கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 05, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பாய்ச்சல் அக்டோபர் 13

10th tamil model notes of lesson

lesson plan October 13

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

13-10-2025 முதல் 17-10-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

5

4.பாடத்தலைப்பு

நிலாமுற்றம் – விரிவானம்.

5.உட்பாடத்தலைப்பு

பாய்ச்சல்

6.பக்கஎண்

102 - 105

7.கற்றல் விளைவுகள்

T-1020 கதைகளைப் படித்து மையக்கருத்துணர்தல், கதை குறித்துக் கலந்துரையாடுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

கலைஞர்கள் குறித்த கதைகளைப் படித்து மையக்கருத்துணர்தல், கதை குறித்துக் கலந்துரையாடுதல்.

9.நுண்திறன்கள்

நீதிக் கருத்துகளை உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/06/pdf-10th-tamil-virivanam-paychal-big.html

https://tamilthugal.blogspot.com/2019/12/6-pdf.html

https://tamilthugal.blogspot.com/2020/05/10-6-paaychal-tamil-kat.html

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_55.html

https://tamilthugal.blogspot.com/2021/07/6-10th-tamil-online-test-paaychal-one.html

https://tamilthugal.blogspot.com/2023/08/10-10th-tamil-ppt-power-point_25.html

https://tamilthugal.blogspot.com/2025/03/pdf.html

https://tamilthugal.blogspot.com/2025/03/blog-post_10.html

https://tamilthugal.blogspot.com/2024/09/10.html

https://tamilthugal.blogspot.com/2023/08/pdf-6_37.html

https://tamilthugal.blogspot.com/2025/05/10-5-10.html

https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-virivanam-paychal-big.html

https://tamilthugal.blogspot.com/2020/06/tenth-tamil-virivaan.html

11.ஆயத்தப்படுத்துதல்

          வேடக் கலைஞர்கள் பற்றிக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

பாய்ச்சல் கதையை, கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

பாய்ச்சல் கதையை விளக்குதல். கலைகளில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் பற்றி படித்தறிதல்.

          கலையின் பெருமையை மாணவர்கள் மனதில் விதைத்தல்.

தன் கலையைப் பின்பற்ற, தகுந்த வாரிசு உருவாகிறபோது கொள்ளும் மகிழ்ச்சியை விளக்குதல்.



மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். கலையின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

வேடக்கலைஞர்களின் வாழ்க்கை முறைகளை அறிதல்.

15.மதிப்பீடு

எ.சி.வி –       பாய்ச்சல் கதையின் ஆசிரியர் ..............

ந.சி.வி – அனுமார் ஆட்டம் கூறும் கருத்துகளை விளக்குக.

உ.சி.வி – பாய்ச்சல் கதையை உன் சொந்த நடையில் எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

பகல்வேடக் கலைஞர்களின் இடர்ப்பாடுகளை அறிந்து வருதல்.

சிறுகதை ஒன்று படைத்தல்.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு குடும்ப விளக்கு அக்டோபர் 13

9th tamil model notes of lesson

lesson plan October 13

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

13-10-2025 முதல் 17-10-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

4

4.பாடத்தலைப்பு

கசடற மொழிதல் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

குடும்ப விளக்கு

6.பக்கஎண்

87 - 89

7.கற்றல் விளைவுகள்

T-9017 பலவாறான இலக்கிய வடிவங்களின்வழி கல்வி சார்ந்த கருத்துகளைப் படித்துப் பயன்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

பலவாறான இலக்கிய வடிவங்களின்வழி கருத்துகளைப் படித்து அறிதல்.

9.நுண்திறன்கள்

மறுமலர்ச்சி இலக்கியங்களைப் படித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/12/9-9th-big-question-answer-unit-5_30.html

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_77.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-5-9th-tamil-online-test-kudumba.html

https://tamilthugal.blogspot.com/2019/02/bharathidasan.html

11.ஆயத்தப்படுத்துதல்

          பெண் கல்வியின் அவசியம் பற்றிக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

பாரதிதாசனை அறிமுகப்படுத்துதல்.

கல்வியின் அவசியம் அறிதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பொதுவுடைமை, விடுதலை, பெண்கல்வி குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          பெண்கல்வி குறித்து விளக்குதல்.

பெண் முன்னேற்றத்திற்குக் கல்வியின் இன்றியமையாமை  குறித்துப் பேசுதல்.



மாணவர்கள் குழுக்களாகப் பெண்கல்வியின் அவசியத்தை உரைத்தல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். கல்வியின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          சங்க இலக்கியங்களை மாணவர்களை அறியச் செய்தல்.

          சாதனைக்கு வயது தடையன்று என்பதை அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       பாரதிதாசனின் இயற்பெயர் ............................

          ந.சி.வி – குடும்ப விளக்கு – குறிப்பு வரைக.

உ.சி.வி –      குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

பெண்மையைப் போற்றும் கவிதைகளைப் பட்டியலிடுக.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் அக்டோபர் 13

8th tamil model notes of lesson

lesson plan October 13

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

13-10-2025 முதல் 17-10-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

4

4.பாடத்தலைப்பு

குழலினிது யாழினிது – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

6.பக்கஎண்

70 - 74

7.கற்றல் விளைவுகள்

T-820 கைவினைப் பொருள்கள் தயாரித்தல், கட்டடக்கலை, உழவுத் தொழில், விதைவிதைத்தல், நாட்டியம், மெய்ப்பாடுகள் முதலான செயல்பாடுகளில் பயன்படும் சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

கைவினைக் கலைகளின் சிறப்புகளை அறிந்து அவற்றை வளர்க்கும் திறன்.

9.நுண்திறன்கள்

நாட்டுப்புறக் கைவினைக் கலைகளின் பெயர்களைத் தொகுத்து எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/05/5-8th-tamil-kuruvina-natupura-kalaikal.html

https://tamilthugal.blogspot.com/2022/10/5-8th-tamil-mindmap-unit-5.html

https://tamilthugal.blogspot.com/2024/10/5.html

11.ஆயத்தப்படுத்துதல்

கைவினைக் கலை குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

களிமண் கொண்டு மாணவர்கள் செய்த பொருள்கள் குறித்துக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த கையால் செய்யும் பொருள்கள் பற்றிக் கூறச்செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          மண்பாண்டங்கள், சுடுமண் சிற்பங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். மூங்கில் பொருள்கள், பாய் வகைகள் குறித்து விளக்கி மாணவர்கள் அவற்றுடன் கொண்ட தொடர்பு குறித்து கூறச்செய்தல்.

பனையோலை, பிரம்பால் செய்யும் பொருள்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

மண்பாண்டங்கள் செய்யும் கலைஞர்களைக் கண்டு உரையாடுதல். கைவினைக் கண்காட்சிகளுக்குச் சென்று வந்த அனுபவங்களைப் பகிர்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – தமிழ்நாட்டின் மாநில மரம் ..............................

                   பானை செய்யும் சக்கரம் .................................... எனப்படும்.

          ந.சி.வி – பனையோலைகள் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?

                   மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.

          உ.சி.வி – நீ அறிந்த கைவினைப் பொருள்களைப் பட்டியலிடுக.

                    கைவினைக்கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

கைவினைப் பொருள்களைப் பட்டியலிடுக.

களிமண் கொண்டு சில பொருள்களைச் செய்து பார்த்தல்.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தேயிலைத் தோட்டப் பாட்டு அக்டோபர் 13

7th tamil model notes of lesson

lesson plan October 13

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

13-10-2025 முதல் 17-10-2025

2.பருவம்

2

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

ஓதுவது ஒழியேல் - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

தேயிலைத் தோட்டப் பாட்டு

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-715 பல்வேறு கலைகளிலும் தொழில்களிலும் (கைத்தொழில், கட்டடக்கலை, உழவு, நாட்டியம் முதலானவை) பயன்படுத்தும் மொழி பற்றிய கருத்தை ஆர்வமாக வெளிப்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழரின் புலம்பெயர் வாழ்வையும் அதற்கான காரணங்களையும் அறிய முற்படுதல்.

9.நுண்திறன்கள்

கல்வியின் பயன் குறித்து குழுவாக விவாதித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2025/10/2-1_5.html

https://tamilthugal.blogspot.com/2025/10/2-1_41.html

https://tamilthugal.blogspot.com/2021/03/12th-tamil-2-song-kummi-paattu.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த தொழில் குறித்த தகவல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தமிழர்களின் புலம்பெயர்வைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தேயிலைத் தோட்டப் பாடலை விளக்குதல். தமிழர்களின் அன்றைய நிலையை உணர்த்துதல். தமிழர்களின் இன்றைய நிலை குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் குழுவாகக் கூறச் செய்தல். கல்வியின் பெருமையை மாணவர்களுக்குக் கூறுதல்.

          கல்வி குறித்தும் வேலை குறித்தும் மாணவர்கள் பேசுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், சங்கப்பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

தமிழர்களின் நிலையை அறிதல். தமிழரின் வேலை குறித்த அறிவை உணரச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – பிராணி என்னும் சொல்லின் பொருள் ..............................

          ந.சி.வி – இந்திய நாடு எவற்றில் சிறந்து விளங்கியது?

உ.சி.வி – கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர நீங்கள் கூறும் வழிமுறைகள் யாவை?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உங்கள் பகுதியில் வழங்கும் வாய்மொழி இலக்கியங்களை அறிந்து எழுதுக.

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தமிழர் பெருவிழா அக்டோபர் 13

6th tamil model notes of lesson

lesson plan October 13

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

13-10-2025 முதல் 17-10-2025

2.பருவம்

2

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

பாடறிந்து ஒழுகுதல் - உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

தமிழர் பெருவிழா

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-610 பல்வேறு பாடப்பொருள்கள் பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள் போன்றவற்றில் இருந்து) படித்துப் புரிந்துகொண்டு, அவற்றின் மீதான கருத்துரைகளைப் பகிர்தல், தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழர் திருநாளின் சிறப்பை உணர்தல்.

9.நுண்திறன்கள்

ஊடகங்களில் கேட்ட, பார்த்த, படித்த செய்திகளைத் தங்களின் சொந்த நடையில் பேசுதல்.

தமிழருக்கே உரிய சிறப்பான விழாவைப் பற்றி அறியும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_98.html  https://tamilthugal.blogspot.com/2021/06/2-2-6th-thamilar-peruvila-kuruvina.html

https://tamilthugal.blogspot.com/2018/10/6-qr-code-video.html

https://tamilthugal.blogspot.com/2022/10/2-2-6th-tamil-mindmap-term-2-unit-2_31.html

https://tamilthugal.blogspot.com/2020/01/blog-post_14.html

https://tamilthugal.blogspot.com/2020/01/bhogi.html

https://tamilthugal.blogspot.com/2020/01/blog-post_16.html

https://tamilthugal.blogspot.com/2021/12/pongal-thirunal-tamil-katturai-essay-in.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த விழாக்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தமிழரின் பெருமையைக் கூறுதல்.

தமிழரின் பண்பாட்டைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          போகித் திருநாள், பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். பொங்கல் விழா கொண்டாட்டம் குறித்து மாணவர்களின் தகவல்களைக் கேட்டல். ஜல்லிக்கட்டு குறித்துப் பேசுதல்.

          கிராமத்துப் பொங்கல், நகரப் பொங்கல் இரண்டையும் ஒப்பிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடல் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

தமிழரின் பெருமையை மாணவர்களிடம் உணர்த்துதல். தமிழர் விழாக்களை அறியச் செய்தல். பண்பாட்டை உணர்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – கதிர் முற்றியதும் .............................. செய்வர்.

                   தமிழர் திருநாள் எனப்படுவது ....................................

          ந.சி.வி – போகிப் பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

                   காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?

          உ.சி.வி – உங்கள் ஊரில் கொண்டாடப்படும் விழாக்கள் குறித்து எழுதுக.

                   காணும் பொங்கலின் சிறப்புகள் குறித்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

உங்கள் ஊரின் விழாக்கள் குறித்து எழுதுக.

ஏறுதழுவுதல் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive