கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடிவினா 18 விடைக்குறிப்பு 8th TAMIL QUIZ ANSWER KEY

 1.பள்ளி சென்றான் – மறைந்துள்ள வேற்றுமை உருபு

விடை – கு

2.நண்பா படி – என்ற விளித்தொடருக்கு இணையான தொடர்

விடை – கண்ணா எடு.

3.தொடர்.

விடை – சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது தொடர்.

எடுத்துக்காட்டு        பால் பருகினான்.

4.கோடிட்ட இடத்தை நிரப்புக.

விடை –  சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவது உம்மைத்தொகை எனப்படும்.

5.சரியா, தவறா.

விடை – காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும் – சரி

6.பாம்பு பாம்பு பாம்பு

விடை – அடுக்குத்தொடர்.

7.எவ்வகைத்தொகை என எழுதுக.

விடை – அ.பொற்றொடி – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை

ஆ.பொற்றொடி வந்தாள் - அன்மொழித்தொகை

8.கயல்விழி – இத்தொகைச்சொல்லை விரித்தெழுதுக.

விடை – கயல் போன்ற விழி

9.பொறுமை என்பது சாலச் சிறந்த நற்பண்பு – இவ்வரியில் இடம்பெற்றுள்ள உரிச்சொல்.

விடை – சால

10.விடையளி

விடை –

அ.உவமைத்தொகைச்சொற்கள்- தேன்மொழி,வெண்பஞ்சு மலர்கள்

ஆ.வினைத்தொகைச்சொற்கள்- படர்கொடி, ஊறுகாய்.

இ.உம்மைத்தொகைச்சொற்கள்- நிலவுவானம், வெற்றிலைப்பாக்கு.

ஈ.தொடுத்த மாலை – பெயரெச்சத்தொடர்.

உ.வெண்பஞ்சு – பண்புத்தொகை, வெண்மை என்ற பண்பு பஞ்சு என்ற பெயர்ச்சொல்லைத் தழுவி ஆன என்ற உருபு மறைந்துள்ளது.

தமிழ்த்துகள்

Blog Archive