கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, May 26, 2021

திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் தமிழ்க் கட்டுரை THIRUNELVELI SEEMAIYUM KAVIKALUM TAMIL KATTURAI

 

திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

முன்னுரை                               WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

நல்ல பாடல்களைப் படித்துச் சுவைப்பது உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த புலவர்கள் பலர் உருவாக்கியுள்ளனர். அவர்களுள் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த புலவர்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

பாரதியும் கவிமணியும்                                             WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம். எட்டையபுர சமஸ்தானம் நெடுகிலும் ஊரூராய்ப் புலவர்களும் கவிராயர்களும் வாழ்ந்தனர். தேசிக விநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம். அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் திருநெல்வேலி நகர்தான். கடிகை முத்துப் புலவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.

ஆயிரம் தமிழ் பாட்டு                                     WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

பிள்ளைப்பெருமாள் சீவகுண்டத்துப் பெருமாளைப் பற்றிப் பாடியுள்ளார். ஆற்றுக்குத் தென்கரையில் நம்மாழ்வார் அவதார ஸ்தலமான ஆழ்வார்திருநகரி இருக்கிறது. நம்மாழ்வார் தமது ஈடுபாட்டை ஆயிரம் தமிழ்ப்பாட்டில் - திருவாய் மொழியில் – வெளியிட்டார். கொற்கை என்கிற சிறு ஊரில் சுமார் இரண்டாயிரம் வருஷத்துக்கு முன் இருந்த ஒரு பெரும் கவிஞர் முத்தொள்ளாயிர ஆசிரியர். மேற்கே உரோமாபுரி கிரேக்க தேசம் முதல் கிழக்கே சைனா வரையும் கொற்கையிலிருந்தே முத்து போய்க்கொண்டிருந்தது. புலவர் முத்து வளத்தை நன்றாய் அனுபவித்தார், பாடினார். காயல்பட்டணத்தில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதி இறந்தபோது புலவர்கள் இதயத்தில் இடிதான் விழுந்தது. நமச்சிவாயப் புலவர் என்பவர் இதனைப் பாடியுள்ளார்.

காவடிச்சிந்தும் குற்றாலமலையும்                             WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

திருச்செந்தூரில் திருப்புகழ் பாடினார் அருணகிரிநாதர். கழுகுமலை முருகன் மேல் காவடிச்சிந்தைப் பாடியவர் அண்ணாமலையார். சங்கரன்கோவில் கோமதித் தாயைப் பற்றி உண்மையான பக்தியும் தமிழ்ப் பண்பும் வாய்ந்த பாடலைப் பாடியவர் திருநெல்வேலி அழகிய சொக்கநாதர். கரிவலம்வந்தநல்லூர் புலவர் ஒருவர் திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்து அந்தாதி, கலித்துறை அந்தாதி என்ற மூன்று நூல்களைப் பாடியிருக்கிறார். சுமார் 1300 வருஷங்களுக்கு முன் திருஞானசம்பந்தர் குற்றாலம் வந்தார். நுண்துளி தூங்கும் குற்றாலம் என்று பாடினார். குற்றாலக் குறவஞ்சி மேலகரத்தில் வாழ்ந்து வந்த திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய நூல்.

முடிவுரை                                           WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக்காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் எனப் பலவாறாகப் புகழப்படுகிறார் டி.கே.சி என அழைக்கப்படும் டி.கே.சிதம்பரநாதரால் இக்கட்டுரை ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதாகும்.

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

தமிழ்த்துகள்

Blog Archive