கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, September 30, 2021

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் வகுப்பு -10 தமிழ் செயல்பாடு 1-10 ஒரு மதிப்பெண் வினாக்கள்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 
வகுப்பு -10
தமிழ்
செயல்பாடு 1-10
ஒரு மதிப்பெண் வினாக்கள்
1)புணர்ச்சி என்பது ------------- சொற்களுக்கு இடையில் நிகழ்வது .
அ) ஒன்று       ஆ) இரண்டு   இ) மூன்று    ஈ) நான்கு
2)தெய்வச்சிலை எவ்வகைப் புணர்ச்சி?
அ) இயல்புப் புணர்ச்சி 
ஆ)தோன்றல் விகாரப்புணர்ச்சி
இ) திரிதல் விகாரப்புணர்ச்சி   
ஈ) கெடுதல் விகாரப் புணர்ச்சி 
3)மரபுத்தொடர்க் கான பொருளை எழுதுக.
 கிணற்றுத் தவளை 
அ)இல்லாத ஒன்று
ஆ)பொய்யழுகை
இ)அரிதான செயல்
ஈ)உலக அறிவு இன்மை 
4)மரபுப் பிழையை நீக்கி எழுதுக .
வீட்டின் அருகே புதிதாகக் கூரை --------
அ)போட்டனர்
ஆ)அடுக்கினர்
இ)வேய்ந்தனர் 
ஈ)கட்டினர்
5)முற்றுப் பெறாத வினை ---------- எனப்படும்.
அ)முற்று
ஆ)எச்சம்
இ)வினையாலணையும் பெயர்
ஈ)வினைத்தொகை
6)தேர்ந்தெடுத்து எழுதுக.
பெரிய புத்தகம்
அ)தெரிநிலைப் பெயரெச்சம் 
ஆ)குறிப்புப் பெயரெச்சம்
இ)தெரிநிலை வினையெச்சம்
ஈ)குறிப்பு வினையெச்சம்
7)அகிலன் எடுத்தனன் கொடுத்தான் -
இத்தொடரில் அமைந்துள்ளது ----------
அ)வினையெச்சம் 
ஆ)தெரிநிலை வினையெச்சம்
இ)குறிப்பு வினையெச்சம்
ஈ)முற்றெச்சம்
8) ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவது --------- எனப்படும்.
அ) வினைமுற்று
ஆ) வினையெச்சம் 
இ) ஆகுபெயர்
ஈ) முற்றெச்சம் 
9) இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது ------------ .
அ) முதலாகுபெயர் 
ஆ) சினையாகுபெயர் 
இ) தொழிலாகுபெயர் 
ஈ) பண்பாகுபெயர் 
10) சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே! இவ்வடியில் வையகம் -  என்பதன் பொருள் ----------. 
அ) உலகம்
ஆ) கடல்
இ) ஆகாயம்
ஈ) வயல்
11) பிறமொழிச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை எழுதுக .
Dignity
அ) நேர்மை 
ஆ) கண்ணியம்
இ) எளிமை
ஈ) ஈகை 
12) Ambition
அ) குறிக்கோள்
ஆ)கொள்கை
இ)கடமை
ஈ) லட்சியம்
13) ஆலோசனை 
அ) தெளிவுரை
ஆ) ஐயம்
இ) கலந்துரையாடல்
ஈ) சந்தேகம்
14)மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
அணில் பழம் சாப்பிட்டது.
அ) உண்டது
ஆ) தின்றது
இ) கடித்தது
ஈ) கொறித்தது 
15) வானொலி கேட்டு மகிழ்ந்தனர் -எவ்வகை ஆகுபெயர் ?
அ) முதலாகுபெயர் 
ஆ) கருவியாகு பெயர்
இ) காரியவாகு பெயர்
ஈ) கருத்தாவாகு பெயர்
16) பொருத்துக.
1)  மட்பாண்டம் - தோன்றல் விகாரம் 
2)  மரவேர் - இயல்புப் புணர்ச்சி 
3)  மணி முடி - கெடுதல் விகாரம்  
4) கடைத்தெரு - திரிதல் விகாரம் 
அ) 1,2,3,4,
ஆ) 4,3,2,1
இ) 1,3,2,4
ஈ)  2,4,3,1
17)உவமைத் தொடருக்கான பொருளை அறிக .
உள்ளங்கை நெல்லிக்கனி போல
அ)எளிதில் மனதில் பதிதல்
ஆ) வெளிப்படைத் தன்மை 
இ) தற்செயல் நிகழ்வு
ஈ) எதிர்பாரா நிகழ்வு
18)குறிப்பு வினையெச்சம் ----------வெளிப்படையாகக் காட்டாது.
அ) காலத்தை
ஆ) வினையை
இ) பண்பினை
ஈ) பெயரை
19) கீழ்காணும் சொற்களில் பெயரெச்சம் ---------. 
அ) படித்து
ஆ) எழுதி
இ) வந்து
ஈ) பார்த்த
20) பின்வரும் மரபுத் தொடர்களைப் பொருளோடு பொருத்துக .
1) ஆயிரம் காலத்துப்பயிர் - இயலாத செயல் .
2) கல்லில் நார் உரித்தல் - இருப்பது போல் தோன்றும் ஆனால் இருக்காது. 
3) கம்பி நீட்டுதல் - நீண்ட காலமாக இருப்பது
4) கானல் நீர் - விரைந்து வெளியேறுதல் 
அ) 3,1,4,2
ஆ) 1,4,2,3
இ) 4,3,2,1
ஈ) 2,3,1,4
21)ஆகுபெயர் --------- வகைப்படும் .
அ) 8
ஆ)10
இ)12
ஈ) 16
22)காண் என்ற வேர்ச் சொல்லுக்கான பெயரெச்சம் --------
அ) கண்டது
ஆ) கண்டு
இ) கண்டவர்
ஈ) கண்ட
23) எண்ணலளவை ஆகுபெயர்க்கு எடுத்துக்காட்டு --------
அ) அரை லிட்டர் வாங்கு
ஆ) 5 மீட்டர் வெட்டினான்
இ) ஒன்றுபெற்றால் ஒளிமயம் 
ஈ) 2 கிலோ கொடு
24) எச்சம் ------------ வகைப்படும் .
அ) 8
ஆ) 4
இ) 2
ஈ) 6
25) கெடுதல் விகாரம் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு--------.  அ) தமிழ்தாய் 
ஆ) வாழைமரம்
 இ) புறநானூறு 
ஈ) பொற்சிலை 
26) "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" - இத்தொடரில் உண்டி என்பதன் பொருள் -----------. 
அ) உறைவிடம் 
ஆ) உணவு 
இ) செல்வம் 
ஈ) உடை 
27) விகாரப் புணர்ச்சி -------------- வகைப்படும். 
அ)8
ஆ)3
இ)5 
ஈ) 6 
28)"மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" - இத்தொடரில் குதிர்  என்பதன் பொருள் ---------
அ)  படகு 
ஆ) குதிரை 
இ) திட்டு அல்லது மேடு 
ஈ) குன்று 
29) இன்ஸ்டாகிராம் என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் ----------.
அ) கீச்சகம் 
ஆ) முகநூல் 
இ) படவரி 
ஈ) புலனம் 
30) வினா எழுத்துகள் எத்தனை? 
அ) 2
ஆ) 8 
இ) 5
ஈ) 6

தமிழ்த்துகள்

Blog Archive