கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, July 28, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கோபல்லபுரத்து மக்கள் ஆகஸ்ட் 10 - 2026

10th tamil model notes of lesson

lesson plan august 10

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

10-08-2026 முதல் 14-08-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

கூட்டாஞ்சோறு – விரிவானம்.

5.உட்பாடத்தலைப்பு

கோபல்லபுரத்து மக்கள்.

6.பக்கஎண்

54 - 58

7.கற்றல் விளைவுகள்

T-1011 சிற்றூர் மக்களின் வாழ்வியல் முறையையும் பயன்பாட்டு மொழியையும் வட்டார இலக்கியங்களின் நடையில் படித்துப் புரிந்து கொள்ளுதல், அதுசார்ந்து கலந்துரையாடுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

கிராமத்து விருந்தோம்பல் குறித்து அறிதல்.

9.நுண்திறன்கள்

பகிர்ந்தளிக்கும் கிராமத்து மனிதநேயத்தை உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/12/3-10th-tamil-online-test-with.html 

https://tamilthugal.blogspot.com/2021/06/3-10th-tamil-online-test-kopallapurathu.html 

https://tamilthugal.blogspot.com/2023/07/10th-tamil-ppt-power-point-presentation_5.html 

https://tamilthugal.blogspot.com/2020/05/tenth-tamil-viriva.html 

https://tamilthugal.blogspot.com/2023/07/pdf-3-kopalapurathu-makkal10th-tamil.html 

https://tamilthugal.blogspot.com/2025/05/10-3-10_19.html

https://tamilthugal.blogspot.com/2024/08/10th-tamil-important-notes-tnpsc-tet_12.html

https://tamilthugal.blogspot.com/2024/12/ai-10_8.html 

https://tamilthugal.blogspot.com/2020/05/10-3-kopalla.html 

https://tamilthugal.blogspot.com/2024/06/3.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          கிராமத்து விருந்தோம்பல் குறித்து அறிந்தவற்றைக் கேட்டல்.

12.அறிமுகம்

கி.ராஜநாராயணனை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          கோபல்லபுரத்து மக்கள் கதையின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.

          புதியவர்களை வரவேற்றல் – விருந்தளித்தல் குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          வட்டார வழக்குச் சொற்களை அறிதல்.



மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழரின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          அன்றைய விருந்தோம்பலின் சிறப்புகளை அறிந்து வரல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       மகுளி என்பது .......................

ந.சி.வி – விருந்தோம்பலை விளக்குக.

உ.சி.வி –      அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள

பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

உணவு குறித்த பழமொழிகளைத் திரட்டுதல்.

விருந்தினர் குறித்து அறிந்து வருதல்.

தமிழ்த்துகள்

Blog Archive