9th tamil model notes of lesson
lesson plan august 4
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
04-08-2025 முதல் 08-08-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
உள்ளத்தின் சீர் – கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
மார்கழிப் பெருவிழா.
6.பக்கஎண்
57 - 58
7.கற்றல் விளைவுகள்
T-9012 விழாக்கள் பண்பாட்டின் தொடர்ச்சியாகக்
கொண்டாடப்பட்டு வருபவை என்பதை உணர்ந்து பங்கேற்றல்.
8.கற்றல்
நோக்கங்கள்
தமிழர்தம்
பண்பாட்டு அடையாளத்தை உணர்தல்.
9.நுண்திறன்கள்
வழிபாடு குறித்து அறிதல்.
விழா நிகழ்வுகளைப் பற்றி அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_0.html
https://tamilthugal.blogspot.com/2022/05/andal.html
https://tamilthugal.blogspot.com/2024/12/7-7.html
https://tamilthugal.blogspot.com/2024/12/7-7_21.html
https://tamilthugal.blogspot.com/2024/12/4-4_12.html
https://tamilthugal.blogspot.com/2024/12/4-4_15.html
11.ஆயத்தப்படுத்துதல்
மார்கழி
மாத வழிபாடுகளைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
ஆண்டாள் குறித்து வினவி, திருப்பாவையை அறிமுகப்படுத்துதல்.
மாணிக்கவாசகர் பற்றிக் கூறி, திருவெம்பாவையை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
இலக்கியங்களில் வழிபாடு
குறித்து அறியச் செய்தல்.
திருப்பாவை பாடல் குறித்து விளக்குதல். வழிபாடு
குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
திருவெம்பாவை
பாடல் குறித்து விளக்குதல். சைவ, வைணவம் குறித்து மாணவர்கள் அறிதல்.
தமிழரின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
விழா
குறித்த பாடல்களைப் படைத்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி
– பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்
ஆழ்வார் ...............................
ந.சி.வி – திருவெம்பாவை -
விளக்குக.
உ.சி.வி – திருப்பாவை குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
ஆனைச்சாத்தான் குருவி பற்றிய தகவல்களைத் திரட்டுதல்.
ஆண்டாள் பற்றிய தகவல்களை அறிதல்.

