கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, January 11, 2026

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தமிழ்நாட்டில் காந்தி ஜனவரி 19

6th tamil model notes of lesson

lesson plan January 19

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

19-01-2026 முதல் 23-01-2026

2.பருவம்

3

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

புதுமைகள் செய்யும் தேசமிது – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

தமிழ்நாட்டில் காந்தி

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-610 பல்வேறு பாடப்பொருள்கள் பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள் போன்றவற்றில் இருந்து) படித்துப் புரிந்துகொண்டு, அவற்றின்மீதான கருத்துரைகளைப் பகர்தல், தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

வாழ்வில் எளிமையின் சிறப்பை உணருதல்.

சமூக மாற்றத்தில் காந்தியின் பங்கினைத் தெரிந்துகொள்ளுதல்.

9.நுண்திறன்கள்

தமிழ்மொழிமீது காந்தியடிகள் கொண்ட பற்று குறித்து அறியும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

          https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post.html

          https://tamilthugal.blogspot.com/2023/01/3-1-6th-tamil-mindmap-term-3-unit-1.html

          https://tamilthugal.blogspot.com/2021/01/6th-tamil-kuru-vina-vidai-tamilnattil.html

          https://tamilthugal.blogspot.com/2019/01/6-tamilnattil-gandhi.html

11.ஆயத்தப்படுத்துதல்

தேசத்தலைவர்கள் குறித்துக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த விடுதலைப் போராட்ட வீரர்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தமிழ்மொழியின் பெருமையைக் கூறுதல்.

காந்தி பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தமிழ்நாட்டில் காந்தியடிகளின் நிகழ்வுகள் குறித்துக் கூறுதல். தீண்டாமை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

          எளிமை, இலக்கிய மாநாடு குறித்து விளக்குதல்.

          பாரதியார் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். தமிழர் குறித்தும் தமிழ் குறித்தும் மாணவர்களின் தகவல்களைக் கேட்டல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

தமிழரின் பெருமையை மாணவர்களிடம் உணர்த்துதல். காந்தி பற்றி அறியச் செய்தல். மதுரை குறித்து அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் ...........................

          ந.சி.வி – காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக.

                   காந்தியடிகளைக் கவர்ந்த நூல் எது?

          உ.சி.வி – காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகளை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு எளிமையாக பாடப்பொருளை மீண்டும் விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

மதுரை குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.

காந்தி குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் ஜனவரி 19

7th tamil model notes of lesson

lesson plan January 19

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

19-01-2026 முதல் 23-01-2026

2.பருவம்

3

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

நயத்தகு நாகரிகம் – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-705 தாங்கள் வாழும் சமூகம் அல்லது நிலப்பகுதிகள், நாட்டுப்புற இலக்கியங்கள், பாடல்கள் பற்றிக் கலந்துரையாடி அவற்றின் நயம் பாராட்டுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றையும் சிறப்புகளையும் அறிந்து கொள்ளுதல்.

9.நுண்திறன்கள்

திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த புலவர்கள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_71.html

https://tamilthugal.blogspot.com/2023/01/3-1-7th-tamil-mindmap-term-3-unit-1_8.html

https://tamilthugal.blogspot.com/2021/05/thirunelveli-seemaiyum-kavikalum-tamil.html

https://tamilthugal.blogspot.com/2020/06/thirunelve.html

https://tamilthugal.blogspot.com/2020/03/3-1-seventh-tamil-thirunelvelicheemayum.html

11.ஆயத்தப்படுத்துதல்

பிடித்த புலவர்களைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த திருநெல்வேலி நகரம் குறித்த தகவல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

திருநெல்வேலிப் புலவர்கள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பாரதியார், கவிமணி, கடிகை முத்துப்புலவர், பலபட்டடைச் சொக்கநாதப்புலவர் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். சீதக்காதி, அருணகிரிநாதர், அண்ணாமலையார் குறித்து விளக்குதல். கவிஞர்களின் தகவல்கள் அறிதல்.

          மாணிக்கவாசகர், திரிகூடராசப்பக்கவிராயர் குறித்துப் பேசுதல். கட்டுரை குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

திருநெல்வேலிச்சீமை, அக்கால நடை, கவிதைகள் குறித்து விளக்குதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – பாரதியார் பிறந்த ஊர் ...............................

          ந.சி.வி – டி.கே.சி. குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.

உ.சி.வி – நீங்கள் விரும்பும் கவிஞர் குறித்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உங்கள் மாவட்டத்திலுள்ள கவிஞர்களின் பெயர்களை எழுதுக.

பாரதியார் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஒருவன் இருக்கிறான் ஜனவரி 19

8th tamil model notes of lesson

lesson plan January 19

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

19-01-2026 முதல் 23-01-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

6

4.பாடத்தலைப்பு

பாருக்குள்ளே நல்ல நாடு – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

ஒருவன் இருக்கிறான்

6.பக்கஎண்

122 - 126

7.கற்றல் விளைவுகள்

T-807 கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும் ஊகித்தறிதலும்.

8.கற்றல் நோக்கங்கள்

கதையின் எழுத்து நடையை அறிதல்.

9.நுண்திறன்கள்

கதைப்பகுதியில் மனம் கவர்ந்த கதாபாத்திரம் பற்றியும் அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்துதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2024/12/ai-10_9.html

https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_19.html

https://tamilthugal.blogspot.com/2021/07/9-10th-tamil-online-test-oruvan.html

https://tamilthugal.blogspot.com/2020/06/10th-tamil-vir.html

https://tamilthugal.blogspot.com/2020/05/10-9-oruvan-iru.html

https://tamilthugal.blogspot.com/2019/12/9-pdf.html

https://tamilthugal.blogspot.com/2026/01/blog-post_11.html

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த கதையைக் கேட்டல்.

12.அறிமுகம்

அழகிரிசாமி பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஒருவன் இருக்கிறான் கதையை விளக்குதல்.

          குப்புசாமி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். விரும்பிய கதைமாந்தர் குறித்து மாணவர்கள் பேசுதல். இலக்கிய வடிவங்களை அறிதல்.

          மாணவர்களிடம் படைப்பாற்றலை உருவாக்குதல்.




மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

அழகிரிசாமி குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச் செய்தல்.

15.மதிப்பீடு

எ.சி.வி –       கு.அழகிரிசாமி பிறந்த ஊர் ................

ந.சி.வி – குப்புசாமியை நினைத்துக் கண்ணீர் விட்ட நிகழ்வை எழுதுக.

உ.சி.வி – ஒருவன் இருக்கிறான் கதையைச் சுருக்கி எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

சிறுகதை எழுத முயலுதல்.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு விண்ணையும் சாடுவோம், வல்லினம் மிகா இடங்கள் ஜனவரி 19

9th tamil model notes of lesson

lesson plan January 19

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

19-01-2026 முதல் 23-01-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

6

4.பாடத்தலைப்பு

வாழிய நிலனே – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

விண்ணையும் சாடுவோம், வல்லினம் மிகா இடங்கள்

6.பக்கஎண்

137 - 145

7.கற்றல் விளைவுகள்

T-9028        நேர்காணலின் நோக்கமறிந்து ஏற்றவாறு வினாக்களை வடிவமைத்தல்.

T-9029        மொழிப் பயன்பாட்டில் வல்லினம் மிகா இடங்களை அறிந்து பிழையின்றி எழுதுதல்

8.திறன்கள்

விண்வெளி பற்றிய செய்திகளைப் படித்தல்.

வல்லினம் மிகா இடங்கள் இடம்பெறும் தொடர்களைக் கண்டறிந்து எழுதுதல்.

9.நுண்திறன்கள்

அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு செய்திகளைப் படித்தல்.

வல்லினம் மிகா இடங்களுக்கான இலக்கணத்தைத் தொகுத்து எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_72.html

https://tamilthugal.blogspot.com/2021/05/vinnaiyum-saduvom-tamil-katturai.html

https://tamilthugal.blogspot.com/2020/09/9-9th-tamil-viriva.html

https://tamilthugal.blogspot.com/2020/09/9-4-9th-tamil-vinnaiyum-saduvom.html

https://tamilthugal.blogspot.com/2020/08/9-4-9th-tamil-virivaana.html

https://tamilthugal.blogspot.com/2020/04/apj-abdul-kalam-tamil-speech.html

https://tamilthugal.blogspot.com/2024/06/tamil-grammar-vallainam-migaa-idam-with.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-3-4-vallinam-mikum-mika-idankal-tamil.html

https://tamilthugal.blogspot.com/2021/05/vallinam-mikum-idam-mika-idam.html

11.ஆயத்தப்படுத்துதல்

          செயற்கைக்கோள்கள் பற்றிக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

அறிவியலாளர்களை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          விண்வெளி அறிவு பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          அறிவியலாளரின் வாழ்க்கை வரலாறு மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுதல்.

அறிவியலில் தமிழர்களின் பங்கு குறித்து மாணவர்கள் மனதில் விதைத்தல்.

வல்லினம் மிகா இடங்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.

அறிவியல் அறிஞர்களின் நேர்காணல் குறித்து அறிந்து வினாக்கள் தயார்செய்ய முனைதல்.



மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழரின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          தமிழக அறிவியலாளர்கள் குறித்து மாணவர்களை அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர் ............................

          ந.சி.வி – சித்தாரா குறித்து எழுதுக.

உ.சி.வி – வல்லினம் மிகா இடங்களுக்கு உதாரணங்களைக் கூறி காரணத்தை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          உனக்குப் பிடித்த அறிவியலாளரைப் பற்றி எழுதுக.

அறிவியல் அறிஞர் நேர்காணலுக்கான வினாக்கள் பத்து எழுதுக.

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஜனவரி 19

10th tamil model notes of lesson

lesson plan January 19

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

19-01-2026 முதல் 23-01-2026

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

இரண்டாம் திருப்புதல் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/10-2025_27.html

https://tamilthugal.blogspot.com/2025/11/5_21.html

https://tamilthugal.blogspot.com/2025/11/4_20.html

https://tamilthugal.blogspot.com/2025/11/3_19.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2_18.html

https://tamilthugal.blogspot.com/2025/11/1.html

4.திருப்புதல் வினாக்கள்

1.பின்வருவனவற்றுள் முறையான தொடர் –                  தமிழ்த்துகள்

அ.தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.

ஆ.தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.                   

இ.தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

ஈ.தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.

2. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது ________

அ.சுட்டி                  ஆ.கிண்கிணி                     இ.குழை                  ஈ.சூழி

3. நன்மொழி என்பது -

அ.பண்புத்தொகை    ஆ.உவமைத்தொகை         இ.அன்மொழித்தொகை      ஈ.உம்மைத்தொகை

4.காசிக்காண்டம் என்பது –            தமிழ்த்துகள்

அ.காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்         ஆ.காசி நகரத்தைக் குறிக்கும் மறு பெயர்

இ.காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்       ஈ.காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

5. சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.

6. 'கரப்பிடும்பை இல்லார்' இத்தொடரின் பொருள் கூறுக.

7. 'நச்சப்படாதவன்' செல்வம் - இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

8. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.

9. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக; தொடரில் அமைக்க.

10. அ.போராட்டக் கலைஞர் - பேச்சுக் கலைஞர் - நாடகக் கலைஞர் - திரைக் கலைஞர் - இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.  

அல்லது

ஆ. பாய்ச்சல் கதையின் மையக் கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக.

11.வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

 கோலொடு நின்றான் இரவு           - குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

12. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

13. 'இன்மையிலும் விருந்தோம்பல்' குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.

14 அ.உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.                                              அல்லது

ஆ. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

15. உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலைகூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

எட்டாம் வகுப்பு தமிழ் ஒருவன் இருக்கிறான் மனவரைபடம்

 


8th tamil unit 6 oruvan irukkiran mind map

new பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 அலகுத்தேர்வு 6 வினாத்தாள் 25 மதிப்பெண்கள் 10TH TAMIL UNIT TEST 6


10TH TAMIL UNIT TEST 6

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 அலகுத்தேர்வு 6 மதிப்பெண்கள் 25 புதிய பாடத்திட்டம் 2026 pdf

              பதிவிறக்கு/DOWNLOAD


tenth tamil unit 6 unit test 6 new syllabus 25 marks

birds ai video for kids பறவைகள் குழந்தைகள் ai காணொலி


 

Saturday, January 10, 2026

new பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 அலகுத்தேர்வு 5 வினாத்தாள் 25 மதிப்பெண்கள் 10TH TAMIL UNIT TEST 5


10TH TAMIL UNIT TEST 5

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 அலகுத்தேர்வு 5 மதிப்பெண்கள் 25 புதிய பாடத்திட்டம் 2026 pdf

             பதிவிறக்கு/DOWNLOAD


tenth tamil unit 5 unit test 5 new syllabus 25 marks

திருக்குறள் வினாடிவினா முதல் நிலை தகுதித் தேர்வு விடைக்குறிப்பு 2026


Thirukkural quiz 50 MARKS question paper answer key 2026


திருக்குறள் வினாடிவினா முதல் நிலை தகுதித் தேர்வு வினாத்தாள் 2026


Thirukkural quiz 50 MARKS question paper


sinthanai siragu noolagam thinking wings library சிந்தனைச் சிறகு நூலகம்

 


பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம் கழக பயிற்சித் தேர்வு 2026

பதிவிறக்கு/DOWNLOAD 

SSLC tenth tamil common public exam model question paper pdf virudhunagar district 2026

Tamil mandra thervu
Payirchi thervu
Thamizhaga tamizhasiriyar kazhagam

தமிழகத் தமிழாசிரியர் கழகம் பயிற்சித் தேர்வு 

தமிழ் மன்றத் தேர்வு 2026

new பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 அலகுத்தேர்வு 4 வினாத்தாள் 25 மதிப்பெண்கள் 10TH TAMIL UNIT TEST 4



10TH TAMIL UNIT TEST 4

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 அலகுத்தேர்வு 4 மதிப்பெண்கள் 25 புதிய பாடத்திட்டம் 2026 pdf

            பதிவிறக்கு/DOWNLOAD


tenth tamil unit 4 unit test 4 new syllabus 25 marks

Friday, January 09, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf ஈரோடு 2026

  பதிவிறக்கு/DOWNLOAD 


Tenth tamil first revision exam question paper pdf Erode district 2026 sslc

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf கள்ளக்குறிச்சி 2026

  பதிவிறக்கு/DOWNLOAD 


Tenth tamil first revision exam question paper pdf Kallakurichi district 2026 sslc

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf சென்னை 2026

 பதிவிறக்கு/DOWNLOAD 


Tenth tamil first revision exam question paper pdf Chennai district 2026 sslc

new பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 அலகுத்தேர்வு 3 வினாத்தாள் 25 மதிப்பெண்கள் 10TH TAMIL UNIT TEST 3


10TH TAMIL UNIT TEST 3

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 அலகுத்தேர்வு 3 மதிப்பெண்கள் 25 புதிய பாடத்திட்டம் 2026 pdf

           பதிவிறக்கு/DOWNLOAD


tenth tamil unit 3 unit test 3 new syllabus 25 marks

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-01-2026. வெள்ளி

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

09-01-2026. வெள்ளி

திருக்குறள் :

பால் : அறத்துப் பால்

; இயல்: துறவறவியல் ;

அதிகாரம் : கொல்லாமை ;

குறள் எண் : 323.

குறள் :

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று.

உரை :

இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.

பழமொழி :

கேள்விகளே அறிவின் விதைகள்.

Questions are the seeds of knowledge.

இரண்டொழுக்க பண்புகள்:

1. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

2. பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமே இல்லை.

என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே. - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

பொது அறிவு :

01. நம்நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?

ஜாம்ஷெட்பூர் - Jamshedpur

02. தங்கப் போர்வை நாடு" (Golden Fleece)எனப்படுவது எது?

ஆஸ்திரேலியா -Australia

English words:

Slammed-banged

generous -noble

தமிழ் இலக்கணம்:

இன்று 500 ஐ எப்படி எழுதுவது என்று பார்ப்போம்

1. ஐநூறு ரூபாய் எனக்கு கிடைத்தது

2. ஐந்நூறு ரூபாய் எனக்கு கிடைத்தது

இதை பிரித்து எழுதுவோம்.

ஐநூறு = ஐ + நூறு

ஐந்நூறு = ஐந்து + நூறு

ஐந்நூறு ரூபாய் எனக்கு கிடைத்தது என்பதே சரி

அறிவியல் களஞ்சியம் :

நீங்கள் சுழற்றிக்கொண்டே ஒரு பந்தை கைவிடும்போது, பலத்த காற்று வீசும் பட்சத்தில் அது பறந்து போகும் என்கிறது அறிவியல். இதை மேக்னஸ் விளைவு என்று அழைகிறார்கள். இந்த விளைவு தான் டென்னிஸ் மற்றும் கால்பந்து விளையாட்டை ஒரு தந்திரமான மற்றும் எளிமையான விளையாட்டாக மாற்றுகிறது.

ஜனவரி 09 - NRI Day 

வெளிநாடுவாழ் இந்தியர் நாள்

வெளிநாடுவாழ் இந்தியர் நாள், 2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (ஜனவரி 9, 1915) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவின்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

நீதிக்கதை - உயிரைக் காத்த உண்மை

நரி, ஓநாய், முயல் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு விவசாயின் பயிர்களையும், விளை பொருட்களையும் நாசம் செய்து வந்தன. இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட விவசாயி மூன்றையும் ஒழித்துக் கட்ட முடிவு செய்தான். ஒரு நாள் அந்த விவசாயி அவைகளைப் பிடிக்கப் பந்தயங்களை வைத்தான். ஒரு நாள் நரி, ஓநாய், முயல் மூன்றும் விவசாயி வைத்த பந்தயங்களில் மாட்டிக் கொண்டன.

அவற்றைப் பிடித்த விவசாயி முதலில் முயலிடம் என் தோட்டத்திற்கு ஏன் வந்தாய்? என்று கேட்டான். அதற்கு முயல் முள்ளங்கி இலைகளைச் சாப்பிட வந்தேன். பசியினால் தான் இந்தத் தவறைச் செய்து விட்டேன். இனி ஒருபோதும் இங்கே வரமாட்டேன். என்னை மன்னித்துவிடு என்று உண்மையைக் கூறியது. அடுத்தது நரியிடம் கேட்டான். அதற்கு நரி முயல் போன்ற பிராணிகள் வந்து உனது தோட்டத்தை அழித்துவிடக்கூடாது என்று எண்ணித் தான் வந்ததாகக் கூறியது.

அதற்கு அடுத்தபடியாக ஓநாயிடம் கேட்டான். அதற்கு அந்த ஓநாய் நீ திருடி வைத்துள்ள எங்களுக்கு உணவாக வேண்டிய ஆட்டுக்குட்டிகளை உண்ண வந்தேன் என்று ஆணவத்துடன் கூறியது. மூன்றையும் விசாரித்த விவசாயி தன் தவறை ஒப்புக்கொண்ட முயலை மட்டும் விடுவித்து நரியையும், ஓநாயையும் கொன்றான்.

நீதி : உண்மை நிச்சயம் வெல்லும்

இன்றைய செய்திகள் 09.01.2026

* பொதுமக்களின் வசதிக்காகவும், குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் பொது மற்றும் ஏசி இல்லாத ரயில் பெட்டிகளின் உற்பத்தியை அடுத்த 2 ஆண்டுகளில் 9640 பொது மற்றும் ஏசி இல்லாத பெட்டிகளைத் தயாரிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

* சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் புகை மண்டலம் ஏற்படுகிறது. மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்.

* பிலிப்பின்ஸ் நாட்டிலுள்ள மாயோன் எரிமலையின் உச்சியிலிருந்து அவ்வப்போது பாறைகள் சரிந்து விழுவதால் அப்பகுதியில் வசிக்கும் 729 குடும்பங்களைச் சேர்ந்த 2,800-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

விளையாட்டுச் செய்திகள்

* ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்டார்க் தொடர் நாயகன் விருதை வென்றார். ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Today's Headlines 09.01.2026

*The Government of India plans to manufacture 9640 general and non-AC coaches in the next 2 years. Additionally, the production of public and non-AC train coaches aims to provide convenience to the public and ensure safe travel at affordable fares.

*In Chennai city, the burning of materials on Bhogi day creates a thick cloud of smoke. This causes health problems such as breathing difficulties and eye irritation for the general public. Therefore, the Tamil Nadu Pollution Control Board appeals to the public to celebrate a smoke-free Bhogi festival.

* More than 2,800 people from 729 families living in the area are being evacuated due to occasional rock falls from the summit of the Mayon volcano in the Philippines.

SPORTS NEWS

The 5th and final Ashes Test match between Australia and England was held in Sydney. Starc won the Man of the Series award for his outstanding performance in the Ashes Test series, and Starc took 5 wickets.

Prepared by

Covai women ICT_போதிமரம்

தமிழ்த்துகள்

Blog Archive