavithai
நெகிழி இல்லாத உலகம் - கவிதை
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி
வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
நிலம், நீர்,
வான் எனும் மூன்றும், தமிழ்த்துகள்
நெகிழி பிணிக்கப்
பெற்று பெறும் துன்பம்.
கடல் வாழ் உயிரினம்
அழியும்,
காடும் நெகிழியால்
கவலை கொள்ளும்.
பறவைகள் கூடு கட்ட
முடியாது,
பூமித் தாய்
நோய்வாய்ப்பட்டு கிடக்கிறது.
மனிதன் உயிர்வாழ படும்பாடு
புரிகிறது, தமிழ்த்துகள்
மண்ணைக் காப்போம்
என்ற உறுதி மெல்ல வருகிறது.
நெகிழிப் பைகளைத்
தவிர்த்திடுவோம்,
நீர் பாட்டில்களை
மறுசுழற்சி செய்வோம். தமிழ்த்துகள்
கடலில் நெகிழி
போகாமல் தடுப்போம்,
கடற்கரையைச்
சுத்தமாக வைப்போம்.
மரம் நட்டு காடுகளை
வளர்ப்போம், தமிழ்த்துகள்
மழை பெய்யும் வண்ணம்
செய்வோம்.
பூமித் தாயைக்
காப்போம் என்ற எண்ணம்,
பூமி முழுவதும்
பரவுவது திண்ணம்.
சிறுவர்களுக்கு
இதைக் கற்றுத் தருவோம், தமிழ்த்துகள்
சிந்தனை மாற்றம்
நிகழ்த்தி விடுவோம்.
நெகிழி இல்லாத உலகம்
நம் கனவு,
நம் கனவை நனவாய்
உருவாக்குவோம். தமிழ்த்துகள்
நெகிழி இல்லாத உலகம்
நம் கையில்,
நாம் முடிவு
செய்தால் முடியும் எளிதில். தமிழ்த்துகள்
வருங்கால சந்ததிக்கு
நல்ல உதாரணமாக,
வாழ்ந்து காட்டுவோம்
தமிழினமாக. தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம்,
விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ்
சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்