10th Tamil Model notes of lesson
Lesson Plan August 11
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
11-08-2025 முதல் 14-08-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
கூட்டாஞ்சோறு – கற்கண்டு, வாழ்வியல் இலக்கியம்.
5.உட்பாடத்தலைப்பு
தொகைநிலைத்தொடர்கள், திருக்குறள்.
6.பக்கஎண்
59 - 70
7.கற்றல் விளைவுகள்
T-1012 மொழிப் பயன்பாட்டில் தொகைநிலைத்
தொடர்களின் வகைகளை அறிந்து எழுதுதல்.
T-1013 அறஇலக்கியத்தைப் படித்துணர்ந்து
வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
தொகைநிலைத்
தொடர்களை அறிதல்.
திருக்குறள்
அறக்கருத்துகளை அறிதல்.
9.நுண்திறன்கள்
ஆறுவகை தொகைநிலைத் தொடர்களை அறிந்துகொள்ளுதல்.
20 திருக்குறள்களைப் பொருளுடன் படித்துணர்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/12/2-10th-tamil-online-test-with_19.html
https://tamilthugal.blogspot.com/2024/08/10th-tamil-important-notes-tnpsc-tet_8.html
https://tamilthugal.blogspot.com/2023/06/2-10th-tamil-mind-map.html
https://tamilthugal.blogspot.com/2021/07/10th-tamil-ilakkanam-thokainilaithodar.html
https://tamilthugal.blogspot.com/2021/07/2.html
https://tamilthugal.blogspot.com/2024/09/3.html
https://tamilthugal.blogspot.com/2020/05/tenth-tamil-memory-poem-thiru.html
https://tamilthugal.blogspot.com/2020/05/tenth-tamil-memo.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த தொகைச்சொற்களைக் கூறச் செய்தல்.
திருக்குறள்
குறித்து அறிந்தவற்றைக் கேட்டல்.
12.அறிமுகம்
தொகை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
வள்ளுவர் குறித்து அறிந்தவற்றைக் கேட்டல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
ஆறுவகை தொகைநிலைத்
தொடர்களையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.
இருபெயரொட்டுப் பண்புத்தொகை, உருபும் பயனும் உடன்தொக்கதொகை குறித்தும் மாணவர்களுக்கு விளக்குதல்.
வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை
குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
திருக்குறள்,
திருவள்ளுவர் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.
ஒழுக்கம், மெய்உணர்தல்,
பெரியாரைத் துணைக்கோடல், கொடுங்கோன்மை, கண்ணோட்டம், ஆள்வினை உடைமை, நன்றிஇல்
செல்வம் அதிகாரங்களில் பாடப்பொருளில் உள்ள குறள்களை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப்
போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தொகைச் சொற்களை அறிந்து வரல்.
திருக்குறள்
குறித்து அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி
– தொகைநிலைத்தொடர்
...................... வகைப்படும்.
ந.சி.வி – பண்புத்தொகையை
விளக்குக.
உ.சி.வி – உவமையணியை எடுத்துக்காட்டுடன் விவரித்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
தொகைச் சொற்களுக்குப் புதிய எடுத்துக்காட்டுகளைத்
திரட்டுதல்.
திருக்குறளின் சிறப்புகள் குறித்து அறிந்து வருதல்.

