கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, July 21, 2026

எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு 2026 விடைக்குறிப்பு

8th tamil first mid term exam question answer key 2026 virudhunagar district

எட்டாம் வகுப்பு       தமிழ்

முதல் இடைப்பருவத் தேர்வு               2026                     விடைக்குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                              5 × 1 = 5

1. ஆ) ஆழி

2. ஆ) தந்தை பெரியார்

3. அ) தார்

4. இ) உணவின்

5. இ) வானம் + அளந்தது

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.                                                                     2 × 1 = 2

6. வீரமாமுனிவர்

7. பட்டை                         தமிழ்த்துகள்

III. பொருத்துக.                                                                                 3 × 1=3

8. க்,ங் - நாவின் முதல், அண்ணத்தின் அடி

9. ச்,ஞ் - நாவின் இடை, அண்ணத்தின் இடை

10. ட்,ண்       - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

IV. எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளி.                   6 × 2 =12

11. வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பையும்,

மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கையும்,

இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தையும்

இடமாகக் கொண்டு பிறக்கின்றன

12. சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப் புலவர்களால் தமிழ் காக்கப்பட்டதாகத் தமிழழகனார் கூறுகிறார்.

13. தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது.

இவ்வரி வடிவத்தையே ஓவிய எழுத்து என்பர்.

14.  கடலும் மலையும் கதிரும் நிலவும் மழையும் பனியும் இயற்கையின் கொடைகள்.

எனவே இயற்கை போற்றத்தக்கது.

15. மணம் மிகுந்த மலர்களும் கூரை போல் விரிந்திருந்த இலைகளும் வெந்து கரிய நிறம் பெற்று விட்டதால் பட்ட மரம் தனது அழகை இழந்தது

16. தினமும் 45 நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம்,

15 நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி,

7 மணிநேர தூக்கம், 3 லிட்டர் தண்ணீர் அருந்துதல்.

17. தமிழ், ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்டு வாழ்கிறது.

18. ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றை எழுதுவது கடினம்.

புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது ஓலைச்சுவடிகள் சிதைந்துவிடும்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 V. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி.                 2 × 4 = 8

19. எக்காலத்தும் நிலைபெற்று வாழும் தமிழ் மொழி.

 ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ் மொழி.

 ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து புகழ்கொண்ட தமிழ் மொழி.

 எங்கள் தாய் மொழியாகிய தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க.

20. மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.

மாறிப்போன உணவு , மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள்.

நிலத்தை உரங்களாலும், பூச்சிக் கொல்லிகளாலும் நச்சுப்படுத்தலாம் என்ற அலட்சியமான எண்ணமும் தான் இன்றைக்குப் பல நோய்கள் பெருக மிக முக்கியமான காரணங்கள் ஆகும்.

21. பாடும் பறவைகள் எல்லாம் ஒன்று கூடி பட்டமரத்திற்காகப் பாடல் பாடியது.

பனி மூடிய உலகிற்கு பட்டமரம் அழகு கொடுத்தது.

பட்ட  மரத்தின் ஆடும் கிளைகளில் சிறுவர்கள் அமர்ந்து குதிரை ஓட்டி விளையாடியது.

இவை ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்துவிட்டன.

தமிழ்த்துகள்

VI. ஏதேனும் ஒரு வினாவிற்கு மட்டும் விடையளி.             1 × 5 = 5

22 1.பாறைகளிலும் குகை சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான் மனிதன்.

2.தொடக்கக் காலத்தில் எழுத்து ஓவிய வடிவமாகவே இருந்தது.

3.இவ்வரிவடிவ எழுத்தை ஓவிய எழுத்து என்பர்.

4.ஒவ்வொரு வரி வடிவமும் அவ்வடிவத்திற்குரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது.

5.பின் அச்சொல்லின் ஓசையைக் குறிப்பதாக மாறியது.

6.ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.

7.ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளே இன்றைய எழுத்துகள் ஆகும்.

                   தமிழ்த்துகள்

23. மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம் மருந்தில்லா மருத்துவம், உடலைச் சீராக்கும் யோகம் முதலிய கலைகளைத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள்.

தமிழர் மருத்துவம் பண்பாட்டுக் கூறாக ஆகும்போது நாட்டு வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபு சார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும் பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்து இருக்கிறது.

தனித்துவமான பார்வை கொண்ட தமிழர் மருத்துவம் சூழலுக்கு இசைந்த மருத்துவம் ஆகும்.

இந்த மருத்துவத்தின் பயன்பாடோ மூலக்கூறுகளோ, மருந்துகளோ, சுற்றுச்சூழலைச் சிதைக்காது.

நோய்க்கான சிகிச்சை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமல் இருப்பதற்கு வாழ்வியலையும் சொல்கிறது.

நோயை மட்டுமன்றி, அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்குகிறது.

VII. அடிபிறழாமல் எழுதுக .                                                 1 × 3 = 3

24. தமிழ்மொழி வாழ்த்து

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!

வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு                                   தமிழ்த்துகள்

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழியவே!                                                                  - பாரதியார்                தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

VIII.எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி.               2 × 2 = 4

25. அ. சித்திர எழுத்து

ஆ. உயிரொலி                                     தமிழ்த்துகள்

26. அ. சித்திரைத் திங்கள் அன்று நான் வானில் முழு திங்களைப் பார்த்தேன்

ஆ. காலை ஆறு மணிக்கு எழுந்து ஆற்றில் குளித்தேன்

பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

27.அ வாழ்த்துகள்

ஆ பக்கங்கள்

IX. ஏதேனும் ஒரு வினாவிற்கு மட்டும் விடை அளிக்க.                            1 × 8 = 8

28) தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகள்.

பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

29) 'எனது தாய்மொழி'  கட்டுரை.

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.9865447641  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்


தமிழ்த்துகள்

Blog Archive