கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, February 09, 2022

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு 2022 விடைக்குறிப்புTenth tamil first revision exam answer key

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு 2022 விடைக்குறிப்பு
Tenth tamil first revision exam answer key

1.ஆ-மணிவகை   

2-இ-அன்மொழித்தொகை

3 ஆ-எம்+தமிழ்+நா

4 அ- உம்மைத்தொகை

5 ஈ-தேவநேயப்பாவாணர்

6 ஆ-எட்டு

7 இ-தாவரங்களின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்

8 ஈ- ௪ , ௫

9 அ-காற்று

10 ஆ பாண்டிய மன்னன்

11 ஈ-அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

12  ஆ- மோனை, எதுகை

13 அ- சீராக

14 ஈ அவித்து விடாதே,மடித்து விடாதே

15 இ பாரதியார்

16  உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படுகிறது .

17 அ- தேவநேயப்பாவாணர் எந்தக் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தார் ?

  ஆ-பூவின் தோற்றநிலை எது?

18 உலகியல் நூறு , பாவியக் கொத்து, கனிச்சாறு, பள்ளிப்பறவைகள்

19 வரகு , காடைக்கண்ணி, குதிரைவாலி

20 இலை ,தாள் ,தோகை, ஓலை, சண்டு, சருகு முதலியன தாவரத்தின் இலை வகைகளைக் குறிக்கும் .

21 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்ப தறிவு

22 சிரித்துச் சிரித்துப்பேசினார்

23 அ காற்றின் பாடல்

  ஆ வானத்தின் நடனம்

24  இறகு

    குருதி

    வாள்

    அக்கா

    மதி

    படகு

 திருக்குறள் 

25 வேங்கை - மரம், புலி

   வேம் + கை வேகின்ற  கை

   வேங்கை என்னும் சொல் தனிமொழியாய் நின்று மரம் எனும் பொருளையும், தொடர்மொழியாய் வேகின்ற கை என வேறு பொருளையும் தருவதால் பொதுமொழி.

26  தேனில்  ஊறிய   

    தேறும்  காரமதை

    உள்ளளவும்

    யுணர்ந்தின்    புறுவோமே

27.கரும்பு தின்றான் -- வேற்றுமைத்தொகை

 வீசு தென்றல்  -- வினைத்தொகை

28 கலந்துரையாடல்

   நவீன இலக்கியம்

29..'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'

இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

1.நாற்று - நெல் நாற்று நட்டேன்.

2.கன்று - வாழைக்கன்று வளமாக இருந்தது.

3.பிள்ளை -தென்னம்பிள்ளையைத் தெற்கில் வைத்தேன்.

4.வடலி -பனை வடலியைப் பாங்காக வளர்த்தேன்.

5.பைங்கூழ் - பைங்கூழ் பசுமையாக இருந்தது.

30   நிலம் - தரிசு,   கரிசல், புறம்போக்கு, சுவல், அவல், முரப்பு

     நீர்நிலை - ஆறு, குளம், குட்டை, கடல்

31 அ-  மொழியாகும்

   ஆ- நாட்டின் தனிப்பெரும் வளத்தினாலேயே

    இ-மொழி நாகரிகத்தை அளந்தறிவதற்கு சிறந்த வழியாக உள்ளது.

32  நற்றிணை

     குறுந்தொகை

     ஐங்குறுநூறு

     பதிற்றுப்பத்து

     பரிபாடல்

     கலித்தொகை

      அகநானூறு

      புறநானூறு

33  அ- மனதை மயங்கச்செய்யும்

    ஆ-மகரந்தத், மயலுறுத்து

    இ—காற்றை

34 அ
தென்னன்மகளே திருக்குறளின் மாண்புகழே

இன்றும் பாப்பத்தே எண்தொகையே நற்கணக்கே

மன்னுஞ் சிலம்பே மணிமே கலைவடிவே

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே !


அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

-    பெருஞ்சித்திரனார்


35 அலகிடல்
ஒழுக்/கம் - நிரை நேர் - புளிமா
விழுப்/பம் - நிரை நேர் - புளிமா
தர/லான் - நிரை நேர் - புளிமா
ஒழுக்/கம் - நிரை நேர் - புளிமா
உயி/ரினும் - நிரை நிரை - கருவிளம்
ஓம்/பப் - நேர் நேர் - தேமா
படும் - மலர்
இக்குறட்பா மலர் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

36 அறிதல்  அறியாமை

  புரிதல் புரியாமை

  தெரிதல் தெரியாமை

  பிறத்தல் பிறவாமை

37 இன்னிசை அளபெடை

 செய்யுளில் ஓசை குறையாத இடத்தும்  இனிய ஓசைக்காக குறில் நெடிலாக அளபெடுப்பது  இன்னிசை அளபெடை ஆகும்.

38

                 உலகில் உள்ள தொன்மையான மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்று என்றால் மிகையாகாது. இன்றும் எழுத்தளவிலும் பேச்சளவிலும் தன் தொன்மையைக் காத்து சீரும் சிறப்போடும் வாழ்ந்துகொண்டிருக்கிறது

நம் தமிழ் மொழி.

                தமிழ்மொழி தொன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என பலவகை பெருமைகளை ஒருங்கேயுடையது என்கிறார் ஞா.தேவநேயப் பாவாணர்.

          முண்டாசுக் கவிஞன் மகாகவி பாரதியோ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றார். அந்தளவிற்குத் தமிழ்மொழியின் பெருமையை உலகறியும். மேலும் தமிழ்மொழி இயற்கையாகவே பேசுவதற்கு எளிமையாக அமைந்திருப்பதால் நாம் தமிழ் எழுத்துகளை எளிதாக உச்சரிக்கலாம்.

                 தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டு அறிஞர் ஜி.யு.போப்., தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தம் கல்லறையில்இங்கே ஒருதமிழ் மாணவன் உறங்கிக்  கொண்டிருக்கிறான்" என்று பொறிக்கச் செய்தார்.

        உலகின் மூத்த மொழி தமிழ்மொழி மூத்தக்குடி வளர்த்த மொழியாம் தமிழ்மொழி மற்ற மொழிகளைக்காட்டிலும் இனிமையும், பெருமையும் பல்வேறு இலக்கிய தொன்மைகளையும் இயல், இசை, நாடகம் முத்தமிழ் கொண்ட மொழியாம் நம் தமிழ் மொழி, தமிழ்மொழிக்கு ஈடு இணை இவ்வுலகில் எந்த மொழியும் இல்லை.

.


·         மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு வா

·         இனிய வாசனையுடன் வா

·         இலைகளின் மீதும் நீரலைகள் மீதும் உராய்ந்து

·         ப்ராண ரசத்தை கொண்டு வா

·         உயிர் நெருப்பை காத்து நன்றாக வீசு   

·         மெதுவாக நல்ல லயத்துடன் நின்று வீசு.

39 
தலைப்பு 1
அனுப்புநர்
பெறுநர்    1
விளி,
பொருள்  1
செய்தி  1
இப்படிக்கு
நாள்,இடம்
உறைமேல் முகவரி 1

40 பொருத்தமாக இருப்பின் மதிப்பெண்கள் வழங்கலாம்

41 நூலக உறுப்பினர் படிவம்

42 

பிறர் மனம் மகிழும்

  அறம் வளரும்

  புகழ் , பெருமை சேரும்

  நல்ல நண்பர்கள்    சேருவர்

 அன்பு நிறையும்


ஆ- மொழிப்பெயர்ப்பு 

பொன்போன்ற சூரியன், அதிகாலையில் தோன்றிப் பிரகாசமான கதிர்களைக் கொண்டு, உலக இருளைப் போக்குகிறது. பால் மேகங்கள் அலையத் தொடங்குகின்றன. வண்ணமயமான பறவைகள், தங்கள் காலை இசையால் மகிழ்ச்சி அடைகின்றன. அழகிய பட்டாம்பூச்சிகள், மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. மலர்களின் வாசனை, தென்றல் காற்றை நிரப்புகின்றது. காற்று, எல்லா இடங்களிலும் வீசி மகிழ்ச்சியூட்டுகிறது.

 

43 
பொருத்தமாக இருப்பின் மதிப்பெண்கள் வழங்கலாம்.

44, 45
தலைப்பு 1
முன்னுரை 1
மேற்கோள் 1
உள் தலைப்பு, கருத்து 4
முடிவுரை 1

தமிழ்த்துகள்

Blog Archive