கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, January 04, 2026

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பாஞ்சை வளம் ஜனவரி 12

6th tamil model notes of lesson

lesson plan January 12

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

12-01-2026 முதல் 14-01-2026

2.பருவம்

3

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

புதுமைகள் செய்யும் தேசமிது – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

பாஞ்சை வளம்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-606 தங்கள் பகுதிகளில் காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப்பாடல்களை அறிந்திருத்தல், அவற்றைப் பற்றிக் கலந்துரையாடல்,

8.கற்றல் நோக்கங்கள்

கதைப்பாடலைப் படித்துக் கதையைப் புரிந்துகொள்ளும் திறன் பெறுதல்.

9.நுண்திறன்கள்

நாட்டுப்புறக் கதைகள் மூலம் தமிழர் வீரத்தை அறியும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_82.html

https://tamilthugal.blogspot.com/2022/08/1-3-7th-tamil-mindmap-term-1-unit-3_9.html

https://tamilthugal.blogspot.com/2021/06/3-1-7th-tamil-paanjai-valam-kuruvina.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த நாட்டுப்புறக்கதைகளைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

கட்டபொம்மனின் வீரத்தைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          நாட்டுப்பற்றுடன் திகழ்ந்த தமிழர்களின் வீரத்தை உணர்த்துதல். வீரபாண்டியக் கட்டபொம்மன் குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் கூறச் செய்து, பாஞ்சாலங்குறிச்சியின் வளத்தைக் கூறுதல். இன்றைய வளங்களோடு அதை மாணவர்களை ஒப்பிடச் செய்தல்.

          நாட்டுப்புறப் பாடலைப் பற்றிக் கலந்துரையாடுதல். பாடல் குறித்த மாணவர்களின் கருத்தைக் கூறுதல். தமிழர்களின் வீரம் குறித்து அறிதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          பாஞ்சாலங்குறிச்சியின் வளத்தை அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       மெத்தைவீடு என்று குறிப்பிடப்படுவது ....................................

          ந.சி.வி –       பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?

உ.சி.வி –      கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணமாக நீ எண்ணுபவற்றை

எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

கட்டபொம்மன் குறித்த தகவல்களையும் பெருமைகளையும் இணையம் மூலம் அறிதல்.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி ஜனவரி 12

7th tamil model notes of lesson

lesson plan January 12

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

12-01-2026 முதல் 14-01-2026

2.பருவம்

3

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

நயத்தகு நாகரிகம் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-704 தாங்கள் படித்தவற்றைப் பற்றிச்  சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல்,  கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின்  மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

கருத்துகளைத் தொகுத்துக் கடிதம் எழுதும் திறன் பெறுதல்.

திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றையும் சிறப்புகளையும் அறிந்து கொள்ளுதல்.

9.நுண்திறன்கள்

திருநெல்வேலி நகரச் சிறப்புகள் குறித்து அறிதல்.

நண்பனுக்குக் கடிதம் எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_29.html

https://tamilthugal.blogspot.com/2023/01/3-1-7th-tamil-mindmap-term-3-unit-1.html

https://tamilthugal.blogspot.com/2021/01/7th-tamil-kuruvina.html

11.ஆயத்தப்படுத்துதல்

பிடித்த நகரங்களைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த திருநெல்வேலி நகரம் குறித்த தகவல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

திருநெல்வேலி பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          திருநெல்வேலி நகரச் சிறப்பை விளக்குதல். ஆறுகள் குறித்து அறிதல். தொழில்கள், பழமை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். கடிதத்தின் வடிவமைப்பு அறிதல். கவிஞர்களின் தகவல்கள் அறிதல்.

          திருநெல்வேலி மாவட்டச் சுற்றுலா இடங்கள் குறித்துப் பேசுதல். கடிதம் குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். தங்கள் மாவட்டப் பெருமைகளை மாணவர்கள் கூறுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

திருநெல்வேலி பெயர்க்காரணம், ஆதிச்சநல்லூர் கல்வெட்டு, அகழாய்வு குறித்து விளக்குதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – திருநெல்வேலி .............................. ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

          ந.சி.வி – தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?

                   கொற்கை முத்து பற்றி எழுதுக.

உ.சி.வி – மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உங்கள் மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்களின் பெயர்களை எழுதுக.

திருநெல்வேலி குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் ஜனவரி 12

8th tamil model notes of lesson

lesson plan January 12

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

12-01-2026 முதல் 14-01-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

6

4.பாடத்தலைப்பு

பாருக்குள்ளே நல்ல நாடு – உரைநடை உலகம்.

5.உட்பாடத்தலைப்பு

பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்

6.பக்கஎண்

117 - 121

7.கற்றல் விளைவுகள்

T-805 எதையும் படித்து முடித்த பின்னர் தமக்குத் தெரியாத சூழல்கள் / நிகழ்வுகள் பற்றிக் கற்பனை செய்து புதிய மனப்பிம்பங்களையும் சிந்தனைகளையும் உருவாக்கி வெளிப்படுத்துதல். (வாய்மொழி வழி /  சைகை மொழியில்)

8.கற்றல் நோக்கங்கள்

நாட்டுக்கு உழைத்த நல்லோரின் வாழ்க்கையை அறிந்து பின்பற்றுதல்.

9.நுண்திறன்கள்

ஆளுமை பண்புமிக்கோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை நூலக உதவியுடன் படித்தல்.

பாடப்பகுதியை உரையாடலாக மாற்றி எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/11/7-8th-tamil-mindmap-unit-7_20.html

https://tamilthugal.blogspot.com/2022/02/8th-tamil-mgr-online-quiz-one-word-exam.html

https://tamilthugal.blogspot.com/2021/01/7-8th-tamil-mgr.html

https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_30.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த தமிழக முதல்வர்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

எம்.ஜி.ஆர். குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

எம்.ஜி.இராமச்சந்திரன் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். இளமைப்பருவம், நடிப்பு, பன்முகத் திறமை, பொன்மனச் செம்மல், சமூக நலத்திட்டங்கள், தமிழ்வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்குதல்.

தலைமைப் பண்பு குறித்து அறிதல்.



          
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

எம்.ஜி.இராமச்சந்திரன் குறித்து மேலும் சில தகவல்களைக் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ..............................

                   எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் .....................................

          ந.சி.வி –       எம்.ஜி.ஆர். நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் என்ன?

          உ.சி.வி – சிறந்த அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகளை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

எம்.ஜி.ஆர் குறித்து இணையம் மூலம் அறிதல்.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சீவகசிந்தாமணி ஜனவரி 12

9th tamil model notes of lesson

lesson plan January 12

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

12-01-2026 முதல் 14-01-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

6

4.பாடத்தலைப்பு

வாழிய நிலனே – கவிதைப்பேழை.

5.உட்பாடத்தலைப்பு

சீவகசிந்தாமணி.

6.பக்கஎண்

134 - 136

7.கற்றல் விளைவுகள்

T-9027 இலக்கியங்கள் காட்டும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

ஏமாங்கத நாட்டுக் காட்சிகளை இலக்கியங்கள்வழி அறிதல்.

9.நுண்திறன்கள்

இயற்கைக் காட்சிகளைக் கண்டு பாடல்கள்/ கவிதைகள் எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_76.html

https://tamilthugal.blogspot.com/2023/01/9-9th-big-question-answer-sindamani.html

https://tamilthugal.blogspot.com/2022/03/9-7-9th-tamil-online-test-seevaga.html

https://tamilthugal.blogspot.com/2019/01/1-9-3-qr-code-video_9.html

https://tamilthugal.blogspot.com/2019/01/2-9-3-qr-code-video_9.html

https://tamilthugal.blogspot.com/2019/01/thiruththakkathevar.html

https://tamilthugal.blogspot.com/2025/11/6_27.html

https://tamilthugal.blogspot.com/2018/12/9.html

https://tamilthugal.blogspot.com/2020/06/seevaga-sinthamani-pdf.html

11.ஆயத்தப்படுத்துதல்

          விரும்பும் இயற்கை வளங்கள் பற்றிக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

ஐம்பெருங்காப்பியங்களைக் கூறச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஏமாங்கத நாட்டு வளம் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          சீவகசிந்தாமணி குறித்து விளக்குதல்.

இயற்கையின் சிறப்பு குறித்துப் பேசுதல்.

மாணவர்கள் குழுக்களாக நாட்டுவளம் குறித்து உரைத்தல். ஏமாங்கத நாட்டின் வருணனையை விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          தமிழர்களின் நாட்டு வளங்களையும் அவர்களின் சிறப்புகளையும் அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       அடிசில் என்பதன் பொருள் ..............................

          ந.சி.வி –       சீவகசிந்தாமணி - விளக்குக.

உ.சி.வி –      ஏமாங்கத நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          உனக்குப் பிடித்த இயற்கை வளங்களை ஓவியமாக வரைக.

திருத்தக்க தேவர் குறித்த தகவல்களைத் திரட்டுக.

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஜனவரி 12

 10th tamil model notes of lesson

lesson plan January 12

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

12-01-2026 முதல் 14-01-2026

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

முதல் திருப்புதல் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/10-2025_27.html

https://tamilthugal.blogspot.com/2025/11/5_21.html

https://tamilthugal.blogspot.com/2025/11/4_20.html

https://tamilthugal.blogspot.com/2025/11/3_19.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2_18.html

https://tamilthugal.blogspot.com/2025/11/1.html

4.திருப்புதல் வினாக்கள்

வீட்டு எண் 52, பாரதியார் தெரு, சிலம்பு நகர், விருதுநகர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பினை நிறைவு செய்த சிதம்பரநாதனின் மகன் கலைச்செல்வன் எழுத்தர் பணியில் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னைக் கலைச்செல்வனாகக் கருதி கொடுக்கப்பட்டுள்ள தன் விவரப் படிவத்தை நிரப்புக

."பிரும்மம்" கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர் போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க

காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக

அ.மாவட்ட அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் எனும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக. தமிழ்த்துகள்

அல்லது

ஆ. உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைக

அ.போராட்டக் கலைஞர் - பேச்சுக் கலைஞர் - நாடகக் கலைஞர் - திரைக் கலைஞர் - இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.                      தமிழ்த்துகள்

அல்லது

ஆ. பாய்ச்சல் கதையின் மையக் கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக

உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக

வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக

வெய்யோனொளி... எனத் தொடங்கும் கம்பராமாயண மனப்பாடப்பாடலை எழுதுக

கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.                                                          அல்லது

ஆ. குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

மாணவன் - கொக்கைப் போல, கோழியைப் போல - உப்பைப் போல - இருக்க வேண்டும் - கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் -  குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி -  கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர முடியும் - ஆசிரியர் விளக்கம் - மாணவன் மகிழ்ச்சி.

பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக

உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால், இரவில் சாலையில் நடந்துசெல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக


கவிதையில் உள்ள திரண்ட கருத்து, பொருள் நயம், சொல் நயம், சந்த நயம், தொடை நயம், அணி நயம் ஆகியவை இடம்பெற வேண்டும். தமிழ்த்துகள்

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த              

குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே

ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே

மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே

மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே

ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. – வள்ளலார்

8th Tamil new book unit 8 full questions answers 2026 எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8 முழு வினா விடை


8th Tamil new book unit 8 full questions answers 2026

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8 முழு வினாவிடை 2026 pdf 8th Tamil unit 8 new book full questions with answers

    8th Tamil unit 8 new book full questions with answers


பதிவிறக்கு/DOWNLOAD

8th Tamil new book unit 7 full questions answers 2026 எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 7 முழு வினா விடை


8th Tamil new book unit 7 full questions answers 2026 

Saturday, January 03, 2026

sinthanai siragu It's not that easy சிந்தனைச் சிறகு அவ்வளவு எளிதல்ல


 

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 7 முழு வினாவிடை 2026 pdf 8th Tamil unit 7 new book full questions with answers

   8th Tamil unit 7 new book full questions with answers


பதிவிறக்கு/DOWNLOAD

8th Tamil new book unit 6 full questions answers 2026 எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6 முழு வினா விடை



8th Tamil new book unit 6 full questions answers 2026


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6 முழு வினாவிடை 2026 pdf 8th Tamil unit 6 new book full questions with answers

  8th Tamil unit 6 new book full questions with answers


பதிவிறக்கு/DOWNLOAD

ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 3 முழு வினாவிடை 7th Tamil term 3 unit 3 new book full answers 2026


7th Tamil term 3 unit 3 new book full answers 2026

ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 3 முழு வினாவிடை 2026 pdf 7th Tamil term 3 unit 3 new book full questions with answers

  7th Tamil term 3 unit 3 new book full questions with answers  pdf 


பதிவிறக்கு/DOWNLOAD

ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 முழு வினாவிடை 7th Tamil term 3 unit 2 new book full answers 2026


7th Tamil term 3 unit 2 new book full answers 2026


ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 முழு வினாவிடை 2026 pdf 7th Tamil term 3 unit 2 new book full questions with answers

 7th Tamil term 3 unit 2 new book full questions with answers  pdf 


பதிவிறக்கு/DOWNLOAD

Friday, January 02, 2026

sinthanai siragu Three things that cannot be hidden சிந்தனைச் சிறகு மறைக்க முடியாத மூன்று

 


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 3 முழு வினாவிடை 6th Tamil term 3 unit 3 new book full answers 2026


6th Tamil term 3 unit 3 new book full answers 2026


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 3 முழு வினாவிடை 2026 pdf 6th Tamil term 3 unit 3 new book full questions with answers

  6th Tamil term 3 unit 3 new book full questions with answers pdf  


பதிவிறக்கு/DOWNLOAD

6th Tamil term 3 unit 2 new book full answers 2026 ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 முழு வினாவிடை


6th Tamil term 3 unit 2 new book full answers 2026

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 முழு வினாவிடை 2026 pdf 6th Tamil term 3 unit 2 new book full questions with answers

 6th Tamil term 3 unit 2 new book full questions with answers pdf  


பதிவிறக்கு/DOWNLOAD

2026 காட்சியைக் கண்டு கவினுற எழுதுக தமிழ் வகுப்பு 9 கவிதை 9TH TAMIL KATCHIYAI KANDU KAVINURA EZHUTHUGA new


9TH TAMIL KATCHIYAI KANDU KAVINURA EZHUTHUGA new

ஒன்பதாம் வகுப்பு தமிழ் - கவிதை காட்சியைக் கண்டு கவினுற எழுதுக முழுவதும் pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


9th tamil katchiyaikandu kavinura eluthuka kavithai all units pdf

தமிழ்த்துகள்

Blog Archive