போட்டித் தேர்வு முக்கிய வினாக்கள் தமிழ்
TAMIL IMPORTANT QUESTIONS
1.பொருளறிந்து பொருத்துக :
(a) தடக்கர் – கரடி
(b) எண்கு - காட்சி
(c) வள்உகிர் - பெரிய யானை
(d) தெரிசனம் - கூர்மையான நகம்
a. 3 1 4 2
b. 1 4 3 2
c. 1 2 3 4
d. 1 3 2 4
2. முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை - இதில் மகடூஉ என்பது-------
a. மகள்
b. மகன்
c. பெண்
d. ஆண்
3. இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்
a. பொன்மனம்
b. ஆர்த்து
c. உற்றார்
d. சார்பு
4. வாரணம், பெளவம், பரவை, புணரி என்பது--------------யைக் குறிக்கும்.
a. சிங்கம்
b. கடல்
c. மாலை
d. சந்தனம்
5. யாப்பு என்றால்---- என்பது பொருள்
a. அடித்தல்
b. சிதைத்தல்
c. கட்டுதல்
d. துவைத்தல்
6. செறு என்பதன் பொருள்
a. செருக்கு
b. சேறு
c. சோறு
d. வயல்
7. கடிகை என்பதன் பொருள் யாது
a. அணிகலன்
b. கடித்தல்
c. கடுகு
d. காரம்
8. வெற்பு, சிலம்பு, பொருப்பு- ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்
a. நிலம்
b. மலை
c. காடு
d. நாடு
9. சதகம் என்பது--------பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்
a. ஐம்பது
b. நூறு
c. ஆயிரம்
d. பத்தாயிரம்
10. பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய - இத்தொடரில் உள்ள "துகிர்” என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க
a. மாணிக்கம்
b. மரகதம்
c. இரத்தினம்
d. பவளம்
11. மடங்கல்- என்னும் சொல்லின் பொருள்
a. மடக்குதல்
b. புலி
c. மடங்குதல்
d. சிங்கம்
12. சொல்லைப் பொருளோடு பொருத்துக: .
(a) வனப்பு 1.காடு
(b) அடவி 2.பக்கம்
(c) மருங்கு 3.இனிமை
(d) மதுரம் 4.அழகு
a. 2 1 4 3
b. 3 2 1 4
c. 4 1 2 3
d. 1 2 3 4
13. 2: சொல்லுக்கேற்ற பொருளறிக
a. வலிமை – திண்மை
b. நாண் - தன்னைக்குறிப்பது
c. கான் – பார்
d. துணி – துன்பம்
14. என்காற் சிலம்பு மணியுடை அரியே” இவ்வடிகளில் ‘மணி என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க
a. பவளம்
b. முத்து
c. மாணிக்கம்
d. மரகதம்
15. அங்காப்பு என்பதன் பொருள்
a. சலிப்படைதல்
b. வாயைத் திறத்தல்
c. அலட்டிக் கொள்ளுதல்
d. வளைகாப்பு
16. சரியான பொருள் தருக ----- இந்து
a. நிலவு
b. துன்பம்
c. படகு
d. தலைவன்
17. வித்தொடு சென்ற வட்டி” என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?
a. பனையோலைப் பெட்டி
b. வயல்
c. வட்ட வடிவு
d. எல்லை
18. கண்ணகி- எனும் சொல்லின் பொருள்
a. கடும் சொற்களைப் பேசுபவள்
b. கண் தானம் செய்தவள்
c. கண்களால் நகுபவள்
d. கண் தானம் பெற்றவள்
19. : பொருத்துக - சரியான விடையைத் தேர்ந்தெடு
(a) விசும்பு 1. தந்தம்
(b) மருப்பு 2. வானம்
(c) கனல் 3.யானை
(d) களிறு 4. நெருப்பு
a. 2 1 4 3
b. 3 2 1 4
c. 1 3 4 2
d. 4 3 2 1
20. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுண்டாகச் செய்வான் வினை - இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது?
a. படைக் கவசம்
b. படைக் கருவிகள்
c. கைப்பொருள்
d. வலிமையான ஆயுதம்