கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, February 18, 2022

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மொழிபெயர்ப்பு வினாவிடை 9th TAMIL MOLIPEYARPU QUESTION AND ANSWER TRANSLATION

 

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மொழிபெயர்ப்பு வினாவிடை

இயல் - 1

1. Linguistics    - மொழியாராய்ச்சி

2. Literature    - இலக்கியம்                                         தமிழ்த்துகள்

3. Philologist   - மொழியியற் புலமை

4. Polyglot      - பன்மொழியாளர்கள்

5. Phonologist - ஒலியனியல் வல்லுநர்

6. Phonetics    - ஒலிப்பியல்

இயல் 2

1.Every flower is a soul blossoming in nature - Gerard De Nerval

2.Sunset is still my favourite colour, and rainbow is second - Mattie Stepanek

3.Just living is not enough... One must have sunshine, freedom, and a little flower - Hans Christian Anderson

4.An Early morning walk is a blessing for the whole day - Henry David Thoreau

1.ஒவ்வொரு மலரும் இயற்கையில் பூத்த ஆன்மா.

2.என் வாழ்வின் சோதனைகள் தான் எனக்கு பிடித்த முதல் வண்ணம் சாதனைகள் இரண்டாம் பட்சமே.

(கதிரவனின் மறைவு ஒளியே எனக்கு முதலில் பிடிக்கும் வானவில் வண்ணம் இரண்டாவது தான்)

3.அதிகாலை நடை, நாள் முழுவதற்குமான கொடை.                தமிழ்த்துகள்

4.வெறும் வாழ்க்கை மட்டும் போதாது அதில் மகிழ்ச்சியும் விடுதலையும் அதனுடன் ஒரு பூவாய் நம் ஆசையும்.

இயல் 3

A nation's culture resides in the hearts and in the soul of its people - Mahatma Gandhi

The art of people is a true mirror to their minds - Jawaharlal Nehru

The biggest problem is the lack of love and charity - Mother Teresa

You have to dream before your dreams can come true - APJ Abdul Kalam

Winners don't do different things; they do things differently - Shiv Khera           தமிழ்த்துகள்

ஒரு நாட்டின் பண்பாடு மக்களின் இதயத்திலும் ஆன்மாவிலும் குடியிருக்க வேண்டும். – மகாத்மா காந்தி

மக்களின் கலைப்படைப்பு அவர்தான் மனதை காட்டும் கண்ணாடி. ஜவகர்லால் நேரு

இவ்வுலகில் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அன்பின் குறைபாடும் மகிழ்ச்சியின் குறைபாடுமே. – அன்னை தெரசா                               

உங்கள் கனவு நனவாகும் வரை கனவு காணுங்கள். – அப்துல் கலாம்   

பல்வேறு பொருள்களை பொருள்களை வெற்றியாளர்கள் செய்வதில்லை மாறாக ஒரு பொருளைப் பல வடிவங்களில் செய்கிறார்கள். – சிவ் கேரா

இயல் 4

Bottle xylophone:  Make music with bottles

You will need: 6 glass bottles, Wooden spoon, Water, Food colouring.

1. Fill one bottle with water, then fill each other bottle with slightly less than the bottle next to it.

2. Add some food colouring to help you to see the different levels of water.               தமிழ்த்துகள்

3. Tap the bottles with the end of a wooden spoon. Can you play your tune?

ஜலதரங்கம் என்பது குடுவைகள் மூலம் இசை அமைப்பது ஆகும். கண்ணாடிக் குடுவைகள் 6, மரக்கரண்டி ஒன்று, தண்ணீர் மற்றும் உணவு வண்ணங்கள் உங்களுக்குத் தேவை.

1. ஒரு குடுவையில் தண்ணீரை நிரப்புங்கள் மற்ற குடுவைகளில் அடுத்தடுத்த குடுவையில் இருப்பதை விட குறைவான அளவு இருக்குமாறு தண்ணீரை நிரப்புங்கள்.

2. தண்ணீர் குடுவைகளில் உணவில் சேர்க்கப்படும் வண்ணங்களை வேறுபாடு அறிவதற்காகச் சேருங்கள்.

3. குடுவைகளை மூடிவிடுங்கள். தற்போது மரக் கரண்டி வைத்து நீங்கள் இசையை இசைக்க முடியுமா?

Water music

Hitting the bottles with spoon makes them vibrate and produce a sound. The more the bottle vibrates, the higher the note will be. The more water in a bottle, the less it vibrates, so less water means higher notes.

மரக்கரண்டியை வைத்துக் கண்ணாடிக் குடுவைகள் மேல் தட்டி அதிர்வுகளை ஏற்படுத்தும்போது இசை உருவாகிறது. அதிகமாக அதிர்வு ஏற்படுத்தும் குடுவை அதிக ஒலியைத் தருகிறது. அதிக தண்ணீர் உள்ள குடுவை குறைந்த அளவே அதிர்வுறுகிறது. எனவே குறைந்த அளவு தண்ணீர் அதிக அளவு அதிர்வை – ஒலியை – ஏற்படுத்துகிறது.                     தமிழ்த்துகள்

இயல் 5

Akbar said, "How many crows are there in this city?"

Without even a moment's thought, Birbal replied "there are fifty thousand five hundred and eighty nine crows, my lord".

"How can you be so sure?" asked Akbar.

Birbal said, "Make your men count, My lord. If you find more crows it means somehow come to visit their relatives here. If you find less number of crows it means some have gone to visit their relatives elsewhere." Akbar was pleased very much by Birbal's wit.                                  தமிழ்த்துகள்

இந்நகரத்தில் எத்தனை காக்கைகள் உள்ளன என்று கேட்டார் அக்பர். சற்றும் சிந்திக்காமல் 50589 காக்கைகள் உள்ளன அரசே என்று பதில் கூறினான் பீர்பால். எப்படி இதனை உறுதியாக சொல்கிறாய்? எனக் கேட்டார் அக்பர். தங்களின் ஏவல் ஆட்களை விட்டு எண்ண சொல்லுங்கள் நான் கூறிய எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தால் இந்நகரத்திற்கு உறவினராக உள்ள காக்கைகள் இங்கே வந்திருக்கும். நான் கூறிய எண்ணிக்கையை விட குறைவாக இருந்தால் இங்கே உள்ள காக்கைகள் தங்கள் உறவினரைப் பார்ப்பதற்காகச் சென்றிருக்கும் என்றார் பீர்பால். பீர்பாலின் நகைச்சுவையான பேச்சால் அக்பர் மிகவும் மகிழ்ந்தார்.

இயல் 6

1. Strengthen the body  உடலினை உறுதி செய்

2. Love your food       ஊண்மிக விரும்பு

3. Thinking is great      உள்ளுவது உயர்வுள்ளல்

4. Walk like a bull       ஏறுபோல் நட

5. Union is strength     ஒற்றுமையே வலிமை

6. Practice what you have learnt.        கற்றது ஒழுகு

    -    Putiya Athichoti by Bharathiyar

பாரதியாரின் புதிய ஆத்திசூடி                  தமிழ்த்துகள்

இயல் 7

Conversation between two friends meeting by chance at a mall.

Aruna: Hi Vanmathi! It's great to see you after a long time.

Vanmathi: It's great seeing you. How long has it been? It must be more than 6 months. I 'm doing good. How about you?

Aruna: Fine. I have come with my parents. They are inside the grocery shop. What about you?

Vanmathi: I came with my father. He has gone to buy tickets for a 3D movie.

Aruna: Which movie?

Vanmathi: Welcome to the Jungle.

Aruna: Great! I am going to ask my parents to take me to that movie.    தமிழ்த்துகள்

வணிக வளாகத்தில் சந்தித்தபோது இரு நண்பர்களுக்கு இடையேயான உரையாடல்

அருணா- ஏய் அருணா நீண்ட காலத்திற்குப் பிறகு உன்னைப் பார்ப்பதில் மகிழ்ச்சி எனக்கு

வான்மதி-உண்மையில் இது உன்னத சந்திப்புதான் எவ்வளவு காலம் ஆகியிருக்கும் கண்டிப்பாக 6 மாத காலம் இருக்கும் நான் நன்றாக இருக்கிறேன், நீ எப்படி இருக்கிறாய்?

அருணா-நன்றாக இருக்கிறேன். என் பெற்றோருடன் வந்திருக்கிறேன். அவர்கள் உள்ளே மளிகைக்கடையில் இருக்கிறார்கள். உன்னைப் பற்றிச் சொல்

வான்மதி-நான் என் தந்தையுடன் வந்தேன், அவர் முப்பரிமாணப் படம் பார்ப்பதற்காக அனுமதிச்சீட்டு வாங்கச் சென்றிருக்கிறார்

அருணா -எந்தப் படம்?

வான்மதி-வா காட்டுக்குள் செல்வோம் (வெல்கம் டு த ஜங்கிள்)

அருணா-நான் என் பெற்றோரிடம் சொல்லி என்னை இந்தப் படத்திற்கு அழைத்து வரக் கேட்கிறேன்.

தமிழ்த்துகள்

 

இயல் 8

Once Buddha and his disciples were thirsty. They reached a lake. But it was muddy because somebody just finished watching their clothes. Buddha asked his disciples to take a little rest there by the tree. After half an hour the disciples noticed that the water was very clear. Buddha said to them, "You let the water and the mud be settled down on its own. Your mind is also like that. When it is disturbed, just let it be. Give a little time. It will settle down on its own. We can judge and take best decisions of our life when we stay calm."             தமிழ்த்துகள்

ஒரு முறை புத்தரும் அவருடைய சீடர்களும் தாகத்தில் இருந்தபோது அவர்கள் ஓர் ஏரிக்கரையை அடைந்தார்கள். அப்போதுதான் யாரோ ஒருவர் தன் ஆடைகளை அலசி இருந்ததால் ஏரி கலங்கியிருந்தது. எனவே தன் சீடர்களை அருகில் இருந்த மரத்தடியில் சிறிது ஓய்வு எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அடுத்த அரை மணி நேரத்தில் தண்ணீர் தெளிவானதைக் கண்டனர் சீடர்கள். தண்ணீரில் கலந்த களிமண் அடியில் தங்கும் வரை நீங்கள் காத்திருந்தீர்கள். அதுபோலவே தான் நம் மனமும். மனம் கலங்கும் போது அதனை தொந்தரவு செய்யாமல் சற்று ஓய்வெடுக்க விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். மீண்டும் தன் நிலைக்கு மனம் திரும்பும். நம் வாழ்வின் மிகச்சிறந்த முடிவுகளெல்லாம் அமைதியான மனது எடுத்த முடிவுகளே!

இயல் 9                             தமிழ்த்துகள்

A deer, a turtle, a crow and a rat were friends. One day the deer was caught in a hunter's trap. Friends made a plan to save him. According to the plan, the deer lay motionless as if it were dead. The crow sat on the deer and started poking. The turtle crossed the hunter's path to distract him. The hunter left the deer, assuming it dead and went after the turtle. Meanwhile, the rat chew open the net to free the deer. The crow picked up the turtle and quickly took it away from the hunter. From this Panchatantra story, we learn that the teamwork can achieve great results.

ஒரு மான் ஓர் ஆமை ஒரு காகம் ஓர் எலி இவர்கள் அனைவரும் நண்பர்கள். ஒருநாள் வேடன் விரித்த வலையில் மான் சிக்கிக் கொண்டது. நண்பர்கள் அதனைக் காப்பாற்ற ஒரு திட்டம் உருவாக்கினர். அவர்கள் திட்டப்படி மான் அசைவின்றி இறந்தது போலப் படுத்துக் கிடந்தது. காகம் அதன் மேல் அமர்ந்து கொத்திக் கொண்டிருந்தது. ஆமை தன் பங்குக்கு வேடனின் குறுக்கே நடந்து அவன் கவனத்தை ஈர்த்தது. மான் இறந்து விட்டது என்று எண்ணிய வேடன் ஆமையின் பின்னே சென்றான். இடைப்பட்ட நேரத்தில் எலி வேடனின் வலையில் வெட்டி எடுத்து மானை விடுதலை செய்தது. காகம் விரைந்து சென்று ஆமையைத் தூக்கி வேடன் கைக்கு எட்டாமல் வெளியே விட்டது. கூட்டு முயற்சியால் சிறந்த வெற்றியை அடையலாம் என்பதே இந்தப் பஞ்சதந்திரக் கதை நமக்கு உணர்த்தும் நீதியாகும்.

மு.முத்துமுருகன், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி, விருதுநகர் மாவட்டம்.

தமிழ்த்துகள்

Blog Archive