வியங்கோள் வினைமுற்று
வியங்கோள்
வியம் என்பதற்கு ஏவல் அல்லது கட்டளை என்று பொருள். வியத்தை குறிப்பதனால் வியங்கோள் எனப்படும்
வியங்கோள் பொருள்கள்
பெரும்பாலும் வாழ்த்தல், வைதல், வேண்டல், விதித்தல் ஆகிய நான்கு பொருள்களில் வியங்கோள் வினைமுற்று பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இது இருதிணை, ஐம்பால், மூவிடங்களையும் குறிப்பதாக அமைகின்றது.
எ.கா:
வாழ்த்தல் – வெல்க, வாழ்க
வைதல் – வீழ்க, ஒழிக
விதித்தல் – உண்க, அமர்க
வேண்டல் – அருள்க, ஆசீர்வதிக்க
இவ்வாறு மேற்க்கண்ட சொற்கள் வாழ்த்தல், வைதல், வேண்டல், விதித்தல் பொருளை உணர்த்தி வந்துள்ளன.
வியங்கோள் வினைமுற்று விகுதிகள்
க, ய. இய, இயர் என்பன போன்ற விகுதிகளை பெற்று வரும்
வாழ்க
வாழிய
வாழியர்
எதிர்மறை வியங்கோள் வினைமுற்று
வாழ்த்தல், வைதல், வேண்டல், விதித்தல் போன்றவற்றை உணர்த்தி எதிர்மறைப் பொருளில் வரும் சொற்கள் எதிர்மறை வியங்கோள் வினைமுற்று ஆகும்.
வாரற்க
கூறற்க
செல்லற்க
சொல்லற்க