கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடிவினா 17 விடைக்குறிப்பு 8th TAMIL QUIZ ANSWER KEY

 1.மத்தளம், திமிலை – வேறுபாடு

விடை –

மத்தளம் – நடுப்பகுதி பெருத்தும் கடைப்பகுதி சிறுத்தும் காணப்படும்.

திமிலை – மணற்கடிகார வடிவத்தில் அமைந்திருக்கும்.

2.இசைக்கருவிகள் செய்யப் பயன்படுத்திய உலோகங்கள்.

விடை – பித்தளை, வெண்கலம்.

3.உடுக்கைக்கும்  குடுகுடுப்பைக்கும் இசைப்பதிலுள்ள வேறுபாடு.

விடை –

உடுக்கை – வலது வாயின் மீது கைகளால் அடிக்கப்படும்.

குடுகுடுப்பை – இருபுறமும் இணைக்கப்பட்ட கயிற்றில் உள்ள பாசியால் அடிக்கப்படும்.

4.பொருத்துக.

விடை –

அ.ஆகோட்பறை      – ஆநிரைகவர்தல்

ஆ.உடுக்கை           – குறி சொல்லுதல்

இ.கொம்பு               – திருவிழா, ஊர்வலம்

ஈ.சாலரா                 – கூட்டு வழிபாடு

5.இசைக்கருவிகளை வகைப்படுத்துக.

விடை –

அ.தோல் கருவிகள் – உடுக்கை, குடமுழா, திமிலை, பறை, மத்தளம், முரசு, முழவு.

ஆ.நரம்புக்கருவிகள் – யாழ், வீணை.

இ.காற்றுக்கருவிகள்– குழல், கொம்பு, சங்கு.

ஈ.கஞ்சக்கருவிகள் – சாலரா, சேகண்டி.

6.இடம்பெற்றுள்ள நூல்கள்.

விடை –

மாக்கண்முரசம் - மதுரைக்காஞ்சி.

மண்ணமைமுழவு - பொருநராற்றுப்படை.

7.இசைக்கருவிகள் இடம்பெறும் இலக்கியங்களின் பெயர்கள்

விடை –

குழல்            – சிலப்பதிகாரம், திருக்குறள்.

சங்கு            – திருப்பாவை

திமிலை        – பெரியபுராணம்

மத்தளம்        - நாச்சியார் திருமொழி

8.வீணை பேசுவதுபோல உரை

விடை –

நான் யாழ் போன்ற அமைப்புடைய நரம்புக்கருவி.

நான் ஏழு நரம்புகளைக் கொண்டவன்.

இடக்கை விரல்களால் நரம்புகளை அமுக்கியும் தேய்த்தும் வலக்கை சுண்டுவிரலால் கம்பிகளை மீட்டியும் என்னிலிருந்து இசை எழுப்புவர்.

நரம்புகள் மூலம் எழுப்பப்படும் இசையை என் குடம்,

தண்டு முதலிய பாகங்கள் பெருக்கி அனுப்பும்.

பரிவாதனி என்ற நான் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்தேன்.

9.சாலராவும் யாழும் - உரையாடல்

விடை –

சாலரா – என்னைக் கஞ்சக்கருவி என்பர்.

யாழ் – அப்படியா, நான் நரம்புக்கருவி.

சாலரா – நான் பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்டிருப்பேன். நீ...

யாழ் – நான் வில் போன்ற வளைந்த பொருளில் நரம்புகளால் செய்யப்பட்டிருப்பேன்.

சாலரா – எனக்குப் பாண்டில் என்ற பெயரும் உண்டு.

யாழ் – நான் 21 நரம்புகளுடன் பேரியாழ் என்றும், 19 நரம்புகளுடன் மீன் வடிவில் மகரயாழ் என்றும், 14 நரம்புகளுடன் சகோடயாழ் என்றும் அழைக்கப்படுவேன்.

சாலரா – நான் கோயில் கூட்டுவழிபாட்டில் இசைக்கப்படுவேன்.

யாழ் – நானே மெல்ல மெல்ல மாறி வீணையானேன்.

சாலரா – மகிழ்ச்சி, நான் உன்னைப்பற்றி அறிந்துகொண்டேன், மீண்டும் சந்திப்போம்.

யாழ் – நன்றி, நானும் உன்னைப்பற்றித் தெரிந்துகொண்டேன்.

10.தோல்கருவிகள் – பயன்படுத்தப்படும் இடங்கள்

விடை –

உடுக்கை – இறைவழிபாட்டில்.

குடமுழா – கோயில்கள்.

முரசு – போர்க்காலத்தில்.

முழவு – காலத்தை அறிவிக்க.

தமிழ்த்துகள்

Blog Archive