கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடிவினா 15 விடைக்குறிப்பு 8th TAMIL QUIZ ANSWER KEY

 1.அகர வரிசை

விடை –

கந்தர் கலிவெண்பா,

கயிலைக் கலம்பகம்,

சகலகலாவல்லிமாலை,

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்.

2.பொருந்தாத வேற்றுமைப்பொருள்

விடை –

கருவி.

3.விடையளி.

விடை –அ.கொய்யாப்பழம் – கொய்யா+பழம்

ஆ.கிளையில் உள்ளபோது கொய்யும் பழமென்றும் கொய்த பின் கொய்யாப் பழமென்றும் பெயர்ப்புதுமை.

இ.களியானை-மகிழ்ச்சியான யானை, மத யானை 

நிரல் – வரிசை, ஒப்பு.

கொய்து – பறித்து, அறுத்து.

ஈ.காட்டுமுயல் காது – இலை,  

யானைத்துதிக்கை – அடிமரம்.

4.சொல்லுருபுகள்.

விடை –

கொண்டு, பொருட்டு, நிமித்தம், வைத்து, காட்டிலும், ஆக

5.வேற்றுமை உருபுகள் எப்பொருளில் வந்துள்ளன என எழுதுக.

விடை –

அ.பணத்திற்குப் பருப்பு வாங்கினான் – அதுவாதல்

ஆ.இந்தியாவின் மேற்கு அரபிக்கடல் – எல்லை

இ.காமராசர் பதவியை அடைந்தார் – அடைதல்

ஈ.கர்ணனது கொடை - உரிமைப்பொருள்

6.கருவி, கருத்தாப் பொருள்களின் வகைகள்

விடை –

அ.புலவரால் பாடல் பாடப்பட்டது- இயற்றுதல் கருத்தா.

ஆ.தங்கத்தால் நகை செய்தான்- முதற்கருவி.

இ.காமராசரால் அணை கட்டப்பட்டது- ஏவுதல் கருத்தா.

ஈ.தூரிகையால் ஓவியம் வரைந்தான்- துணைக்கருவி.

7.கல்வி

விடை –

அன்பே ஆதாரமாக

உழைப்பே உரமாக

உண்மையும் நேர்மையும்

ஒழுக்கமும் மனிதநேயமும்

உள்ளத்தில் எழுவதே கல்வி.

தமிழ்த்துகள்

Blog Archive