கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, February 09, 2022

பத்தாம் வகுப்பு உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் வினாடிவினா tenth hi tech lab online quiz 07-02-2022

 tenth hi tech lab online quiz 07-02-2022 

பத்தாம் வகுப்பு உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் வினாடிவினா

1.

சோலை,காவல் என்ற சொற்களினைக் குறிக்கும் சொல்லைக் கண்டறிக
 

A.

கா

B.

நாடு

C.

மலை

D.

சீலம்

2.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் தனிமொழியைக் கண்டறிக.

A.

தாமரை

B.

பல மலை

C.

நன்குப் பேசினான்

D.

அரசன்

3.

வாழ்க்கை என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?

A.

வாழ்தல்

B.

வாழு

C.

வாழ்

D.

வாழ்க

4.

கோ என்ற சொல் உணர்த்தும் பொருள்கள் எவை?

A.

நாடு,மலை

B.

பசு, அரசன்

C.

ஆறு, அருவி

D.

மீன், ஆடு

5.

கொடுக்கப்பட்டுள்ள சொல்லில் ஒற்றளபெடை சொல் எது?

A.

தளைஇ

B.

கெடுப்பதூவும்

C.

மழைஇ

D.

சங்ங்கு

Question Status

6.

செய்யுளில் ஓசை குறைவு ஏற்படாத போதும் இனிய ஓசை தருதல் பொருட்டு அளபெடுப்பது____

A.

செய்யுளிசை அளபெடை

B.

சொல்லிசை அளபெடை

C.

இன்னிசை அளபெடை

D.

ஒற்றளபெடை

7.

Find out the noun form of the wordexhaust

A.

exhausting

B.

exhaustively

C.

exhaustive

D.

exhaustion

8.

The seagull's parents threatened ……………..if he didn't fly.

A.

never to talk with him

B.

to punish him

C.

to starve him

D.

to abandon him

9.

The sight of …………….maddened the young Seagull

A.

his brother's flying

B.

his siblings enjoying without him

C.

food

D.

long stretch of the sea

10.

Choose the correct passive form of is writing

A.

is being writing

B.

was being writing

C.

is being written 

D.

are being writing 

11.

Fill in the blank with appropriate Modal verb

My father …………play badminton in the evening when he was at college.

A.

can

B.

used to 

C.

may

D.

should

12.

 According to Henry Van Dyke, What should one not mourn for?

A.

the things that disappear 

B.

the future 

C.

the hurdles in life

D.

the present situation 

Question Status

13.

QxP={(2,-3),(2,4),(5,-3),(5,4)}எனில், கணங்கள் P மற்றும் Q யைக் காண்க

A.

P={-3,4}மற்றும் Q={2,5}

B.

P={2,5}மற்றும் Q={-3,4}

C.

P={2,-3}மற்றும் Q={2,4}

D.

P={5,-3}மற்றும் Q={5,4}

14.

        a,b,c,  என்ற மூன்று எண்கள் ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் அமையும்  என இருந்தால் மட்டுமே_____________.

A.

2a= ( c+a)

B.

2c=( b+a)

C.

2c=(a+c)

D.

2b= (a+c)

15.

'l' என்பது ABC-ன் சமச்சீர்கோடு எனில் அதன் வரிசை சோடிகளின் வெளிப்பாடு_______

A.

(l,ABC)

B.

(∆ABC,l)

C.

(l,l)

D.

(∆ABC,PQR)

16.

n(AxB)=12 மற்றும் n(A)=4 எனில் n(B) ன் மதிப்பு ?

A.

5

B.

4

C.

6

D.

3

Question Status

17.

 n(A)=m மற்றும்  n(B)=n எனில்  A யிலிருந்து B க்கு கிடைக்கும் மொத்த உறவுகளின் எண்ணிக்கையானது___________ ஆகும்

A.

mn

B.

nm

C.

2mn-1

D.

2mn

18.

A={0,1},B={0,1},C={0,1}எனில், AxBxCஎன்பது முப்பரிமாணத்தில் ______புள்ளிகள் குறிக்கிறது

A.

சதுரம்

B.

கனச்சதுரம்

C.

கனச்செவ்வகம்

D.

செவ்வகம்

19.

கார்களில் சீட் பெல்ட்கள் வழங்கப்படுகின்றன, இதனால் அவசரகால தடை (பிரேக்கிங்) காரணமாக கார் திடீரென நிறுத்தப்பட்டால்,
 முன் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் நபர்கள் வேகமாக முன்னோக்கி வீசப்படுவதில்லை அதனால்  காயமடையாமல் காப்பாற்றப்படுவார்கள். 
காரை திடீரென நிறுத்துவதில் ஒரு நபர் முன்னோக்கி செல்வது எந்த விதியின் அடிப்படையில் செயல்படுகிறது ?

A.

நியூட்டனின் முதல் இயக்க விதி

B.

நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி

C.

 நியூட்டனின் மூன்றாவது இயக்க விதி    

D.

நியூட்டனின் ஈர்ப்பு விதி

20.

சரியான விடையைத் தேர்வுசெய்க.

நகரும் பொருளின் நிலைமம்  இதைப் பொறுத்தது.

i. பொருளின் நிறை

ii. பொருளின் உந்தம்

iii. பொருளின் வேகம்

iv. பொருளின் வடிவம்

A.

(i) மற்றும்  (ii)

B.

 (i) மட்டும்

C.

(ii) மட்டும் 

D.

(iii) மற்றும் (iv)

21.

ஒரு ராக்கெட்டில், எரிபொருளின் எரிப்பு மூலம் உற்பத்தி செய்யப்படும் பெரிய அளவிலான வாயுக்கள்
 அதன் வால் முனை வழியாக கீழ்நோக்கிய திசையில் மிகப்பெரிய வேகத்துடன் தப்பிக்க அனுமதிக்கப்படுகிறது மற்றும்
 ராக்கெட்டை மேல்நோக்கி நகர்த்த வைக்கிறது. 
ராக்கெட் எந்த கொள்கையின் அடிப்படையில்   செயல்படுகிறது ?

A.

 நிலைம   திருப்பு திறன்          

B.

உந்த அழிவின்மை விதி 

C.

 நியூட்டனின் முதல் விதி   

D.

நியூட்டனின் ஈர்ப்பு விதி

22.

நியூட்டனின் இரண்டாம் விதி இவ்வாறு அழைக்கப்படுகிறது

A.

நிறையின் விதி 

B.

விசையின் விதி

C.

 ஈர்ப்பியல் விதி

D.

உந்த அழிவின்மை விதி

23.

லென்சுகளில் குவியத்தூரத்தின் தலைகீழி என்ன?

A.

குவியத்தூரம்

B.

வளைவு ஆரம்

C.

ஒளி மையம்

D.

லென்சின் திறன்

24.

வயதுவந்த மனித கண்ணின் தெளிவான  பார்வை தூரத்திற்கான குறைந்த தூரம்?

A.

0.50m

B.

0.75m

C.

0.25m

D.

2.5m

25.

மீஜி சகாப்தத்தின் போது________ ஒரு பெரிய தொழில்துறை நாடாகவும்ஏகாதிபத்திய சக்தியாகவும் மாறியது.

A.

சீனா

B.

ஜப்பான்

C.

மங்கோலியா

D.

 வியட்நாம் 

26.

ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” எனக் கூறியவர் யார்?

A.

லெனின்

B.

வின்ஸ்டன் சர்ச்சில் 

C.

ஹிட்லர்  

D.

முசோலினி

27.

பால்கன் கழகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

A.

1911

B.

1912

C.

1913

D.

1914 

28.

பதினெட்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில் தென்மேற்கு ஐரோப்பாவில் _________ நாடு வலிமை வாய்ந்ததாக திகழ்ந்தது.

A.

ஜெர்மனி

B.

இத்தாலி

C.

ஆஸ்திரியா

D.

துருக்கி

29.

இங்கிலாந்து தொழில் வளர்ச்சிச் சந்தையின் போட்டி நாடுகள் எவை?

A.

ஜெர்மனி, அமெரிக்கா 

B.

பிரான்சு, அமெரிக்கா 

C.

இத்தாலி, அமெரிக்கா

D.

ஜெர்மனி, இத்தாலி  

30.

முதல் உலகப் போரின் மிகப்பெரும் விளைவு ………………… புரட்சி ஆகும்

A.

 சீன

B.

ரஷ்ய

C.

பிரெஞ்சு

 

D.

எதுவுமில்லை

 

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு 2022 விடைக்குறிப்புTenth tamil first revision exam answer key

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு 2022 விடைக்குறிப்பு
Tenth tamil first revision exam answer key

1.ஆ-மணிவகை   

2-இ-அன்மொழித்தொகை

3 ஆ-எம்+தமிழ்+நா

4 அ- உம்மைத்தொகை

5 ஈ-தேவநேயப்பாவாணர்

6 ஆ-எட்டு

7 இ-தாவரங்களின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்

8 ஈ- ௪ , ௫

9 அ-காற்று

10 ஆ பாண்டிய மன்னன்

11 ஈ-அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

12  ஆ- மோனை, எதுகை

13 அ- சீராக

14 ஈ அவித்து விடாதே,மடித்து விடாதே

15 இ பாரதியார்

16  உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படுகிறது .

17 அ- தேவநேயப்பாவாணர் எந்தக் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தார் ?

  ஆ-பூவின் தோற்றநிலை எது?

18 உலகியல் நூறு , பாவியக் கொத்து, கனிச்சாறு, பள்ளிப்பறவைகள்

19 வரகு , காடைக்கண்ணி, குதிரைவாலி

20 இலை ,தாள் ,தோகை, ஓலை, சண்டு, சருகு முதலியன தாவரத்தின் இலை வகைகளைக் குறிக்கும் .

21 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்ப தறிவு

22 சிரித்துச் சிரித்துப்பேசினார்

23 அ காற்றின் பாடல்

  ஆ வானத்தின் நடனம்

24  இறகு

    குருதி

    வாள்

    அக்கா

    மதி

    படகு

 திருக்குறள் 

25 வேங்கை - மரம், புலி

   வேம் + கை வேகின்ற  கை

   வேங்கை என்னும் சொல் தனிமொழியாய் நின்று மரம் எனும் பொருளையும், தொடர்மொழியாய் வேகின்ற கை என வேறு பொருளையும் தருவதால் பொதுமொழி.

26  தேனில்  ஊறிய   

    தேறும்  காரமதை

    உள்ளளவும்

    யுணர்ந்தின்    புறுவோமே

27.கரும்பு தின்றான் -- வேற்றுமைத்தொகை

 வீசு தென்றல்  -- வினைத்தொகை

28 கலந்துரையாடல்

   நவீன இலக்கியம்

29..'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'

இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

1.நாற்று - நெல் நாற்று நட்டேன்.

2.கன்று - வாழைக்கன்று வளமாக இருந்தது.

3.பிள்ளை -தென்னம்பிள்ளையைத் தெற்கில் வைத்தேன்.

4.வடலி -பனை வடலியைப் பாங்காக வளர்த்தேன்.

5.பைங்கூழ் - பைங்கூழ் பசுமையாக இருந்தது.

30   நிலம் - தரிசு,   கரிசல், புறம்போக்கு, சுவல், அவல், முரப்பு

     நீர்நிலை - ஆறு, குளம், குட்டை, கடல்

31 அ-  மொழியாகும்

   ஆ- நாட்டின் தனிப்பெரும் வளத்தினாலேயே

    இ-மொழி நாகரிகத்தை அளந்தறிவதற்கு சிறந்த வழியாக உள்ளது.

32  நற்றிணை

     குறுந்தொகை

     ஐங்குறுநூறு

     பதிற்றுப்பத்து

     பரிபாடல்

     கலித்தொகை

      அகநானூறு

      புறநானூறு

33  அ- மனதை மயங்கச்செய்யும்

    ஆ-மகரந்தத், மயலுறுத்து

    இ—காற்றை

34 அ
தென்னன்மகளே திருக்குறளின் மாண்புகழே

இன்றும் பாப்பத்தே எண்தொகையே நற்கணக்கே

மன்னுஞ் சிலம்பே மணிமே கலைவடிவே

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே !


அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

-    பெருஞ்சித்திரனார்


35 அலகிடல்
ஒழுக்/கம் - நிரை நேர் - புளிமா
விழுப்/பம் - நிரை நேர் - புளிமா
தர/லான் - நிரை நேர் - புளிமா
ஒழுக்/கம் - நிரை நேர் - புளிமா
உயி/ரினும் - நிரை நிரை - கருவிளம்
ஓம்/பப் - நேர் நேர் - தேமா
படும் - மலர்
இக்குறட்பா மலர் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

36 அறிதல்  அறியாமை

  புரிதல் புரியாமை

  தெரிதல் தெரியாமை

  பிறத்தல் பிறவாமை

37 இன்னிசை அளபெடை

 செய்யுளில் ஓசை குறையாத இடத்தும்  இனிய ஓசைக்காக குறில் நெடிலாக அளபெடுப்பது  இன்னிசை அளபெடை ஆகும்.

38

                 உலகில் உள்ள தொன்மையான மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்று என்றால் மிகையாகாது. இன்றும் எழுத்தளவிலும் பேச்சளவிலும் தன் தொன்மையைக் காத்து சீரும் சிறப்போடும் வாழ்ந்துகொண்டிருக்கிறது

நம் தமிழ் மொழி.

                தமிழ்மொழி தொன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என பலவகை பெருமைகளை ஒருங்கேயுடையது என்கிறார் ஞா.தேவநேயப் பாவாணர்.

          முண்டாசுக் கவிஞன் மகாகவி பாரதியோ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றார். அந்தளவிற்குத் தமிழ்மொழியின் பெருமையை உலகறியும். மேலும் தமிழ்மொழி இயற்கையாகவே பேசுவதற்கு எளிமையாக அமைந்திருப்பதால் நாம் தமிழ் எழுத்துகளை எளிதாக உச்சரிக்கலாம்.

                 தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டு அறிஞர் ஜி.யு.போப்., தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தம் கல்லறையில்இங்கே ஒருதமிழ் மாணவன் உறங்கிக்  கொண்டிருக்கிறான்" என்று பொறிக்கச் செய்தார்.

        உலகின் மூத்த மொழி தமிழ்மொழி மூத்தக்குடி வளர்த்த மொழியாம் தமிழ்மொழி மற்ற மொழிகளைக்காட்டிலும் இனிமையும், பெருமையும் பல்வேறு இலக்கிய தொன்மைகளையும் இயல், இசை, நாடகம் முத்தமிழ் கொண்ட மொழியாம் நம் தமிழ் மொழி, தமிழ்மொழிக்கு ஈடு இணை இவ்வுலகில் எந்த மொழியும் இல்லை.

.


·         மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு வா

·         இனிய வாசனையுடன் வா

·         இலைகளின் மீதும் நீரலைகள் மீதும் உராய்ந்து

·         ப்ராண ரசத்தை கொண்டு வா

·         உயிர் நெருப்பை காத்து நன்றாக வீசு   

·         மெதுவாக நல்ல லயத்துடன் நின்று வீசு.

39 
தலைப்பு 1
அனுப்புநர்
பெறுநர்    1
விளி,
பொருள்  1
செய்தி  1
இப்படிக்கு
நாள்,இடம்
உறைமேல் முகவரி 1

40 பொருத்தமாக இருப்பின் மதிப்பெண்கள் வழங்கலாம்

41 நூலக உறுப்பினர் படிவம்

42 

பிறர் மனம் மகிழும்

  அறம் வளரும்

  புகழ் , பெருமை சேரும்

  நல்ல நண்பர்கள்    சேருவர்

 அன்பு நிறையும்


ஆ- மொழிப்பெயர்ப்பு 

பொன்போன்ற சூரியன், அதிகாலையில் தோன்றிப் பிரகாசமான கதிர்களைக் கொண்டு, உலக இருளைப் போக்குகிறது. பால் மேகங்கள் அலையத் தொடங்குகின்றன. வண்ணமயமான பறவைகள், தங்கள் காலை இசையால் மகிழ்ச்சி அடைகின்றன. அழகிய பட்டாம்பூச்சிகள், மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. மலர்களின் வாசனை, தென்றல் காற்றை நிரப்புகின்றது. காற்று, எல்லா இடங்களிலும் வீசி மகிழ்ச்சியூட்டுகிறது.

 

43 
பொருத்தமாக இருப்பின் மதிப்பெண்கள் வழங்கலாம்.

44, 45
தலைப்பு 1
முன்னுரை 1
மேற்கோள் 1
உள் தலைப்பு, கருத்து 4
முடிவுரை 1

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு பலவுள் தெரிக விடைக்குறிப்பு 10th tamil first revision exam one word answer key

1.மணிவகை
2.அன்மொழித்தொகை
3.எம்+தமிழ்+நா
4.உம்மைத்தொகை
5.தேவநேயப்பாவாணர்
6.எட்டு
7.தாவரங்களின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்
8.௪௫
9.காற்று
10.பாண்டிய மன்னன்
11.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
12.மோனை, எதுகை
13.சீராக
14.அவித்துவிடாதே, மடித்துவிடாதே
15.பாரதியார்


மு.முத்துமுருகன்,தமிழாசிரியர்,அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி,ரெட்டியபட்டி.

Tuesday, February 08, 2022

7ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு புதுமை விளக்கு, அணி 7th tamil model notes of lesson puthumai vilakku, ani

8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 7 அறிவுசால் ஔவையார், யாப்பு 8th tamil model notes of lesson avvaiyar, yappu

9ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இராவண காவியம் 9th tamil model notes of lesson ravana kaviyam

பத்தாம் வகுப்பு கணக்கு மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் 3 tenth 2022 maths model exam question paper 3

பத்தாம் வகுப்பு கணக்கு மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2 tenth 2022 maths model exam question paper 2

பத்தாம் வகுப்பு கணக்கு மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் 1 tenth 2022 maths model exam question paper 1

தமிழ்த்துகள்

Blog Archive