1.குமரகுருபரர் எழுதாத நூல்
விடை – கந்தர் அலங்காரம்
2.மயங்கொலிப் பிழையற்ற தொடர்
விடை –
கல்வி கரையில கற்பவர் நாள் சில
3.வடிவு, வனப்பு, பொழிவு, எழில்-பலசொல் தரும் ஒரு பொருள்
விடை –
அழகு
4.சரியா தவறா.
விடை –
மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டும் நூல்
நீதிநெறிவிளக்கம் ஆகும். – சரி
5.சொற்றொடரில் அமைத்தெழுதுக.
விடை –
நலன் – நாம் நல்ல குணநலன்களோடு இருக்க வேண்டும்.
6.விடுபட்ட சீர்களை எழுதுக.
விடை –
கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக்கு அழகுசெய் வார்.
7.மோனைச் சொற்கள்
விடை –
கற்றோர்க்குக்
கல்வி
கலனல்லால்
8.விடையளி
விடை –
1.சிலம்பு அணிகலன்தான் சிலப்பதிகாரம் என்ற பெயருக்குக் காரணம்.
2.பொருத்துக.
அ |
சிலம்பு |
தண்டை |
ஆ |
மேகலை |
இடைநாண் |
இ |
வளை |
வளையல் |
ஈ |
குண்டலம் |
காதணி |
உ |
சிந்தாமணி |
மணிக்கல் |
3.வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த புலவர்கள் அணிகலன்களின் பெயர்களைத் தங்கள்
காப்பியங்களுக்குச் சூட்டியுள்ளமை வியக்கத்தக்கது.
9. விடை –
அ. வெந்தணல் – வெம்மை+தணல்
ஆ.எதிர்ச்சொற்கள் – நிறைவு, குறைவு
இ.எதுகை – வெள்ளத்தால், கொள்ளத்தான், கள்ளர்க்கோ
மோனை – வெள்ளத்தால், வெந்தணலால்
வேகாது, வேந்தராலும்
கொள்ளத்தான், கொடுத்தாலும்
10.கல்வி
விடை –
1. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
2. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.