கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, July 14, 2025

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஏறு தழுவுதல் ஜூலை 27 - 2026

9th tamil model notes of lesson

lesson plan 2026 july 27

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

27-07-2026 முதல் 31-07-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

உள்ளத்தின் சீர் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

ஏறு தழுவுதல்

6.பக்கஎண்

50 - 53

7.கற்றல் விளைவுகள்

T-9011 தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை உணர்ந்து பின்பற்றுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழர்தம் பண்பாட்டு அடையாளத்தை உணர்தல்.

9.நுண்திறன்கள்

ஏறுதழுவுதல் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2020/01/blog-post_16.html 

https://tamilthugal.blogspot.com/2018/08/9jallikattu.html 

https://tamilthugal.blogspot.com/2022/01/9-3-9th-tamil-online-test-aeru.html 

https://tamilthugal.blogspot.com/2022/12/9-9th-big-question-answer-jallikattu.html 

https://tamilthugal.blogspot.com/2022/12/9-2-9th-big-question-answer-jallikattu.html 

https://tamilthugal.blogspot.com/2023/07/3.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          தமிழர் திருநாள் விளையாட்டுகளைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

சல்லிக்கட்டு பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          இலக்கியங்களில் ஏறுதழுவுதல், தொல்சான்றுகள், பண்பாட்டு அடையாளம், ஏறு தழுவுதலும் தமிழர் அறமும் குறித்து அறியச் செய்தல்.

          மாணவர்கள் அறிந்த ஏறுதழுவுதல் குறித்த தகவல்களைப் பகிரச் செய்தல். தமிழர் வாழ்வில் மாடுகளின் பங்கு குறித்துப் பேசுதல்.

தமிழரின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.



          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழரின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          ஏறுதழுவுதலின் பெயர்களை மாணவர்களை அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

அ. தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.

ஆ. தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான

இ. தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்

ஈ. தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

          ந.சி.வி – ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப்

பட்டியலிடுக .

உ.சி.வி –      ஏறு தழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

ஏறுதழுவுதல் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.


தமிழ்த்துகள்

Blog Archive