கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, January 06, 2022

HITECH LAB ONLINE QUIZ TENTH 03-01-2022 பத்தாம் வகுப்பு வினாடிவினா 30 மதிப்பெண்கள்

 HITECH LAB ONLINE QUIZ TENTH 03-01-2022 பத்தாம் வகுப்பு வினாடிவினா

1.

வினைத்தொகை

 

காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப்பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது “ வினைத்தொகை” எனப்படும். காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகையாகும்.

எ.கா வீசுதென்றல், கொல்களிறு

 

வினா

1.  காலம் கரந்த பெயரெச்சம் …. ஆகும்

A.

பண்புத்தொகை

B.

உவமைத்தொகை

C.

வினைத்தொகை

D.

உம்மைத்தொகை

2.

வினைத்தொகை

 

காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப்பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது “ வினைத்தொகை” எனப்படும். காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகையாகும்.

எ.கா வீசுதென்றல், கொல்களிறு

 

வினா

2.  கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் வினைத்தொகை எது?

A.

மாநகர்

B.

சுடுசோறு

C.

பேசுநிலா

D.

வான்மதி

3.

உயிரளபெடை

 

செய்யுளில் ஓசை குறையும்போது, அதனை நிறைவு செய்ய , மொழிக்கு முதலிலும், இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும். அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவ்ற்றின் பின்னால் வரும்.  இதுவே உயிரளபெடை ஆகும். 

உயிரள்பெடை மூன்று வகைப்படும். அவை முறையே,

1. செய்யுளிசை அளபெடை

2. இன்னிசை அளபெடை

3. சொல்லிசை அளபெடை   ஆகும்.

 

வினா

1.    உயிர் நெட்டெழுத்துகள் எத்தனை?

A.

5

B.

6

C.

7

D.

8

4.

உயிரளபெடை

 

செய்யுளில் ஓசை குறையும்போது, அதனை நிறைவு செய்ய , மொழிக்கு முதலிலும், இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும். அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவ்ற்றின் பின்னால் வரும்.  இதுவே உயிரளபெடை ஆகும். 

உயிரளபெடை மூன்று வகைப்படும். அவை முறையே,

1. செய்யுளிசை அளபெடை

2. இன்னிசை அளபெடை

3. சொல்லிசை அளபெடை   ஆகும்.

 

வினா

2. உயிரளபெடை ___ வகைப்படும்.

A.

3

B.

4

C.

5

D.

6

5.

மூவகை மொழி

 

                        தனிமொழி, தொடர்மொழி, பொதுபொழி என மொழி மூன்று வகைப்படும். 

 

தனிமொழி

                        ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி எனப்படும்.

(எ.கா)   1. கண், படி – பகாப்பதம்

                  2. கண்ணன், படித்தான் – பகுபதம்

 

வினா

 

கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் தனிமொழி சொல்லைக் கண்டறிந்து எழுதுக.

A.

விரைந்து நடந்தான்

B.

மனிதன்

C.

தாமரை

D.

பேசிச் சென்றான்

6.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் வினையாலணையும் பெயர்ச்சொல்லைக்  கண்டுபிடி.

A.

வந்தான்

B.

நிற்க 

C.

பேசியவர்

D.

வந்த கண்ணன்

7.

Even though I clearly said no!”

 

Identify the character/ speaker for the above quote.

A.

Visu

B.

Maya

C.

Mrs. Krishnan

D.

Mr. Krishnan

8.

Fill in the blanks with suitable preposition.

 My father looked ______ the family.

A.

At

B.

After

C.

Down

D.

Up

9.

What was Mrs. Krishnan busy with?

A.

Music

B.

Painting

C.

Cooking

D.

Reading

10.

Which one is wrong according to the usage of Articles in grammar?

A.

It is an honorary post.

B.

How fine a place it is!

C.

This is an X-ray telescope.

D.

Colombus discovered the America.

11.

The school was declared holiday ________ rain.

A.

On behalf of

B.

On account of

C.

On seeing

D.

Knowing

12.

Fill in with correct article.

I went to _______ Chennai last week.

A.

A

B.

An

C.

The

D.

No article

13.

2mமற்றும்  3n என்ற வடிவில் அமையும் எண்களின் மீ.பொ.வ ________

A.

2

B.

1

C.

4

D.

3

14.

n(AxB)=12 மற்றும் n(A)=4 எனில் n(B) ன் மதிப்பு ?

A.

5

B.

4

C.

6

D.

3

15.

QxP={(2,-3),(2,4),(5,-3),(5,4)}எனில், கணங்கள் P மற்றும் Q யைக் காண்க

A.

P={-3,4}மற்றும் Q={2,5}

B.

P={2,5}மற்றும் Q={-3,4}

C.

P={2,-3}மற்றும் Q={2,4}

D.

P={5,-3}மற்றும் Q={5,4}

16.

A={0,1},B={0,1},C={0,1}எனில், AxBxCஎன்பது முப்பரிமாணத்தில் ______புள்ளிகள் குறிக்கிறது

A.

சதுரம்

B.

கனச்சதுரம்

C.

கனச்செவ்வகம்

D.

செவ்வகம்

17.

 n(A)=m மற்றும்  n(B)=n எனில்  A யிலிருந்து B க்கு கிடைக்கும் மொத்த உறவுகளின் எண்ணிக்கையானது___________ ஆகும்

A.

mn

B.

nm

C.

2mn-1

D.

2mn

18.

'l' என்பது ABC-ன் சமச்சீர்கோடு எனில் அதன் வரிசை சோடிகளின் வெளிப்பாடு_______

A.

(l,ABC)

B.

(∆ABC,l)

C.

(l,l)

D.

(∆ABC,PQR)

19.

நியூட்டனின் மூன்றாம் விதிப்படி இரண்டு பொருட்கள் தொடர்பில் இருக்கும்போது வினை மற்றும் எதிர் வினை என்ற இரண்டு விசைகள் செயல்படும், எனில் இந்த இரு விசைகள் 

A.

எப்போதும் ஒரே பொருளில் செயல்படும் 

B.

வெவ்வேறு பொருட்களில்  எப்போதும் எதிர் திசைகளில் செயல்படுகிறது 

C.

ஒரே அளவு மற்றும் திசையைக் கொண்டுள்ளது 

D.

இரண்டு பொருட்களுக்கும் செங்குத்தாக செயல்படுகிறது 

20.

அதிகபட்ச அதிர்வெண் கொண்ட ஒளியின் நிறம்___________ ஆகும்.

A.

ஊதா 

B.

சிவப்பு

C.

பச்சை

D.

நீலம்

21.

இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
A)  பறக்க தயாராகும் ஒரு விமானத்தின் உள்ளே இருக்கும் ஒரு விமானி,   நியூட்டனின் முதல் விதியின் படி செயல்படுகிறார். 
B)சீரான வேகத்தில் இயங்கும் ஒரு தொடர் வண்டியின் உள்ளே இருப்பவர்நியூட்டனின் முதல் விதியின் படி செயல்படுகிறார். 
இவற்றில் எது சரி ?

A.

மட்டும்

B.

 B மட்டும்

C.

A மற்றும் B இரண்டும் சரியானவை

D.

A மற்றும் B இரண்டும் தவறானவை

22.

ஒளியின் வேகம் எந்த ஊடகத்தில் அதிகம்?

A.

அடர்த்தியான ஊடகம்

B.

அடர்வு குறை  ஊடகம்

C.

வெற்றிடம்

D.

இவற்றில் ஏதுமில்லை

23.

ஒரு பொருளின் மீது செயல்படும் விசையானது கீழ்கண்ட எவற்றை மாற்றுகிறது ?

A.

இயக்கத்தின் திசை

B.

உந்தம் 

C.

இயக்க ஆற்றல்

D.

மேலே உள்ள அனைத்தும்

24.

ஒளியானது அடர்வு குறை ஊடகத்திலிருந்து அடர்வு மிகு ஊடகத்துக்கு செல்லும் போது_________ல் செல்லும்.

A.

அதிகரித்த வேகம்

B.

 குறைந்த வேகம்

C.

குறைந்த அலைநீளம் 

D.

 (b) மற்றும் ( c) இரண்டும்

25.

பன்னாட்டு நீதிமன்றம் எங்கமைந்திருந்தது?

A.

பிரிட்டன் 

B.

சுவிட்சர்லாந்து

C.

மாஸ்கோ 

D.

தி ஹேக்

26.

பன்னாட்டு சங்கத்தின் நிரந்தர உறுப்பு நாடுகள் எண்ணிக்கை?

A.

2

B.

3

30.

ஜெர்மனி பன்னாட்டு சங்கத்திலிருந்து  விலகிய ஆண்டு_______.

A.

1930

B.

1933

C.

1940

D.

1943

C.

4

D.

5

27.

பன்னாட்டு சங்கத்திற்கான கூட்டு  ஒப்பந்த ஆவணம் எந்த மாநாட்டில் தயார் செய்யப்பட்டது?

A.

அமெரிக்க மாநாடு

B.

ரஷ்ய மாநாடு

C.

பாரிஸ் மாநாடு 

D.

மாஸ்கோ மாநாடு

28.

மேற்கு ஐரோப்பாவில் பழைய ஆட்சி அதிகாரத்திற்கு எதிராகத் திரும்பிய நாடுகளுள் முதல் நாடு_________

A.

ஜெர்மனி

B.

கிரீஸ்

C.

துருக்கி

D.

இத்தாலி

29.

பன்னாட்டு சங்கம் துவக்கப்பட்ட தேதி?

A.

ஜனவரி 01 1920

B.

பிப்ரவரி 01 1920

C.

மார்ச் 01 1920

D.

ஏப்ரல் 01 1920

30.

ஜெர்மனி பன்னாட்டு சங்கத்திலிருந்து  விலகிய ஆண்டு_______.

A.

1930

B.

1933

C.

1940

D.

1943

 

பத்தாம் வகுப்பு தமிழ் விருதுநகர் மாவட்டம் வினாத்தாள், விடைக்குறிப்பு 10th tamil virudhunagar district question paper and answer key.


பத்தாம் வகுப்பு

தமிழ்

விடைக்குறிப்பு

1.கனிச்சாறு

2.தொல்காப்பியர்

3.அன்மொழித்தொகை

4.ஆசை, சினம்



5.தாவரத்தின் நுனிப் பகுதிகளைக் குறிக்கும் சொற்கள்

நெல், புல் - துளிர் அல்லது தளிர்

புளி, வேம்பு - முறி அல்லது கொழுந்து

சோளம், கரும்பு, தென்னை, பனை - குருத்து

கரும்பு - கொழுந்தாடை


6.தமிழை வாழ்த்தும் வாழ்த்துச் சொற்கள்

மண்ணுலகப் பேரரசே
முடிதாழ வாழ்த்துவமே

( பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.)


7.பாரதியார் நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா, சிந்துக்குத் தந்தை என்றெல்லாம் பாராட்டப்பெற்றார்.


8.தொகைநிலைத்தொடர்
பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி, இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்பது.

9.நச்சப்படாதவன்

பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவன்.

10.பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.



11.தமிழ் மொழி
செழுமையான மொழி
பழமையான மொழி
இலக்கிய வளமுடைய மொழி
நிலைத்த தன்மை உடைய மொழி
தனிச்சிறப்புடைய மொழி

12.இலைவகை

புளி, வேம்பு - இலை

நெல், புல் - தாள்

சோளம், கரும்பு - தோகை

தென்னை, பனை - ஓலை

காய்ந்த தாளும், தோகையும் - சண்டு

காய்ந்த இலை - சருகு


கொழுந்து வகை

நெல், புல் - துளிர் அல்லது தளிர்

புளி, வேம்பு - முறி அல்லது கொழுந்து

சோளம், கரும்பு, தென்னை, பனை - குருத்து

கரும்பு - கொழுந்தாடை


13.உயிரளபெடை

செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும். அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வருவது.

14.ஒழுக்கத்தின் சிறப்புகள்

ஒழுக்கம் அனைவருக்கும் சிறப்பைத் தரும்.

ஒழுக்கமாக வாழ்பவர் மேன்மை அடைவர்.

உலகத்தாரோடு ஒத்து வாழ்பவரே அறிவுடையவர்.

15.அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே.

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் 3 சனவரி 2022 இயல் 1,2,3 மதிப்பெண்கள் 100 tenth tamil revision exam model question paper 3

வினாத்தாள் தயாரிப்பு

திரு க.வேல்முருகன் அவர்கள், 
தமிழாசிரியர்,
ஆர்ப்பாக்கம்,
திருவண்ணாமலை மாவட்டம்.

பதிவிறக்கு/ DOWNLOAD

கொரோனாவால் ஏற்படும் உலகளாவிய பாதிப்பு கட்டுரை பேச்சுப் போட்டி CORONA COVID 19 Essay speech

கொரோனாவால் ஏற்படும் உலகளாவிய பாதிப்பு

அன்னைத் தமிழாய் நான் இதுவரை பேசிவந்தேன் கன்னித்தமிழ் பேச்சாய் இந்த அவையில் நிறுத்தி அழகு பார்க்கிறாள் தமிழ்த் தாய் தமிழ் அன்னைக்கு முதல் வணக்கம்.

நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்

வாய் நாடி வாய்ப்பச் செயல் - என்று கூறுகிறார் திருவள்ளுவர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. கொரானா என்ற பெரும் தொற்று இன்று உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. இரண்டு உலகப் போர்கள் தராத பேரழிவை இந்த நுண் கிருமி தந்து விடுமோ என்று உலக நாடுகள் அஞ்சி நடுங்குகின்றன. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று அப்பர் பாடினார். இன்றைக்கு அப்பர் இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே குறுகிக் கிடக்கும் நிலைதான் வந்திருக்கும் உலகம் முழுதும் 2008 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் வங்கிகள் மூடப்பட்டன. பெரும் நிறுவனங்கள் சரிவைச் சந்தித்து இருக்கின்றன. உலகின் மக்கள் தொகையில் சுமார் 25 கோடி பேரை தொற்றி இருக்கிறது இந்த உயிர்க்கொல்லி இதை எண்ணும் போது எல்லாம் வல்ல இறைவனின் தண்டனையோ இது! என்று எண்ணத் தோன்றுகிறது இயற்கைக்கு எதிராக வாழ்ந்து வரும் மனிதன் மனிதத் தன்மை இழந்து மிருகமாக சண்டை போடும் நிலை வந்துவிட்டதை இறைவனால் கூட பொறுக்க முடியவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

2019 இல் சீனாவில் ஊகான் நகரில் புறப்பட்ட இந்த உயிர்கொல்லி உலகம் முழுவதிலும் உயிர்களைத் தன் பசிக்கு இரையாக்கி வருகிறது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள அதிகாரப் போட்டி சீனாவின் மீது பொருளாதார தடை விதிக்கும் அளவுக்கு வந்துவிட்டது. பெரும் எண்ணெய் நிறுவனங்கள் சரிவைச் சந்தித்து இருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுத்து விட்டது. நோய்த் தொற்றால் உடல்நலக்குறைவு மட்டுமல்ல பங்குச் சந்தையும் படுகுழியில் விழுந்து விட்டது. அமெரிக்கா இந்தியா பிரேசில் பிரிட்டன் ரஷ்யா ஆகிய 5 நாடுகள் கொரோனா தொற்றின் வரிசையில் முதல் 5 இடங்களைப் பிடிக்கின்றன .ஏறத்தாழ 25 லட்சம் உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது இந்த பெரும் தொற்று. 22 கோடி பேர் இதிலிருந்து மீண்டு இருந்தாலும் இன்னும் இரண்டு கோடிக்கும் மேலான மக்கள் சிகிச்சையில் இருப்பது வருத்தம் அளிக்கிறது. சிறு நோய்க்கிருமி என்ன செய்துவிடும் என்று நாம் நினைத்து விடக் கூடாது வீட்டுக் கதவை பூட்டிக்கொண்டு மக்களை வெளியே வரவிடாமல் செய்து விட்டது. உலகமயமாக்கல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் ஈராக் ரஷ்யா நைஜீரியா வெனிசூலா போன்ற ஹைட்ரோகார்பன் உற்பத்தி மையங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது. தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்துக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய எண்ணெய் விலை பற்றிய இப்பேச்சு உலக வர்த்தகத்தைப் புரட்டிப் போட்டு விட்டது இன்னும் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தப் போகிறதோ என்ற பேரதிர்ச்சியுடன் தான் இந்த ஆண்டு பிறந்திருக்கிறது. இனி ஒரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம் என்று நாம் முடிவெடுக்க வேண்டும் வெள்ளம் வருமுன் தானே அடையும் போட வேண்டும் ஒரு கை தட்டினால் ஓசை வராது ஊர் கூடித் தான் தேர் இழுக்க வேண்டும். வாருங்கள் ஒன்று கூடுவோம்! கொரோனாவுக்கு எதிரான போராளிகளை ஊக்கப்படுத்துவோம்! ஒன்றிணைவோம்! பெருநோயை வென்றெடுப்போம்! வாய்ப்புக்கு நன்றி வருகிறேன் விடைபெறுகிறேன்!|

மு. முத்து முருகன் தமிழாசிரியர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ம.ரெட்டியபட்டி

Tuesday, January 04, 2022

INCOME TAX AUTOMATIC CALCULATOR 2022 FOR TEACHERS EXCEL SHEET தானியங்கி வருமான வரி கணக்கீட்டுத்தாள் IT CALCULATION XL

 பதிவிறக்கு/DOWNLOAD

INCOME TAX AUTOMATIC CALCULATOR 2022 FOR SCHOOL EXCEL SHEET பள்ளி தானியங்கி வருமான வரி கணக்கீட்டுத்தாள் IT CALCULATION XL

நண்பர்களே வணக்கம்🙏🏻

2021-2022 நிதியாண்டில் வருமான வரி கணக்கீடு செய்ய...
எளிய Excel calculation sheet தயாரித்துள்ளேன்.

குறைந்த உள்ளீடு...
24 நபர்களுக்கு ஒரே நேரத்தில் கணக்கீடு செயலாம்...

மார்ச் 2021 pay மட்டும் போதும்...

Old regime new regime இரண்டையும்  கணக்கீடு செய்யும்..

A4 தாளில் இரண்டு பக்கத்தில் print out...

Jacto-geo strike period arrears தனி நபர்களுக்கு உள்ளீடு செய்யவும்...

மாற்றுத் திறனாளிகளுக்கு 80U. Section புதிதாக இணைக்கப்பட்டுள்ளது...

பயன்படுத்தி பாருங்கள்...
திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் தேவை எனில் தங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Please use it in laptop or desktop computer

க.செல்வக்குமார், 
முதுகலை வேதியியல் ஆசிரியர், 
விருதுநகர் மாவட்டம்.


பதிவிறக்கு/DOWNLOAD

Saturday, January 01, 2022

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 10th tamil model first revision exam question

12 ஆம் வகுப்பு தமிழ் அகமதிப்பீடு சான்றிதழ், தேர்வுகள் 4 வினாத்தாள் pdf 12th internal mark certificate and 4 exam question papers +2

பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் திருப்புதல் மாதிரி வினாத்தாள் 2022 இயல் 1-3 tenth TAMIL MODEL QUESTION PAPER 2

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2 இயல் 1,2,3 pdf 10th TAMIL REVISION EXAM MODEL QUESTION PAPER 2 MARKS 100

 பதிவிறக்கு/DOWNLOAD

தமிழ்த்துகள்

Blog Archive