கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, July 07, 2025

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தமிழர் மருத்துவம், வெட்டுக்கிளியும் சருகுமானும் ஜூலை 14

8th tamil model notes of lesson

lesson plan 2025 july 14

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

14-07-2025 முதல் 18-07-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

உடலை ஓம்புமின் – உரைநடை உலகம், விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

தமிழர் மருத்துவம், வெட்டுக்கிளியும் சருகுமானும்

6.பக்கஎண்

30-37

7.கற்றல் விளைவுகள்

    T-819 அன்றாட வாழ்வில் நிகழும் குறிப்பிடத்தக்க அனுபவங்களை (நிகழ்வுகள், சூழல்கள்) புத்தாக்க முறையில் வெவ்வேறு வழிகளில் (சமூக ஊடகங்கள், நோட்டு, புத்தகம், பதிப்பாளருக்குக் கடிதம் எழுதுதல்) எழுதுதல்.

T-804 தமது சுற்றுப்புறத்தில் வழங்குகின்ற நாட்டுப்புறப்பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள் ஆகியவற்றைப் பற்றிப் பேசுதல்.

8.திறன்கள்

        தமிழர் மருத்துவ முறைகளை அறிந்து பயன்படுத்தும் திறன்

          மொழிபெயர்ப்புப் படைப்புகளின் மூலம் நல் உணர்வுகளை உணர்ந்து மதிக்கும் திறன்.

9.நுண்திறன்கள்

        தமிழர் மருத்துவத்தின் தொன்மை, சிறப்பை அறிந்து பெருமிதம் கொள்ளும் திறன்.

          பழங்குடியினரின் வாழ்வியலைக் கதைகள் மூலம் உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/08/3-8th-tamil-mindmap-unit-3_16.html

https://tamilthugal.blogspot.com/2021/05/8th-tamil-urainadai-ulagam-tamilar.html

https://tamilthugal.blogspot.com/2021/02/thuritha-unavum-arokiya-seerkedum-tamil.html

          https://tamilthugal.blogspot.com/2021/08/2-vettukiliyum-sarukumanum-essay.html

          https://tamilthugal.blogspot.com/2021/08/2-vettukiliyum-sarukumanum-8th-tamil.html

https://tamilthugal.blogspot.com/2022/08/2-8th-tamil-mindmap-term-1-unit-2.html

https://tamilthugal.blogspot.com/2021/03/lion-and-mouse-kutty-kathai-tamil-short.html

https://tamilthugal.blogspot.com/2023/07/2.html

11.ஆயத்தப்படுத்துதல்

மருத்துவத்தின் வகைகளைக் கூறச்செய்தல்.

நோய்கள் அதிகரிக்க என்ன காரணம் எனக் கேட்டல்.

உடல் நலத்திற்கு நாம் செய்ய வேண்டிய செயல்களைக் கூறச்செய்தல்.

 பஞ்சதந்திரக் கதைகள் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

தமிழர் மருத்துவத்தை அறிமுகப்படுத்துதல்.

நல்ல உணவுமுறை குறித்து விளக்கி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

மாணவர்கள் அறிந்த விலங்குகள் கதைகளைப் பகிரச் செய்தல்

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பழந்தமிழர்கள் அறிந்த மருத்துவமுறைகளை மாணவர்களுக்குக் கூறி மாணவர்கள் அறிந்த தற்கால மருத்துவமுறைகளைக் கூறச் செய்தல். சித்தர்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். மருத்துவத்தில் பக்க விளைவுகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

          நோய்கள் குறித்தும் இன்றைய மருத்துவம் குறித்தும் மாணவர்களுடன் உரையாடுதல். உடல்நலம் காக்க நாம் செய்ய வேண்டியவை குறித்து மாணவர்களிடம் வினவல். நோய் வராமல் தடுக்க என்னென்ன செய்யலாம் என்பது குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

சிறுத்தை பித்தக்கண்ணு, பெண் சருகுமான் கூரனைத் துரத்தி வர அதைக் கண்ட வாயாடி பச்சை வெட்டுக்கிளி அதனுடன் பேச, வாயைத் திறக்காதே என்ற கூரன் ஒளிந்துகொள்கிறது. வெட்டுக்கிளியிடம் பித்தக்கண்ணு விசாரிக்க அது தாவிக் குதிக்க புனுகுப்பூனையின் நாற்றத்தால் கூரன் தப்பித்த கதையைக் கூறுதல்.






          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

சுத்தம், சுகாதாரம், தமிழர் மருத்துவம் குறித்துக் கூறுதல். நல்ல  உணவுப் பழக்கத்தின் அவசியத்தை விளக்குதல்.          

விலங்குகள் கதையை மாணவர்களுக்குக் கூறுதல்.

          இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் எண்ணத்தை ஏற்படுத்துதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று ..............................

                   மருந்து என்பதே .................................... நீட்சியாக இருக்கிறது.

                    இக்கதையில் சிறுத்தையின் பெயர் ..........................

          ந.சி.வி – மருத்துவம் எப்போது தொடங்கியது?

                   நோய்கள் பெருகக் காரணம் என்ன?

                வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையைச் சுருக்கி எழுதுக.

          உ.சி.வி – நோயின்றி வாழ நீ மேற்கொள்ளும் செயல்களைப் பட்டியலிடுக.

                   மருத்துவரிடம் நீ கேட்க விரும்பும் 5 வினாக்களை எழுது.

                உனக்குப் பிடித்த விலங்குகள் கதை ஒன்றை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

மூலிகைகளின் மருத்துவ குணங்களைப் பட்டியலிடுக.

தமிழர் மருத்துவத்தின் பெருமைகளை இணையம் மூலம் அறிதல்.

வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.

          மாணவர்கள் விரும்பும் பஞ்ச தந்திரக் கதை ஒன்றைக் கூறச் செய்தல்.


தமிழ்த்துகள்

Blog Archive